Saturday, February 18, 2012
படம் பார்க்கும் ஆசையைக் காலி செய்யும் ஆன்லைன் விமர்சனங்கள்
மெரினா படம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என எண்ணியிருந்தேன். எப்பவும் விமர்சனங்களை மேலோட்டமாகப் படிக்காமல் டக்கென கடைசி வரிக்குச் சென்று பஞ்ச் லைனைப் படித்துவிடுவது வழக்கம்.
அப்படித்தான் மெரினா படம் வெளியான அன்று காலையில் இணையத்தில் யாராவது கண்டிப்பாக விமர்சனம் எழுதியிருப்பார்கள் என்று தேடிப்பார்த்து ஒரு சைட்டின் உள்ளே நுழைந்தேன். வழக்கத்திற்கு மாறாக மெரினா படத்தின் மேலிருந்த எதிர்பார்ப்பால் கொஞ்சம் உள்ளே பாராட்டி எழுதியிருப்பார்கள் என எண்ணி விமர்சனத்தைப் படிக்க ஆரம்பித்தால், டைட்டில் முதல் என்டு கார்டு வரை ஒரு சீன் விடாமல் எழுதி விமர்சனம் என்ற பெயரில் ஒரு முழுப்படத்தையே தந்து என் எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் காலி செய்துவிட்டார்கள்.
ஏங்க இப்படி? இணையத்தில் வெளிவரும் இவற்றை விமர்சனமாக எடுத்துக் கொள்வதா அல்லது முழுப்படத்தின் எழுத்து வடிவமாகக் கொள்வதா?
இதற்கு முன் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் முழுக்கதையையும் ஒரு பதிவர் ஒரு வரியில் அதையும் முதல் வரியில் எழுதியிருந்தார். (நான் இந்திப் படம் பார்க்கவில்லை) .
'சாமானியன் ஒருவன் தீவிரவாதிபோல் நடித்து தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்கச் செய்து அவர்களைக் கொல்கிறான்'
இதைப் படித்ததற்கப்புறம் நான் திரையில் பார்த்தபோது எனக்கு கொஞ்சமும் படத்தில் விருப்பமே இல்லை.
அதனால் இப்பவும் சொல்றேன். இனிமேல் விமர்சனமா அல்லது முழுப்படத்தின் கதையா என்பதை தயவு செய்து தலைப்பிலாவது தெரிவியுங்கள். உங்கள் சைட் பக்கம் வராமல் தலை தெறிக்க ஓடிவிடுவோம்.
ரொம்ம்ம்ம்ம்ப நன்றிங்க.
Subscribe to:
Posts (Atom)