Wednesday, June 13, 2007

ஒரே Blogger Account-ன் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் author name மாற்றலாம்!

எல்லோரும் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் ஜாவா ஸ்கிரிப்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என ஆவல் இருந்து வந்தது. அதற்கேற்றார் போல போன வாரம் நான் ஒரு பிரச்சினையை எதிர் கொண்டேன். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் சரி செய்தேன். தீபா, ஜெகத் போன்ற ப்ளாக்கர் விஞ்ஞானிகளின் ; -) script-களை ஒப்பிடும்போது என்னுடையது மிகவும் சிறியது தான்.

எனது கூகுள் account-ன் கீழ் இரண்டு Blogs உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு வலைப்பதிவு தளம்.

ஆனால் நம்மால் ஒரு account-க்கு ஒரே ஒரு profile மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அந்த profile-ல் நாம் கொடுக்கும் display name-தான் நமது பதிவுகளில் author name-ஆக வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் ஒரு வலைப்பதிவில் பொன்வண்டு என்ற பெயரில் எழுதுகிறேன். எனது மற்றொரு வலைப்பதிவில் வேறொரு பெயரில் எழுத நினைத்தாலும் முடியவில்லை. ஏனென்றால் ஒரு account-ன் கீழ் இருக்கும் எல்லா வலைப்பதிவுகளுக்கும் ஒரே profile-ல் இருந்தே display name-ஐ எடுத்துக் கொள்கிறது. எனது ப்ளாக்கர் profile-ல் display name பொன்வண்டு என்று உள்ளது.

அதனால் என்னுடைய இரண்டாவது தளத்தில் நான் வேறொரு பெயரில் எழுத நினைத்தேன். எப்படி என்று யோசித்தபோது கை கொடுத்தது ஜாவா ஸ்கிரிப்ட்.

ஒரு வலைப்பதிவு தளத்தில் 2 இடங்களில் author name தெரியும்.

1. பதிவின் கீழ், எழுதியவர் பெயர் தெரியுமிடத்தில்.
2. பின்னூட்டங்களில்

எனவே எந்த வலைப்பதிவு தளத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அங்கு அந்த tag-களைக் கண்டுபிடித்து template-ல் மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகிவிடும்.

செய்ய வேண்டியது :

1. Edit HTML போய் Expand widgets தேர்வு செய்து கொள்ளவும்.

2. கீழே இருக்கும் script-ல் profile_name-ல் உங்கள் profile-ல் உள்ள name-ஐக் கொடுங்கள். new_name-ல் உங்கள் விருப்பப் பெயரைக் கொடுங்கள்.
வழக்கம் போல் script-ஐ </head> tag-க்கு மேலே copy-paste செய்யவும்.

<script type='text/javascript'>
function replace_profile_name(str)
{
var profile_name='பொன்வண்டு';
var new_name='கழுதை';
if (str == profile_name)
str = new_name;
return str;
}
</script>

3. பின்னர் <data:post.author/> tag-ஐக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:post.author/>'))</script>

4. பின்னர் <data:comment.author/> tag-களைக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:comment.author/>'))</script>

5. Template-ஐ Save மாடி.
என்னுடைய இன்னொரு வலைத்தளம் - மாற்றம் செய்வதற்கு முன்மாற்றம் செய்த பின்இது ஒரு வழி. இப்படி script உபயோகிக்காமல் வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா? அதாவது Blogger-லேயே ஏதாவது option உள்ளதா?

18 comments:

வடுவூர் குமார் said...

நல்லா இருக்கு உங்கள் யோஜனை.

சதுர் said...

மிக்க நன்றி.

பங்காளி... said...

பங்காளியா இருந்த நான் உங்க புண்ணியத்துல 'குப்பைகளா' மாறீட்டேன்...ரொம்ம்ப டாங்ஸ் பொன்வண்டு@கழுதை....ஹி..ஹி...

Anonymous said...

பங்காளி, ஒரு உதாரணத்துக்காகத் தான் கழுதைன்னு போட்டேன். உண்மையிலேயே நான் கழுதை இல்லை. ஹி ஹி.

வினையூக்கி said...

நன்றி பொன்வண்டு

Anonymous said...

அப்படியே புதிய பிளாக்கரில் கமென்டஸ் (மறுமொழி) எடிட் பன்னுவதற்கு ஏதாவது வழி இருக்குதான்னு சொல்லு தல!!

உண்மைத்தமிழன் said...

//முகவைத்தமிழன் said...
அப்படியே புதிய பிளாக்கரில் கமென்டஸ் (மறுமொழி) எடிட் பன்னுவதற்கு ஏதாவது வழி இருக்குதான்னு சொல்லு தல!!//

இந்தக் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.. அருமையாக இருக்கின்ற கமெண்ட்டுகளில் ஒரே ஒரு சொல்லால் அதைப் போட முடியாத நிலைமை ஏற்படுகிறது. இதற்கு ஒரு தீர்வைச் சொன்னால் நன்றாக இருக்கும்..

ப்ரியன் said...

நன்றிங்க...

Deepa said...

///இது ஒரு வழி. இப்படி script உபயோகிக்காமல் வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா? அதாவது Blogger-லேயே ஏதாவது option உள்ளதா?/////

கண்டிப்பா உண்டு... பல பிளாகில் பல profile எப்படி போடுவதுன்னு இங்கே சொல்லியிருக்கேன் ( in english)..
http://beta-templatetesting.blogspot.com/2007/06/different-profiles-for-different-blogs.html

நீங்கள் கேட்ட கேள்விக்கும் அதில் பதில் சொல்லுகிறேன்.. பரவாயில்லையா... இல்லை இப்போவே.. இங்கேயே சொல்லணுமா? ? ?

விரைவில் Tamilblogging.blogspot.com லும் இதை குறித்து பதிவு போடுகிறேன்

Anonymous said...

மிக்க நன்றி தீபா.

tamilblogging.blogspot.com-லும் சொல்லுங்கள். எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

Anonymous said...

முகவைத்தமிழன் & உண்மைத்தமிழன் ! உங்க கேள்விகளுக்கு தீபா இங்கே பதில் சொல்லியிருக்காங்க.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல நிரல். நீங்கள் அனுமதி தந்தால் இந்த இடுகையை பதிவர் உதவிப் பக்கத்தில் மீள்பதிவாகப் போடலாம். நன்றி

Anonymous said...

ரவிசங்கர், தாராளமாக பதிவர் உதவிப்பக்கத்தில் இட்டுக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.

- யெஸ்.பாலபாரதி said...

பொன்வண்டே, எல்லாம் சரி தான். ஆனால்... இப்படி பெயர் மாற்றியவரின் ப்ரோபல் பார்க்க முடியாத படிக்கு ஆகி விடும் நிலை இருக்கு.

ப்ரோபேல் வெளியேஎ தெரிய வில்லை எனில் அந்த பதிவரின் மேல் இருக்கும் நம்பகத்தன்மை காணாமல் போய் விடும் அபாயம் இருக்கிறது.

அதே போல இப்படி பெயர் மாற்றிக்கொண்ட பின், அந்த பதிவர் இன்னொருவருக்கு பின்னூட்டம் போடும் போது என்ன பெயர் தெரியும்?!!

இப்படி நிறைய சந்தேக பாக்கி இருக்கு தோழரே! :(

Anonymous said...

வணக்கம் பாலா,

// இப்படி பெயர் மாற்றியவரின் ப்ரோபல் பார்க்க முடியாத படிக்கு ஆகி விடும் நிலை இருக்கு. //

பின்னூட்டங்களில் மட்டுமே நமது ப்ரொபைல் பார்ப்பதற்கான link- இருக்கும்.
இந்த script-ல் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. எனவே கிளிக் செய்தால் நமது actual profile தெரியும்.

// அதே போல இப்படி பெயர் மாற்றிக்கொண்ட பின், அந்த பதிவர் இன்னொருவருக்கு பின்னூட்டம் போடும் போது என்ன பெயர் தெரியும்?!! //

அனானியாக இல்லாமல் பின்னூட்டம் போட்டால் நமது actual profile name தான் தெரியும்.

- யெஸ்.பாலபாரதி said...

//பின்னூட்டங்களில் மட்டுமே நமது ப்ரொபைல் பார்ப்பதற்கான link- இருக்கும்.
இந்த script-ல் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. எனவே கிளிக் செய்தால் நமது actual profile தெரியும்.
//

அப்படியா? ஆனால்..

//பங்காளியா இருந்த நான் உங்க புண்ணியத்துல 'குப்பைகளா' மாறீட்டேன்...ரொம்ம்ப டாங்ஸ் பொன்வண்டு@கழுதை....ஹி..ஹி...//
என்று பங்காளி சொல்லி இருக்கிறார். ஆனால்.. அவரோட ப்ரோபேல் தெரியவில்லை. மேலும் இப்படி பெயர் மாற்றிக்கொண்டதாக கூறும் பொன்வண்டு அவர்களும் அதர்-அப்சன் வழியாகத்தான் பின்னூட்டமிட்டு வருகிறீர்கள் என்பதால் குழப்பம் மிச்சமிருக்கு...!

:((((

Yogi said...

நான் எனது ப்ரொபைலுக்கு public view கொடுக்கவில்லை(என்னத்துக்கு வம்பு?). ஆகவே எப்போதும் other option உபயோகிக்கிறேன். நான் இந்த script-ஐ எனது மற்றொரு பதிவில் மட்டுமே உபயோகிக்கிறேன். எனவே நான் அங்கு எனது google account கொடுத்துப் பின்னூட்டமிட்டால் ப்ரொபைல்-லுக்கான link தெரிகிறது.

இங்கே கிளிக்கவும்.

மேலே உள்ள படத்தில் 'கழுதை' highlight(mouse pointer-ஐ அங்கு வைத்ததால்) ஆவதும், கீழே வட்டமிட்ட இடத்தில் எனது ப்ரொபலுக்கான link தெரிவதையும் காணலாம்.

இந்தப் பின்னூட்டத்தை எனது google account மூலம் வெளியிடுகிறேன்.

எனது மற்றொரு பதிவில் சொந்த,சோகக் கதைகளை நிறைய எழுதியிருப்பதால் அதனை வெளிப்படுத்த முடியாமல் உள்ளேன். மன்னிக்கவும்.

பங்காளி அவர் பதிவில் அவரே பின்னூட்டம் போட்டுக் கொள்ள மாட்டார் போல... அதனால் தான் அவர் பதிவில் அவர் பெயரில் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. :) .

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அனுமதி தந்ததற்கு நன்றி. இங்கே பதிப்பித்து இருக்கிறேன் -

http://tamilblogging.blogspot.com/2007/06/blog-post_14.html