வேலை பார்க்கிற இடத்துல இந்தப் பயபுள்ளைக மொபைல் போனை வச்சிக்கிட்டு நம்மளைப்படுத்துறபாடு இருக்கே சொல்லி மாளாது. அவய்ங்க பாட்டுக்கு செல்ல வைப்ரேட் மோடுல போட்டுட்டு டீ குடிக்கப்போயிர்றாய்ங்க. அது கிடந்து கதறி ஊரைக் கூட்டுது. ஏதோ ரைஸ்மில்ல இருக்கிற மாதிரி மொத்த கியூபிக்கிளும் அதிருது.
இன்னொரு பிறவி நம்மளோட வேலை பாக்குது. ஃபிரஷ்ஷர்-ஆ காலேஜ்ல இருந்து நேரா கம்பெனியில சேர்ந்தது. அவன் மொபைலுக்கு எப்போ கால் வந்தாலும் "கோ சார்லி.. கோ சார்லி"-னு எவனையோ போகச் சொல்லி அலறி நமக்கு கிலியைக் கிளப்புது. எதாவது மெசேஜ் வந்தா பழய புல்லட்ட ஸ்டார்ட் பண்ற மாதிரி சவுண்ட் வுட்டுட்டு "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யு ஹேவ் அ மெசேஜ்"-ங்குது. "ஏண்டா, சவுண்டைக் குறைச்சு வைக்கக் கூடாதா?" ன்னு கேட்டா "ஒரு கெத்து வேணுங்க.. நாம இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியணும்"குறான் அந்த கலரிங் மண்டையன்.
இன்னொரு மாமா இருக்காரு. கல்யாணமாகி பல வருசம் கழிச்சு புத்தி வந்து டெஸ்டிங் படிச்சுட்டு இப்போ நம்ம உயிரை வாங்குறாரு. அவரு புள்ளைக்கு டொனால்ட் டக் புடிக்குங்கிறதுக்காக ஒரு ரிங்டோன் வச்சிருக்காரு. அது டொனால்ட் டக் வாய்ஸ்ல "லலலாவோயே லலலாவோயே இய்யகககா.." ன்னு எப்பப் பாத்தாலும் காமடி பண்ணுது. அவரு புள்ளயோட சேந்து அவரும் டூன் டிஸ்னி பாத்து ரொம்பக் கெட்டுப்போய்ட்டாரு.
அடுத்து நம்மளுக்கு எதுக்க ஒரு அக்கா உக்காந்திருக்காங்க. அவுங்க எப்பப் பார்த்தாலும் சத்தமே வெளிய வராம யார்கூடவோ பேசிக்கிறாங்க. ரொம்ப வேலையிருந்தா இயர்போன் மாட்டிக்கிட்டு வேலை பாக்குறாங்க. உத்துக் கேட்டதுக்கப்புறம்தான் புரிஞ்சுச்சு சும்மா வெட்டியாத்தான் பேசுறாங்கன்னு. காலையில பொடுகு சாம்பு போட்டு குளிச்சதுல இருந்து இப்போ நகம் வெட்டிக்கிட்டிருக்குறது வரைக்கும் பேசுறாங்க.
சரின்னு நம்ம செல்ல எடுத்துப் பார்த்தா நல்லாத் தூங்கிக்கிட்டிருக்கு. கிட்டத்தட்ட கால் வந்தே ஒரு வாரம் ஆகிப்போச்சு. போரடிச்சுப்போய் செல்லே தூங்க ஆரம்பிச்சிருச்சி. மத்தியானம் சாப்பிட்டுட்டு தூக்கக் கலக்கத்தில இருக்கிறப்ப எதோ ஒரு பய புள்ளயோட மொபைல் அடிச்சிக்கிட்டே இருக்கு எடுக்கவே மாட்டேங்குறான். நானும் பொறுமை இழந்து போய் சத்தமாவே "எவண்டா அது எடுத்துத் தொலைங்கடா" ன்னேன். எல்லாரும் என்னைய முறைக்கிறாய்ங்க. எதுக்க உக்காந்திருக்குற அக்கா எந்திரிச்சி நகவெட்டிய என் முன்னால நீட்டுது. "ஹி ஹி. ஐ டோண் வாண்ட்" ன்னேன். "ப்ச். பிக் யுவர் மொபைல் மேன் இட்ஸ் ரிங்கிங்". ஓ அது என்னுதுதானா. காலே வராம ரிங்டோன் கூட மறந்துபோச்சு. மெதுவா எடுத்து "ஹலோ" ன்னேன்.
"குட் ஈவ்னிங் சார். வி ஆர் காலிங் ஃபிரம் ...கிளப் சார். வெரி கங்குராட்ஸ் சார். உங்க போன் நம்பர் எங்களோட லக்கி டிராவில செலக்ட் ஆகியிருக்கு சார். அதுனால உங்களுக்கு உங்க வொய்ப்போட கோவா போக பிரீ டிக்கட் தர்றோம் சார்". "அப்புடியா, இந்த ஆபருக்கு எவ்வளவு நாள் வேலிடிடி?"."ஏன் சார்". "எனக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் கோவா போலாம்னு இருக்கேன்". "யு ஆர் நாட் மேரிட்? தென் யு கேனாட் அவாய்ள் திஸ் ஆஃபர் சார்". டொக். காதில் ரொய்ங்.
இந்தா அந்தான்னு பொழுதை ஓட்டிட்டு எப்படா ஆறு மணி ஆகும்கிறதையே ஆறு மணி நேரம் வேலையாப் பாத்துட்டு ஆறாகவும் ரூமுக்கு ஓடி வந்துட்டேன். உள்ள நுழைந்தவுடனே "தல வந்தாச்சு.தல வந்தாச்சு" ன்னு ஒரே அமர்க்களமாக்கெடக்கு. என்னடான்னு பாத்தா "உங்க செல்லக் குடுங்க. ஒரு கால் பண்ணிக்கிறேன். உங்களுது போஸ்ட் பெய்டு தான. ஏர்டெல் டு ஏர்டெல் பிரீ தான. குடுங்க" ன்னு புடுங்கிட்டான் ஒருத்தன். ரொம்ப நேரமா ஆளயே காணோம். "என்னங்க சார்ஜே போட மாட்டிங்களா. அதுக்குள்ள காலியாயிருச்சு. எதுக்குத்தான் நீங்க மொபைல் வச்சிருக்கீங்களோ"ன்னு ஒரு மணிநேரம் கழிச்சுக் கொண்டுவந்து கொடுத்தான். முடியல. செல்லுக்கு சார்ஜ் போட்டவுடனே வீட்ல இருந்து போன். "என்னடா எவ்வளவு நேரம் போன் பண்றது. எடுக்கவே மாட்டேங்கிற. யார் கூட பேசிக்கிட்டிருந்த". "இல்லம்மா. அது வந்து. சரிவிடுங்க. எதுக்கு போன் பண்ணீங்க". "சும்மாதான் என்ன பண்றன்னு கேட்கத்தான் பண்ணினேன். நீ பண்ற அக்கப்போர்ல நெனச்ச நேரத்துக்குக் கூட போன் பேச முடியல. நீயெல்லாம் எதுக்குத்தான் செல் வச்சிருக்கியோ". அம்மாவும் டொக்.
அன்னிக்கு ராத்திரி படுத்தா தூக்கம் வரவேயில்ல. அரைகுறைத் தூக்கத்தில யாரோ போன் பண்ணி நீ எதுக்கு செல் வச்சிருக்கன்னு கேட்கிறமாதிரி கனா வேற. டக்குன்னு முழிச்சி உக்காந்து நான் ஏன் செல் வச்சிருக்கேன்னு கண்டுபிடிச்சே ஆகணும்னு நானே என் மண்டையைத் தெறந்து எட்டிப் பாத்தேன். ஆறு மாசத்து முன்னால நடந்ததெல்லாம் வீடியோ பைலா ஸ்டோர் ஆகியிருந்துச்சு. டபுள் கிளிக் பண்ணி மீடியா பிளேயர்ல ஓப்பன் பண்ணிப் பாத்தேன்.
மொபைல் வாங்கணும் முடிவு பண்ணி ஷோரூம் போயி அங்க விலை கேட்டப்போ "பில் இல்லாம வாங்கினா அறுநூறு ரூபா கம்மி சார். பில்லோட வாங்கினா அதில போட்ருக்க வெல சார்". "அப்படியா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்". "பில் இல்லாம வாங்கினா பில் தர மாட்டோம் சார். பில்லோட வாங்கினா பில் தருவோம் சார்". என்ன தெளிவான விளக்கம். "பில்லுக்கே அறுநூறு ரூபா கம்மியா. அப்படின்னா இந்த அட்டைப் பெட்டியெல்லாம் எங்களுக்கு வேணாம் இதையும் வச்சிக்கிட்டு ஒரு இருநூறு ரூபா டிஸ்கவுண்ட் கொடுங்க". அவன் முறைத்த முறைப்பில் "இல்லங்க அப்படி எதாவது ஆபர், ஸ்கீம் இருக்குமான்னு.. இல்லன்னா விடுங்க ஒன்னும் பிரச்சனையில்ல". வாங்கியாச்சு. செல்லுக்கு கவர் வாங்கணுமே. "இங்க வேணாண்டா இவன் 15 ரூபா சொல்றான். சரவணா ஸ்டோர்ல கம்மியா இருக்கும்"ன்னு நண்பன் சொன்னான். சரின்னு பத்து ரூபா செலவழிச்சு அங்க போயி அஞ்சு ரூபாய்க்கு ஜிப் கவர் வாங்கினது, அஞ்சு ரூபாய்க்கு காசு கொடுக்க அரைமணி நேரம் கியூவில நின்னது, கவுண்டர்ல இருந்தவன் "இது மட்டும்தானா இது மட்டும்தானா"ன்னு திரும்பத்திரும்பக் கேட்டது, பிறகு மகா கேவலாமா ஒரு லுக்கு விட்டு கவரை டெலிவரி கவுண்டர்க்கு எறிஞ்சது, நல்லவேள கிரடிட் கார்டு குடுக்காமத் தப்பிச்சோம்னு நினைச்சதுன்னு எல்லாம் ஞாபகம் வருது ஆனா ஏன் செல் வச்சிருக்கேன்கிறதுக்கு மட்டும் காரணமே கண்டுபிடிக்க முடியல. சரி விட்டுத் தள்ளு. தூங்கப்போவோம். காலையில சீக்கிரமா எந்திருக்கணும். இரு இரு. என்ன சொன்ன. கொஞ்சம் பின்னால வா. காலையில சீக்கிரமா எந்திருக்கணும். திரும்பிச் சொல்லு. தலைநகரம் வடிவேலு மாதிரி மூணு தடவ சொல்லு. சீக்கிரமா எந்திருக்கணும் சீக்கிரமா எந்திருக்கணும் சீக்கிரமா எந்திருக்கணும். கண்டுபிடிச்சிட்டேன்யா. கண்டுபிடிச்சிட்டேன். நான் ஏன் செல் வச்சிருக்கேன்னா..... அலாரம் வைக்கிறதுக்கு.
20 comments:
:-))))))))))))))))))))
என் செல் தொலைஞ்ச கவலைப் போயேப் போச்சுப்பா கொஞ்ச நேரத்துக்கு :-)
செமக் காமெடி பதிவும்மா :))))))
அய்யய்யோ!!
நானும் டெஸ்டிங் படிச்சுசிட்டு வந்தா இப்படி தான் பதிவுகளில் போடுவார்களோ??
:-))
:) lol
சூப்பர் காமெடிங்க......:)
என்னோட ரிங்டோன்.. WWF'லே முன்னாடி இருந்த The Rock'வோட Intro music..... ஹி ஹி தப்பித்தவறி ஆபிசிலே Call வந்தா அது அலற சத்தத்திலே எல்லாப்பேரும் பயந்தே போயிருவாய்ங்கே :)
கலக்கிட்டீங்க தலைவரே! சுப்பர் காமடி , நல்ல நகைச்சுவை நடை ! வாழ்த்துக்கள்!
same pinch..
நானும் போன் வச்சிருக்கிறது அலார்ம்க்கு மட்டும்தான். ஒன்னுக்கு ரெண்டாவே இருக்கு!!! ஆனா, அதுக்கு வேலைதான் இல்லாம இருக்கு. ;-)
வருகை தந்து பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் நன்றிகள். நெறைய வேலையிருந்ததால் தான் தாமதமாகப் பின்னூட்டம் போடுறேன்.
// தேவ் | Dev said...
என் செல் தொலைஞ்ச கவலைப் போயேப் போச்சுப்பா கொஞ்ச நேரத்துக்கு :-)
செமக் காமெடி பதிவும்மா ))))) //
ஓ நட்சத்திரமே நம்ம பதிவுக்கு வந்து பின்னூட்டமும் போட்டுருக்காங்களா.. வாழ்த்துக்கள் தேவ். :)
// வடுவூர் குமார் said...
அய்யய்யோ!!
நானும் டெஸ்டிங் படிச்சுசிட்டு வந்தா இப்படி தான் பதிவுகளில் போடுவார்களோ??
:-)) //
அப்படியெல்லாம் ஒன்னுமில்லேங்க குமார்.. உங்க மொபைல்ல நல்ல ரிங்டோனா வச்சிக்கிட்டீங்கன்னா யாரும் உங்களைப் பத்தி பதிவு போட மாட்டாங்க.
// இராம் said...
சூப்பர் காமெடிங்க......
என்னோட ரிங்டோன்.. WWF'லே முன்னாடி இருந்த The Rock'வோட Intro music..... ஹி ஹி தப்பித்தவறி ஆபிசிலே Call வந்தா அது அலற சத்தத்திலே எல்லாப்பேரும் பயந்தே போயிருவாய்ங்கே //
சீக்கிரமா மாத்திருங்க.. இல்லன்னா இம்சை இளவரசன் ராம்-னு யாரும் பதிவு போட்டுறப் போறாங்க.. :)
// சுந்தர் / Sundar said...
கலக்கிட்டீங்க தலைவரே! சுப்பர் காமடி , நல்ல நகைச்சுவை நடை ! வாழ்த்துக்கள்! //
ரொம்ப நன்றி தலைவா :)
// .:: மை ஃபிரண்ட் ::. said...
same pinch..
நானும் போன் வச்சிருக்கிறது அலார்ம்க்கு மட்டும்தான். ஒன்னுக்கு ரெண்டாவே இருக்கு!!! ஆனா, அதுக்கு வேலைதான் இல்லாம இருக்கு. ;-) //
வேறென்ன செய்யுறது மை ஃபிரண்ட். கடலை போட ஆள் இல்லன்னா ரொம்ப கஷ்டம் தான். :)
// Prabu Raja said...
:)lol
Anonymous said...
:-))))))))))))))))))))
//
வருகைக்கும் சிரித்ததற்கும் மிக்க நன்றி பிரபு ராஜா மற்றும் அனானி. :)
:)))))))))))
//அப்படின்னா இந்த அட்டைப் பெட்டியெல்லாம் எங்களுக்கு வேணாம் இதையும் வச்சிக்கிட்டு ஒரு இருநூறு ரூபா டிஸ்கவுண்ட் கொடுங்க". //
சூப்பர்... இனிமே எங்கயாவது டீல் பேசணும்னா உங்களத்தான் கூப்பிடணும் போலிருக்கு.
ஆனாலும் கோவமாத்தான் வந்தேன்.. எங்க நம்ம பேவரிட் கம்பெனிய எதுனாச்சும் தப்பா சொல்லிட்டீங்களோன்னு...
சரி வந்ததுக்கு ஒரு சுட்டி கொடுத்துட்டு போறேன். :)
நன்றி.
நானும் பலதடவை 'அலார்ம் ' வைக்க ஒரு செல்போன் வைத்திருக்கின்றேனே என்று நினைத்ததுண்டு. .. அந்த முடிச்சை வைத்து இப்படியொரு நகைச்சுவைப் பதிவா? . மூளைக்கு என்ன மசாலா போடுகிறீர்கள் ??
செம காமடியா எழுதி இருக்கிங்க. நானும் என்னோட போனுக்கு "somebody answer the call" அப்படின்னு துவங்கும் பாடலை ரிங் டோனா வெச்சி இருக்கேன். ஒரு நாள் பக்கத்துல உக்காந்து இருந்தவன் போனை எடுத்துட்டான் ஏண்டா அப்படின்னு கேட்டா அது தான் "somebody answer the call" அப்படின்னு கத்திச்சி அப்படின்னு கூல சொல்லுறான்.
திரும்பவும் தாமதம். பலதரப்பட்ட, விதவிதமான ஆணிகள் பிடுங்க வேண்டியிருக்கு. :)
வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி இராமநாதன், தாஸ் மற்றும் சந்தோஷ் :)
நல்ல காமெடிங்க.. :))) போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
//பில் இல்லாம வாங்கினா பில் தர மாட்டோம் சார். பில்லோட வாங்கினா பில் தருவோம் சார்". என்ன தெளிவான விளக்கம். "பில்லுக்கே அறுநூறு ரூபா கம்மியா. அப்படின்னா இந்த அட்டைப் பெட்டியெல்லாம் எங்களுக்கு வேணாம் இதையும் வச்சிக்கிட்டு ஒரு இருநூறு ரூபா டிஸ்கவுண்ட் கொடுங்க".//
//நான் ஏன் செல் வச்சிருக்கேன்னா..... அலாரம் வைக்கிறதுக்கு.//
இரசித்து சிரித்தேன்.
வருகைக்கும், சிரித்ததற்கும் நன்றி உமையணன் :)
ரொம்ப ரொம்ப லேட்டா படிக்கிறேன்.. இருந்தாலும்.. சூப்பர்ங்க!
மனம் விட்டு சிரிச்சேன்..சரியான பன்ச்!
:-)))))))
வருகைக்கு நன்றி சுரேகா !
// ரொம்ப ரொம்ப லேட்டா படிக்கிறேன்.. இருந்தாலும்.. சூப்பர்ங்க! //
பரவாயில்லை இனிமே சீக்கிரமா வாங்க ! :)
நல்ல நகைச்சுவையான எழுத்து நடை! மிகவும் ரசித்தேன்!
வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
ஹைய்யோ ஹைய்யோ அலாரம் வைக்க வாங்குனாராம், அது சரி அலாரம் அடிச்சு என்னைக்காவது எந்திரிச்சீங்களா?
நல்ல நகைச்சுவை....ஒரு குரூப்பாதான் திர்ரீங்க போல...
Post a Comment