Monday, June 04, 2007

கானல் நீர் கதாநாயகனின் முதலமைச்சர் கனவு


ஒரு திரைப்படம் தயாரிப்பதற்குப் பின்னணியில் இருந்துவிட்டு அதே படத்தின் கதாநாயகனாகவும் நடித்துவிட்டு முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே அரசியல் ஆசை, முதலமைச்சர் கனவு எல்லாம் வந்து காணாமல் கானல் நீராகிப் போனதொரு கண்ணீர்க் கதையிது.

'முகவை குமார் என்கிற JK ரித்திஸ் நடிக்கும் கானல்நீர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இவண் JK ரித்திஸ் ரசிகர்(அல்லக்கை) பாசறை(!)' என்ற சுவர் விளம்பரங்களும், சுவரொட்டி மற்றும் பேனர்களும் சில மாதங்களாக இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைக் கலக்கி வந்தன. ஏனென்றால் ஒரு சுவர் அல்லது இடம் கூட விடாமல் விளம்பரம் செய்திருந்தார் கதாநாயகன். அவர் எங்கள் ஊர்க்காரராம். மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பலப்பல பள பள பேனர்களில் அவர் விதவிதமான போஸ்களில் காணப்பட்டார். என் தம்பி அதையெல்லாம் பார்த்துவிட்டு "ஏண்டா இவருக்கு கம்பியைக் காய்ச்சி சூடு போட்டாக் கூட நடிப்பு வராது போலருக்கு"ன்னான்.

கடைசியில் யார் அவர் திடீரென்று எப்படி இவ்வளவு பிரபலமாக முயற்சிக்கிறார் என்று சிலர் பூர்வாசிரமக் குறிப்புகளை எடுத்து விட்டபோது தலை சுற்றியது. அவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகில் 'பருத்திவீரன் டக்ளஸ்' போல டீ மாஸ்டராக இருந்தவராம். பின்னர் இப்போது ஆட்சியில் இல்லாமல் எதிரணியாக இருக்கும் குடும்பத்தின் பினாமியாக இருந்து ஆட்சி மாறியதும் அதை அப்படியே லவட்டி இப்போது லவட்டிய சொத்துக்களைக் காப்பாற்ற ஆட்சி செய்யும் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று பலராலும் ஊரறிந்த கிசுகிசு ஆணித்தரமாக சொல்லப்பட்டது. பரமக்குடியில் ஸ்டாலின் வந்தபோது அவருடன் மேடையில் கால் மேல் கால் போட்டு அமரும் அளவுக்கு அவர் கட்சியிலும் பெரிய ஆளாகிவிட்டார். பெரிய தொழிலபதிரும் இல்லை. இப்போதும் வட்டிக்கு விடுவது மட்டுமே தொழிலாம். என்ன கொஞ்சம் பெரிய அளவில்.

இவர் அப்படி என்னென்ன செய்தார்?

1. ஒரு படம் கூட வராமல் முகவை குமார் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், முகவை குமார் பேபி கிளப் (குழந்தை ரசிகர்களாம் !), வயதான தாத்தாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற போஸ்டர்கள், பேனர்களை ஊர் முழுதும் ஒட்டி கலக்கினார்.

2. ஊரிலிருக்கும் அனைத்து ஆட்டோக்காரர்களுக்கும் தலா 1000 கொடுத்து அவரது ஸ்டில்களை ஆட்டோவில் ஒட்டவைத்தார். அவர் படம் இல்லாத ஆட்டோ இங்கு இல்லை.

3. ஊரிலிருந்த எல்லா ஆட்டோ ஸ்டாண்டுகளையும் அவர் பேருக்கு மாற்றினார்.

4. ஒருநாள் தெரியாத்தனமா மதுரைக்குப் போய்ட்டுத் திரும்பி பஸ்ஸில் வந்த போது அவர் படத்தின் ஆடியோ கேசட் ரிலீஸிற்குப் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார் போல. கிட்டத்தட்ட 100 சுமோக்கள் பறக்க (சத்தியமா பரம்பரை அரசியல்வாதி கூட இப்படிப் பண்ணமாட்டான்) லவுட் ஸ்பீக்கரில் அவரது படத்தின் பாடல்கள் ஒலிக்கப் பறந்து கொண்டிருந்தனர். வழியில் இருக்கும் கிராம மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் வரவேற்க ஆரத்தித் தட்டுக்களுடன் நின்றனர் (அல்லக்கைகள் ஏற்பாடு). ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கெல்லாம் 500 ரூபாயாம் பஸ் டிரைவர் சொன்னார்.

5. நகரின் ஒட்டுமொத்த லோக்கல் சேனல்களையும் குத்தகைக்கு எடுத்து ஒரே விளம்பரம். தமிழ்ப்புத்தாண்டு அன்று எல்லா லோக்கல் சேனல்களின் அட்டு VJக்களும் அவரிடம் கேவலமாகப் பேட்டி வேறு.

VJ : எப்படி சார்(!) இருக்கிங்க? இப்ப எப்படி பீல் பண்றிங்க?
JK : நல்லாத்தான் இருக்கேன். பொது வாழ்வில் இருப்பதால் பேமிலியைக் கவனிக்கத்தான் நேரமில்லை.
VJ : எப்படி சார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறது கஷ்டமா இல்லயா?
JK : உங்க கேள்வியே தப்பு. நான் ஏற்கனவே அரசியலில் இருந்தேன்(!) (கட்சி மீட்டிங்க்கு போஸ்டர் எதுவும் ஒட்டினீங்களோ?). அரசியலில் இருந்தபடியே சினிமாவுக்குப் போனேன். இப்ப அரசியலில் ஒரு மேலான இடத்துக்கு வந்திருக்கிறேன்.
VJ : சரி சார். மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
JK : நல்லாப் படிங்க. படிக்க வைங்க. இப்ப இருக்கிற அரசாங்கம் நம்மளுது. ஸ்டேட், செண்ட்ரல் ரெண்டிலயும். அதுனால நம்ம ஸ்டேட் குறிப்பா நம்ம மாவட்டத்துக்கு நல்லது நடக்கும். ஏற்கனவே சேது சமுத்திரத்திட்டம் சிறப்பா நடந்துக்கிட்டிருக்கு. எதிர்கட்சிகள் இத்திட்டம் பத்தி தப்பா சொல்றாங்க. Fishers (மீனவர்களாம்) எல்லாம் தேவையில்லாம கவலைப்படத் தேவையில்லை.

பேட்டியினிடையில் அவர் சொன்ன கிரேட் காமெடிகள்.

* மும்பைக்கு அப்புறம் இந்தியாவில் land value அதிகமா இருக்கிற இடம் பரமக்குடியாம்!
* ஏர்போர்ட் இல்லாதது எங்கள் மாவட்டத்தின் பெரிய குறையாம். பரமக்குடி ஏர்போர்ட் அமைப்பதற்கு மிகவும் சரியான இடமாம்.
* அப்புறம் ஸ்போக்கன் இங்கிலீஸில் எங்கள் மாவட்ட மக்கள் வீக்கா இருக்காங்களாம். அதுனால சென்னைக்கு வேலை தேடிப் போறதுக்கு முன்னால இவருகிட்ட சொன்னா எதாவது அரேஞ்ஜ் பண்ணித் தருவாராம். (இங்கிலீஷ் தெரியலைன்னா கிளாசுக்குப் போறோம். உன்கிட்ட சொல்லி என்ன ஆவப் போகுது? முதல்ல மீனவர்கள்னா Fishers இல்ல Fishermen-ன்னு சொல்றதுக்குப் பழகு.)

லோக்கல் சேனல் அட்டு பிகர் கேட்காமல் விட்ட கேள்வி.
VJ : இப்போ ஆளும்கட்சி நிழலில் இருக்கிங்க. ஆட்டம் போடுறிங்க. வைகோ வேற ஆட்சி மாற்றம் வரும்னு மாசம் ரெண்டு தடவையாவது சொல்றாரு. சப்போஸ் அந்த மாதிரி ஆகிப் போய் எதிரணி ஆட்சிக்கு வந்து உங்களைக் கஞ்சாக் கேஸில் பிடித்துப் போட்டால் என்ன செய்வீர்கள்?
JK : ஊரில இருக்கிற ஆட்டோக்கெல்லாம் 500 ரூபாய் கொடுத்து உங்க வீட்டுக்கு வரச் சொல்லுவேன்.

எங்க வீட்டுக்கு வராம இருந்தா சரி. இப்படியாக அலும்புமன்னனாகத் திரிந்தவர் படம் ரிலீஸ் ஆனவுடன் அட்ரஸ் இல்லாமல் போனார். இங்கு முகவையில் படம் ஒரே வாரத்தில் திரையரங்கை விட்டு ஓடியது பெரும் சோகமாக அமைந்து போனது. ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் எங்கள் ஊரிலாவது அட்லீஸ்ட் மினிமம் 100 நாள் தாராளமாக ஓடும் என எதிர்பார்த்தோம். காசு கொடுத்து ஓட்டச் சொன்னதற்கு திரையரங்கின் முதலாளி ஒத்துக்கொள்ளவில்லையாம். முதலில் இவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டிருந்தவர் படத்தின் லட்சணத்தைப் பார்த்துவிட்டு மறுத்துவிட்டாராம்.

"அய்யய்யோ! ஆரத்தி எடுக்கும் போதெல்லாம் ஐநூறு கொடுத்தேனே அவங்க கூடப் படம் பார்க்க வரலியே. ஆட்டோக்காரனுக்கெல்லாம் ஆயிரம் கொடுத்தேனே அவனும் படம் பார்க்க வரலியே"ன்னு புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படி புயல் அடித்து ஓய்ந்த மாதிரி ஊர் இருந்த போது போன வாரம் வாரமலரிலோ, குமுதத்திலோ வந்த செய்தி திரும்பவும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மக்களெல்லாம் பாதுகாப்பான இடத்துக்குப் போகும்படி எங்க ஊர் கிடேசன் பார்க்ல மீட்டிங் நடந்தப்போ கலெக்டரே சொல்லியிருக்காராம். நானும் ஊரைக் காலி பண்ணிட்டு ஒரிஸ்ஸாப் பக்கம் போய்டலாம்னு இருக்கேன்.

அந்த செய்தி என்னன்னா எங்க தலைவர் முகவை குமார் அடுத்து ஒரு படத்தில் நடிக்கப் போறாராம்.

20 comments:

வெங்கட்ராமன் said...

ஒரு சுவர் அல்லது இடம் கூட விடாமல் விளம்பரம் செய்திருந்தார் கதாநாயகன்

Chennai Yilum

Anonymous said...

இவனால நம்ம மாவட்ட மக்களுக்கு எல்லாம் கேவலம்பா..மாவட்ட மக்களோ பசியும் பட்டினியுமா இருக்கும்போது இவன் லுசுத்தனமா கோடிக்கணக்குல செலவளிச்சு விளம்பரம் செய்திருந்ததை நானும் ஊருக்கு சென்றிருந்தபோது பார்த்தேன்.

அந்த காசுல ஏதாவது மாவட்ட மக்களுக்கு நல்லது செஞ்சிருந்தான்னா இவன பாராட்டலாம். லூசுப்பய தற்பெருமை அடித்து நீங்க சொன்னமாதிரி Fishers ஆங்கிலம் பேசி மாவட்டக்காரனையெல்லாம் கேவலப்படுத்துறாம்பா.

ஏற்கனவே நம்ம மாவட்டத்த சேர்ந்த ஒரு லூசு இத மாதிரி எல்கசன்ல குதிச்சு கோடிக்கணக்குல காச செலவு பன்னுச்சு. இவன் ரென்டாவது லூசுப்பா. எங்கயாவது இவன பாத்தா செவுட்டுல ஒன்னு கொடக்கனும்.

காசு வாங்கிக்கிட்டு மேடையில இவன ஏத்துற அரசியல் கட்சிகள் ஜாக்கிரதையா இருக்கனும் ஆட்சி மாறினால் அடுத்த கட்சியில சேர்ந்து இதே மாதிரி பேசுவான்.

இவன் பயோனீர் ஆஸ்பத்திரிக்கு வெளியில டீயடிச்சவன் பொறந்தப்ப இருந்து அரசியல்ல இருக்குறேங்கறதுதான் சிரிப்பு சிரிப்பா வருது.

சரியான லூசுப்பய இவன்...எங்கயாவது இவனப்பாத்தா செவுட்டுல ஒன்னு கொடுத்து வுட்டுரங்க.

Anonymous said...

நீங்க சொல்றது மிகவும் சரி முகவைத்தமிழன்!.

இப்பவே இவரைக் கட்சியிலிருந்து விரட்ட நடவடிக்கை ஆரம்பமாயிருச்சு.
பரமக்குடியில அமைச்சர் சுப.தங்கவேலனோட மகன்கள் இவர் அலட்டல் தாங்காம போஸ்டர், பேனரெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டார்கள். அதற்கப்புறம் தான் இவர் சும்மா இருக்கார்.

கானா பிரபா said...

இந்தாளோட கானல் நீர் ட்ரெலரை சன் டிவியில் பார்த்து தொலைச்சிட்டேன். ரெண்டு நாளா கெட்ட கெட்ட கனவு வேறு.

Anonymous said...

கருத்துக்களுக்கு நன்றி வெங்கட்ராமன், முகவைத்தமிழன் மற்றும் கானா பிரபா !!

Anonymous said...

கில்லி-யில் தொடுப்புக் கொடுத்த கானா பிரபாவுக்கு நன்றி
:)

Anonymous said...

//இங்கிலீஷ் தெரியலைன்னா கிளாசுக்குப் போறோம். உன்கிட்ட சொல்லி என்ன ஆவப் போகுது? முதல்ல மீனவர்கள்னா Fishers இல்ல Fishermen-ன்னு சொல்றதுக்குப் பழகு//

:)))

வல்லிசிம்ஹன் said...

இப்படியெல்லாம் நடக்கிறதா நம்ம ஊரில.
என்ன ஒரு வளர்ச்சி!!!
:-))நன்றி பொன்வண்டு.

Anonymous said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா, வல்லிசிம்ஹன் !!

Anonymous said...

அட்டகாசம்...!!!!

கலக்கலான காமெடி விருந்து பொன்வண்டு...!!!

சென்னையில் நம்ம லக்கிலூக்குடன் வண்டியில் பயணம் செய்தபோது அண்ணாசாலையில் எதிர்த்தாப்புல வர்ர எல்லா சைண் போர்டுலயும் இந்த மூஞ்சியப்பார்த்து கிட்டத்தட்ட வாந்தியெடுக்கற நிலைமைக்கு போயிட்டேன்.

பிறகு லக்கி மூலமாக இந்த சனியனுக்கு கே.கே நகர் கவுன்ஸிலர் என்ற அரசியல் அடையாளத்தை தவிர வேற எந்த @@#$ கிடையாது என்று அறிந்துகொண்டேன்...

அடுத்த படம் வேற நடிச்சு கொடுமை செய்யப்போவுதா இது ? கொடுமையே...எங்க போயி முட்டிக்கறது ? வழக்கமா கர்நாடக ஹீரோஸ் பார்க்க படு கேவலமா இருப்பானுங்க...இப்ப அவனுங்க கூட பார்க்க சுமார இருக்கறவனுங்கள ஹீரோவா எடுக்கறானுங்க..

இவன் அந்த விஷயத்தை இங்கே நடக்குறமாதிரி செய்துட்டானே...~!!

Ayyanar Viswanath said...

/எங்க ஊர் கிடேசன் பார்க்ல மீட்டிங் நடந்தப்போ கலெக்டரே சொல்லியிருக்காராம்./

ஹி..ஹி..எங்க கிடேசன் பார்க் இவ்ளோ பேமஸா :)

தல என்னா சொல்றது நம்ம நிலவரம் இப்படித்தான் இருக்குது

/எங்கயாவது இவனப்பாத்தா செவுட்டுல ஒன்னு கொடுத்து வுட்டுரங்க./

அப்படி போடு

Anonymous said...

:)))
பார்த்துங்க உங்கூட்டுக்கு ஆட்டோ வந்துடப்போகுது.

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2007/06/06/actingtsunami/

Anonymous said...

கருத்துக்களைத் தெரிவித்த செந்தழல் ரவி, டுபுக்கு ஆகியோருக்கு நன்றி.

தொடுப்புகள் கொடுத்த இம்சைக்கும், டுபுக்குவிற்கும் தேங்க்ஸ். :)

Anonymous said...

அச்சச்சோ அய்யனாரை விட்டுட்டனே கோவிச்சுக்கப் போறாரு...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யனார் :)

முகவை மைந்தன் said...

பொன்வண்டு, முகவைத்தமிழன், வள்ளி... ஆஹா நம்ம ஊர்ல இருந்து இத்தனை பேரா? முகவை குமார், வாழ்க!

முரளிகண்ணன் said...

எனக்கு சின்ன எம்ஜியார் ஞாபகம் வருகிறது

உங்கள் நண்பன்(சரா) said...

ஏலே! பாசக்காரப் பயலுகளா! இம்புட்டுப் போரலே நம்ம ஊருல இருந்து எழுதுறீக சந்தோசம்யா!

நானும் அந்தக் கொடுமையெல்லாம் அனுபவிச்சேன்! கட்டவுட்ல கைய நீடிக்கிட்டி இருக்கிறதப் பாத்தா பொறவரவன் கண்ணூல குத்துற மாதிரியே இருந்துச்சு!

எங்க பாத்தாலும் ஒரே மன்றம் தான், நானும் அந்த டீக்கடை விசயம் கேள்விப் பட்டேன்!ஒரு மூனு மாசம் குளிக்க கொளத்துக் போனாலும் , டீக்கடைக்குப் போனலும் பஸ்ல போனாலும் எவனப் பாத்தாலும் குமார் புராணம் தான், ஒருத்தன் சொல்லுறான் நேத்து குமார் வந்தார் ஒரு 500 ரூபா கட்டு எடுத்து பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் போற வர்ரவனுக்கெல்லாம் கொடுத்தார்னு, இன்னொருத்தன் சொல்லுறான் பிச்சைக்காரனுக்கு 1000 ரூபா கொடுத்தார்னு, அடங்காமா ஆட்டம்லயா போட்டான், சே! அவன நெனைச்சு எரிச்சலுடன் எம்புட்டுப் பெரிய பின்னூட்டம்:))

Unknown said...

//வல்லிசிம்ஹன் Says: June 5, 2007 8:25 PM

இப்படியெல்லாம் நடக்கிறதா நம்ம ஊரில.
என்ன ஒரு வளர்ச்சி!!!
:-))நன்றி பொன்வண்டு.//

ஆஹா வல்லிசிம்ஹனும் நம்ம ஊர்தானா? நாச்சியார்னு வலைப்பதிவு வச்சிருக்கும்போதே லைட்டா டவுட்டு பட்டேன்

Unknown said...

//அவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகில் 'பருத்திவீரன் டக்ளஸ்' போல டீ மாஸ்டராக இருந்தவராம். பின்னர் இப்போது ஆட்சியில் இல்லாமல் எதிரணியாக இருக்கும் குடும்பத்தின் பினாமியாக இருந்து ஆட்சி மாறியதும் அதை அப்படியே லவட்டி இப்போது லவட்டிய சொத்துக்களைக் காப்பாற்ற ஆட்சி செய்யும் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று பலராலும் ஊரறிந்த கிசுகிசு ஆணித்தரமாக சொல்லப்பட்டது//

பெரியாஸ்பத்திரி இல்லை. பயனியர் ஆஸ்பத்திரி பக்கத்துல வெஸ்டன் பேக்கரி. டக்ளஸ் மாதிரி இல்லீங்க நெஜமாவே இவருதாங்க ஓனரு.

Yogi said...

// பெரியாஸ்பத்திரி இல்லை. பயனியர் ஆஸ்பத்திரி பக்கத்துல வெஸ்டன் பேக்கரி. டக்ளஸ் மாதிரி இல்லீங்க நெஜமாவே இவருதாங்க ஓனரு. //

வருகைக்கு நன்றி உமையணன்! நான் இராம்நாட் வந்து 7வருசம் தாங்க ஆச்சு!! அதுனால இந்தாளொட வரலாறெல்லாம் தெரியாது. சுத்திமுத்தி விசாரிச்சதுல எழுதினது. பின்னால நடந்த கருமமெல்லாம் ஊரே பார்த்து சிரிச்சதே !!