Wednesday, May 07, 2008

குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!


'குவெஸ்ட் நெட் (Quest Net முன்பு Gold Quest)' தங்கக் காசு மல்ட்டி மார்கெட்டிங் ஏமாற்று வேலை அம்பலமாகிவிட்டது. இப்போது தான் எல்லோரும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை கண்டிப்பாக எல்லோருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருக்கிறது.

இதில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பெரும்பாலோனோர் கணினி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். ஆனால் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக புகார் தெரிவிப்பது கடினம் தான். ஏனென்றால் இந்தப் பணம் இவர்களுக்கு ஒரு மாதம் அல்லது அரைமாதச் சம்பளம் தான்.

சரி. இது என்ன முறைகேடு என்பதைப் பார்க்கலாம். குவெஸ்ட் நெட் என்பது ஒரு பன்னாட்டு மல்ட்டி மார்க்கெட்டிங் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் உள்ளது. இவர்களது தங்கக்காசுத் திட்டத்தில் சேர முதலில் 33000 ரூபாய் கட்ட வேண்டும். (முதலில் குறைவாக இருந்திருக்கலாம். அல்லது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலித்திருக்கலாம். பெங்களூரில் வசூலித்த தொகை 33,000). அதற்குப் பதில் அவர்கள் ஒரு தங்கக்காசு அல்லது சில வெள்ளிக்காசுகள் கொடுப்பார்கள். அந்தக் காசு உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அந்தக் காசின் உருவம்,வடிவத்தை இவர்கள் பதிவு செய்து வைத்திருப்பார்கள். எனவே இந்தக் காசை வெளியில் யாரும் போலியாகத் தயாரிக்க முடியாது(!?).

இந்தக் காசுகளை நாம் இணைய தளத்தில் விற்கலாம். வாங்குவதற்கு வெளிநாட்டு மக்கள் அலைமோதுவார்களாம். ஏனென்றால் அந்தக் காசு வேறு எங்கும் கிடைக்காதாம். இப்படியெல்லாம் முதலில் அவர்களது அறிமுகக் கூட்டத்தில் சொல்வார்கள். அதன் பின்னர் நாம் நமக்குக் கீழே 3 பேரை இந்தத் திட்டத்தில் சேர்த்து விடவேண்டும். அப்படி சேர்த்து விட்டால் அதற்கான கமிசன் தொகை நமக்குக் கிடைக்கும். அது போக அவர்களுக்குக் கீழே ஆட்கள் சேரச்சேர அதற்கான கமிசன் தொகையும் நமக்குக் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

அந்தக் காசை இணைய வர்த்தகத்தின் மூலம் மட்டுமே விற்க முடியும். அதன் எடை வெறும் 6கிராம்தான். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் 33,000 கட்டிவிட்டு நம்மால் மூன்று பேரை சேர்த்துவிட முடியாவிட்டால் வெறும் 6கிராம் காசோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். மிச்சப்பணம் அவ்வளவுதான். கேட்பதற்குச் சுலபமான வழியாகத் தெரியும், மூன்று பேரைச் சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

இதன் அறிமுகக் கூட்டமே பயங்கர பரபரப்புடன் நடக்கும். முதலில் நவநாகரீகமான இளைஞர்கள், இளைஞிகள் மேடைக்கு வந்து "நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், இந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், போன வருசம் இந்தத் திட்டத்தில் சேர்ந்தேன், இப்போ வாராவாரம் எனக்கு 30,000 கமிசன் கிடைக்கிறது, நான் கூட முதலில் யோசித்தேன் இதில் சேரலாமா என்று ஆனால் இன்று நான் கோடீஸ்வரி, நீங்கள் ஆக எப்போ பணக்காரர் ஆகப் போகிறீர்கள்?, இப்போ கூட நான் விமானத்தில் தான் இங்கு வந்தேன். போனவாரம் நான் ஹோண்டா சிட்டி கார் வாங்கினேன் நீங்களும் வாங்க வேண்டாமா? கையில் வெறுமனே காசை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றெல்லாம் விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள்.

இதில் வெளிப்படையாகத் தெரியும் குளறுபடிகள் என்னென்ன?
1. ஒரு சாதாரண தங்கக்காசினை வாங்குவதற்கு இணையத்தில் எப்படி மக்கள் இவ்வாறு போட்டி போடுவார்கள்?

2. நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிட்டால் நமக்கும் கமிசன் கிடைக்கும் என்பதை எப்படி நம்புவது? நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிடுவது நமக்கு எப்படித் தெரியும்?

3. இந்தத் திட்டத்தில் யாரும் நேரடியாகச் சேரமுடியாது. யாராவது உறுப்பினராக இருந்தால் அவர் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் நிறுவனத்துக்கும் சேருபவருக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது.

இப்போது இத்திட்டத்தில் சேர்ந்த எல்லோருமே யாரைக் கேட்பதென்று தெரியாமல் தம்மைச் சேர்த்துவிட்ட நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காசின் தற்போதைய மதிப்பு EBayல் 80,000 ரூபாயாம். (யாராவது உறுதிப்படுத்துங்க). எனது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் இதில் 6 பேர் ஏமாந்திருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டுமே தங்கக்காசு அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் வரவில்லை. அனைவரும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இந்த நிறுவனம் மூடப்பட்ட செய்தியே பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் பணம் மட்டுமே போயிருக்கிறது.

இன்னமும் 'இந்த நிறுவனம் நல்ல நிறுவனம், இதைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள், எனக்கு போனவாரம் கூட செக் வந்தது காட்டட்டுமா?' என்றெல்லாம் சிலர் இணையத்தில் சவால் விடுகிறார்கள். அவர்களுக்குச் சில தகவல்கள்

1. காவல்துறையிடம் நிறுவனத்தைப் பற்றிப் புகார் கொடுத்ததும் அதன் சென்னை கிளை தலைமை நிர்வாகி(கூட்டத்தலைவன்?) ஹாங்காங் சென்று மாயமானது ஏன்? சட்டப்படி பிரச்சினையை எதிர் கொண்டிருக்கலாமே? இந்நிறுவனம் 2003லேயே ஒருமுறை மோசடிக்காக மூடப்பட்டு சீல்வைக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

2. இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸ், நேபாளம், இலங்கையில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாம். இந்நிறுவனத்தின் உரிமையாளரை சர்வதேச காவல்துறை தேடி வருகிறது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிறுவனம் திரும்பவும் ஜெகஜ்ஜோதியாகத் திரும்பவும் கடை(வலை?) விரிக்கிறதென்றால் நம் சட்டம் அவ்வளவு எளிதில் ஏமாற்றப்படக் கூடியதா? :(

தொடரும் இது போன்ற மோசடிகளுக்கு யார் காரணம்?

சட்டம் சரியில்லை என்பதெல்லாம் அப்புறம். சொல்வதற்கே சங்கடமாக உள்ளது. மன்னிக்கவும். பணம் போட்டு ஏமாந்த மக்களை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை. விரைவில் பணம் பார்க்க வேண்டும் என்ற மக்களின் பேராசையே காரணம். யாரும் ஒரே நாளில் பணக்காரனாக முடியாது. கூடுதல் வருமானம் வேண்டுமென்றால் தற்போது எத்தனையோ வழிகள் உள்ளன. நல்ல நல்ல லாபம் தரும் மியூட்சுவல் பண்ட்கள் எவ்வளவோ உள்ளன. இன்னும் அதிகம் வேண்டுமானால் பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளன. அதன் மூலம் திறமையுடன் செயல்பட்டு நல்ல வருமானம் பார்க்கலாம்.

மென்பொருள்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அப்பாவி, படிக்காத நடுத்தர வர்க்க மக்கள்தான் சீட்டுக்கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாற்றப்பட்டார்கள் என்றால் படித்தவர்களும் இப்படி இருக்க வேண்டுமா? பெரும்பாலானோர்க்கு அரை மாதச் சம்பளம்தான், அதற்காக தெருவில் ஏமாற்றிப் பிழைப்பவனிடம் காசை அள்ளி வீச வேண்டுமா? :(

25 comments:

ஜெகதீசன் said...

கொடுமை.....
:(

ஆறு மாதத்திற்கு முன், என் அண்ணனின் ஃப்ரண்ட்டின் ஃபிரண்டோட ப்ரண்டின் தம்பி(?) (யாரோ முன்னாள் எம்.எல்.ஏ வின் மகனாம்....) அப்படின்னு சொல்லிட்டு ஒருத்தர் எனக்கு இங்க தொலைபேசி, ஒரு ஹோட்டலுக்கு வரச்சொன்னார்.. நானும் என் அண்ணனும் அங்கே போனோம்..இதே போல இன்னும் சிலரும் இருந்தனர்...அவரும் இதே கோல்ட் க்வெஸ்ட் நிறுவனம் பற்றி சொல்லி சேரச் சொன்னார்... ஒரு 2 மணி நேரம் பேசினார்... நல்ல வேளை நாங்கள் தப்பித்தோம்... ஆனால் பாவம் உடன் இருந்த ஒருவர் மாட்டிக்கொண்டார்...

ஜெகதீசன் said...

//
இதன் அறிமுகக் கூட்டமே பயங்கர பரபரப்புடன் நடக்கும். முதலில் நவநாகரீகமான இளைஞர்கள், இளைஞிகள் மேடைக்கு வந்து "நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், இந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், போன வருசம் இந்தத் திட்டத்தில் சேர்ந்தேன், இப்போ வாராவாரம் எனக்கு 30,000 கமிசன் கிடைக்கிறது, நான் கூட முதலில் யோசித்தேன் இதில் சேரலாமா என்று ஆனால் இன்று நான் கோடீஸ்வரி,
..........
.........
.........
விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள்.
//

இது மட்டுமா சொல்லுவாங்க...

இந்த நிறுவனம் அமெரிக்கால 5 வதுமிகப் பெரிய நிறுவனம். போன வருடம் 50 வது இடத்துல இருந்தது வேகமா வளர்ந்து இப்ப 5 வது இடத்துக்கு வந்துருச்சி.. இன்னும் கொஞ்ச வருசத்துல முதல் இடம் வந்துரும்ன்னெல்லாம் ஒரு பவர்பாயிண்ட் ஸ்லைட் ஷோ வச்சிக்கிட்டு ப்ரூடா விடுவாங்களே......

இன்னும் எத்தனை பேர் தான் இப்படி ஏமாத்தப் போறாங்களோ... நம்ம ஆளுங்களும் எத்தனை நாளைக்கு ஏமாந்துக்கிட்டே இருக்கப் போறாங்களோ தெரியலை.... :(

TBCD said...

பொன்வண்டு,

விளக்கமாக இதைப் பற்றிச் சொல்லி, என் போன்று, புரியாதவர்களுக்கு புரிய வைத்தமைக்கு நன்றி.

என்னைப் பொறுத்த மட்டில் இதைத் தான் நான் அடிக்கடிச் சொல்வேன்.

"Nothing comes Free" (அ) "There's no such thing as a free lunch" ..யாரவது இலவசம், விலைக் குறைவு என்றுச் சொன்னால், உங்களை வேறு விதமாக சுரண்டப் போகிறார் என்று சுதாரிக்க வேண்டும்.

விலைக்குறைப்பு என்றால் ஏன் விலைக்குறைப்பு...அவனுக்கு என்ன இதில் லாபம்..ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி கேட்டால் நாம் தப்பிக்கலாம்..

*****

உங்க சமீபத்திய இரு இடுகைகளும் அருமை.

வாழ்த்துக்கள்..தொடரவும்...

நிஜமா நல்லவன் said...

ஒருவர் இருவர் அல்ல என்னுடன் பணிபுரியும் சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து இன்று பணத்தினை இழந்து நிற்கிறார்கள். என்னை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் சேரவில்லை.

Unknown said...

HI ,
Increase your revenue 100% of your blog bye converting into free website.
Convert your blog "yourname.blogspot.com" to www.yourname.com completely free.
Become proud owner of the (.com) own site .
we provide you free website+ free web hosting + list of your choice of
scripts like(blog scripts,CMS scripts, forums scripts and may scripts)
all the above services are absolutely free.
You can also start earning money from your blog by referring your friends.
Please visit www.hyperwebenable.com for more info.
regards
www.hyperwebenable.com

G.Ragavan said...

இந்த மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங்கே ஒரு மன்னாரு அன் கோ வேலைன்னு புரியலையே மக்களுக்கு.

நீங்க சொன்ன மாதிரி.... பேராசைதான் அடிப்படைக் காரணம். அதை மறக்கவே முடியாது.

இப்பிடித்தான் முந்தி கோனிபயோன்னு ஒரு மருத்துவப் பொருள் கொண்ட உள்ளாடை, சாக்ஸ்..அது இதுன்னு ஒரு நிறுவனம் வந்துச்சு. இப்ப அதக் காணவே காணோம்.

பெரும்பாலும் எல்லாம் ஹாங்காங்...சைனா பக்கத்துக்குக் கம்பெனிகளா இருக்கும். ஏன்னு தெரியலையே.

சரவணகுமரன் said...

கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்குறது எதுவும் நிலையா இருக்காதுன்னு எப்பவும் நினைச்சிகிட்டா இந்த மாதிரி குருப் கிட்ட இருந்து தப்பிக்கலாம்.

Anonymous said...

இந்நிறுவன அதிபர் புஸ்பம் அப்பள நாயுடு மற்றும் குழுவினர் காவல் துறையால் கைதுசெய்யப்படுவது இது இரண்டாம் முறை என் நினைக்கிறேன். கடந்த ஜெ ஆட்சியிலும் ஒரு முறை இவ்வாறு நிகழ்ந்தது. அவர்களின் வழக்கறிஞராக நளினி சிதம்பரம் என்பவர் கடந்த முறை ஆஜராகி, அதன் பின்னர்தான்தின்று இந்த அளவிற்கு வந்து நிற்கிறது.

பெரோஸ் கான் என்பவர் குடும்பம் தான் இதன் பின்னணியில் இருந்து செயற்படுகிறது. இவருடைய ஒரு மாத வரவு மட்டுமே 6000000 ரூபாவிற்கு மேல்.

Anonymous said...

அமெரிகாவில் இது போன்ற ‘மல்டி லெவல் மார்கெடிங்' குறிப்பாக இந்தியர்களை குறி வைத்து நடத்தப் படுகிறது. என் நண்பர்கள் பலர் இவைகளில் சேர்ந்து பின்பு நொந்து நூலாகி இருக்கின்றனர்.

Iyappan Krishnan said...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக் கொண்டுதான் இருப்பார்கள்


ஹ்ம்ம்ம் இதுபோல எத்தனையோ சினிமாப் பட டயலாக்ஸு பாட்டு எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்குது.



சரி நாம இப்படி ஒண்ணு ஆரம்பிச்சா என்ன?


ஆரம்பத்துல 50 பைசா தான் கட்டணும்.


அடுத்த நாள் முந்தைய நாளோட இரட்டைக் கட்டணம். அதாவது 1 ரூபா. அதுக்கடுத்த நாளு ரெண்டு ரூபா..

இப்படியா 9 மாசம் கட்டினா ஒரு பல்ஸர் வண்டி இலவசம்.

Thamiz Priyan said...

என்ன சொல்வதென்றே சொல்லத் தெரியவில்லை. இவ்வளவு மோசடிகள் வெளிப்படையாக நிகழ்ந்த பிறகும் மக்கள் ஏமாறத் தயாராக இருக்கிறார் எனபதை வேதனையையே தருகின்றது... :(

சிறில் அலெக்ஸ் said...

மிக அருமையான பதிவு. தகவல்கலுக்கு நன்றி.

Anonymous said...

//இதன் அறிமுகக் கூட்டமே பயங்கர பரபரப்புடன் நடக்கும். முதலில் நவநாகரீகமான இளைஞர்கள், இளைஞிகள் மேடைக்கு வந்து "நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், இந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், போன வருசம் இந்தத் திட்டத்தில் சேர்ந்தேன், இப்போ வாராவாரம் எனக்கு 30,000 கமிசன் கிடைக்கிறது, நான் கூட முதலில் யோசித்தேன் இதில் சேரலாமா என்று ஆனால் இன்று நான் கோடீஸ்வரி,
..........
.........
.........
விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள்.//

சொல்லி வைத்தாற்ப் இதேபோல ஆம்கோர் எனும் கம்பனி மீட்டிங் போன மாதம் கோவையில் நடந்தது.

Anonymous said...

சூப்பர் பதிவு, ஆனால் உபயோகம் இல்லை

இன்னும் 2 வருஷம் கழிச்சு இவனுங்க வேற பேர்ல வருவானுங்க அப்பவும் நம்ம மக்கள் க்யூல நின்னு காசு கட்டுவானுங்க ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

சரவணன்

மங்களூர் சிவா said...

/
3. இந்தத் திட்டத்தில் யாரும் நேரடியாகச் சேரமுடியாது. யாராவது உறுப்பினராக இருந்தால் அவர் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் நிறுவனத்துக்கும் சேருபவருக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது.

இப்போது இத்திட்டத்தில் சேர்ந்த எல்லோருமே யாரைக் கேட்பதென்று தெரியாமல் தம்மைச் சேர்த்துவிட்ட நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
/

சபாஷ்

:)))))

மங்களூர் சிவா said...

/
விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள்.
/

அருமையான உதாரணம்

மங்களூர் சிவா said...

/
சரவணன் said...

சூப்பர் பதிவு, ஆனால் உபயோகம் இல்லை

இன்னும் 2 வருஷம் கழிச்சு இவனுங்க வேற பேர்ல வருவானுங்க அப்பவும் நம்ம மக்கள் க்யூல நின்னு காசு கட்டுவானுங்க ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

சரவணன்
/

ரிப்பீட்டேேஏஏஏஏஏய்

மங்களூர் சிவா said...

எதுக்கும் இவனுங்க கிட்டயும் கொஞ்சம் உஷாரா இருங்கப்பு.

தமிழ்நாட்டுலதான் தீவிரமா செஞ்சிட்டிருக்காங்க

http://www.tlcnet.co.in/plan.asp

M.Rishan Shareef said...

நல்லவேளை,இது இலங்கையில் காலடியெடுத்து வைத்த உடனேயே இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் பல உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்நிறுவனத்தின் மோசடிகளை ஆராய்ந்து பத்திரிகைகளில் அம்பலப்படுத்தி விட்டார்.
ஆகவே இலங்கையில் இது தடைசெய்யப்பட்டது.

இந்தியாவில் பல பத்திரிகையாளர்கள் உள்ளனர்.ஒருவராவது இதுபற்றிய விழிப்புணர்வை முன்பே ஏற்படுத்தியிருக்கலாம்.

Yogi said...

ஜெகதீசன், TBCD, நி.ந, ஜிரா, சரவணகுமரன், ஜீவ்ஸ், தமிழ்பிரியன், சிறில் அலெக்ஸ், சரவணன், சிவா, ரிஷான் ஷெரிப் மற்றும் அனானிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)

navya என்ற பெயரில் வந்த 'மார்க்கெட்டிங் மாரியம்மா'வுக்கு,
இந்த மாதிரி பதிவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் :)

Anonymous said...

One of my friends left his regular time job in order to join in this fraud scheme. He has tried to make money in the past 2+ years and still he cldnt earn anything.

Anonymous said...

What is the difference between Gold Quest and AMWAY?

Anonymous said...

one of my dear friend also left his job bfre 2 years & continued this as his fulltime job....he also asked me to join this networking kinda stuff... i thot its goin gud....but after reading ur post only...i came to know this is fake .......

நானானி said...

தும்பி இனத்தை சார்ந்த உயர்ந்த ஜாதி புது வண்டே!!
உங்களை சிவாஜி வாயிலே ஜிலேபி
யைப் போட அன்போடு அழைக்கிறேன். பூவுக்குப் பூ தாவும் வண்டே தாவித்தாவி சங்கிலியை கோத்திடு.

Anonymous said...

Disclaimer: Sorry for my foul language. But, I'm soooo irritated reading this article. Hence my reaction.

If any one approach you with this type nonsense, first thing you tell them is "f*ck you!!" and/or "show your middle finger".

Let me explain.

// அதற்குப் பதில் அவர்கள் ஒரு தங்கக்காசு அல்லது சில வெள்ளிக்காசுகள் கொடுப்பார்கள். அந்தக் காசு உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அந்தக் காசின் உருவம்,வடிவத்தை இவர்கள் பதிவு செய்து வைத்திருப்பார்கள். எனவே இந்தக் காசை வெளியில் யாரும் போலியாகத் தயாரிக்க முடியாது(!?).

//

What is so special about that coin?
Does it having any heritage, antique value?

//இந்தக் காசுகளை நாம் இணைய தளத்தில் விற்கலாம். வாங்குவதற்கு வெளிநாட்டு மக்கள் அலைமோதுவார்களாம். ஏனென்றால் அந்தக் காசு வேறு எங்கும் கிடைக்காதாம். இப்படியெல்லாம் முதலில் அவர்களது அறிமுகக் கூட்டத்தில் சொல்வார்கள்.//

If any one that buys this coin sell the same in internet, why there would be so much demand for this coin? If I could buy this in internet, why should I buy this with them?

//அந்தக் காசை இணைய வர்த்தகத்தின் மூலம் மட்டுமே விற்க முடியும்.//

Why not in a shop? What prevents them?

// அதன் எடை வெறும் 6கிராம்தான்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் 33,000 கட்டிவிட்டு நம்மால் மூன்று பேரை சேர்த்துவிட முடியாவிட்டால் வெறும் 6கிராம் காசோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். //

Look at this link.
http://monex.com/liveprices

Adding Rs 2600 more to Rs 33,000, I can buy one ounce pure 24 carat gold (Canadian Maple Leaf - guaranteed by Govt of Canada) for USD 890 (@ Rs 40 per USD, 35600 = 890 * 40). And One ounce roughly equals to 32 grams.

FACTS: The worth of 6 gram 24 carat gold is Rs 6450.

Oh... by the way, is it 24 carat or 22 carat or 14 carat gold?

//இதில் வெளிப்படையாகத் தெரியும் குளறுபடிகள் என்னென்ன?
1. ஒரு சாதாரண தங்கக்காசினை வாங்குவதற்கு இணையத்தில் எப்படி மக்கள் இவ்வாறு போட்டி போடுவார்கள்?//

Good question. But no one thinks that.

// இந்தக் காசின் தற்போதைய மதிப்பு EBayல் 80,000 ரூபாயாம். (யாராவது உறுதிப்படுத்துங்க). //

Then why the "f*ck" they are selling for Rs 33,000 to common public. They could as well sell in EBay and pocket a cool Rs. 47,000 additional profit rather than sweating for convincing public to buy it at Rs 33,000.


// இந்த நிறுவனம் மூடப்பட்ட செய்தியே பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் பணம் மட்டுமே போயிருக்கிறது.//

B'coz the idiots don't read newspaper, watch TV for news, nor develop general knowledge. They live in their world chasing money.

//மென்பொருள்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அப்பாவி, படிக்காத நடுத்தர வர்க்க மக்கள்தான் சீட்டுக்கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாற்றப்பட்டார்கள் என்றால் படித்தவர்களும் இப்படி இருக்க வேண்டுமா? பெரும்பாலானோர்க்கு அரை மாதச் சம்பளம்தான், அதற்காக தெருவில் ஏமாற்றிப் பிழைப்பவனிடம் காசை அள்ளி வீச வேண்டுமா? :(
//

Yes, if you are educated, it doesn't mean you are intelligent. Proved yet again.

PS: Mee to a techie!!

Bottomline is: Tricks remain same. Greed remain same. Only people keep changing. Nothing can prevent people from being greedy. Hence, this would continue for ever.

Finally, plzz some one publish these to educated idiots.

http://en.wikipedia.org/wiki/Ponzi_scheme

http://en.wikipedia.org/wiki/Multi-level_marketing

http://www.vandruff.com/mlm.html

http://www.atimes.com/atimes/China/JA12Ad01.html