Thursday, March 13, 2008

மழலையர் பாடல்கள் - அரும்புகளுக்காக



சிட்டு

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>




சேர்ந்து செய்வோம் !

துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !

துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !

வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !

சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


மரம் வளர்ப்போம்

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


நன்றி : சங்கீதா அக்கா

5 comments:

கண்மணி/kanmani said...

பொன்வண்டு மிக அருமை
அப்படியே காபி பேஸ்ட் செஞ்சுகட்டுமா அரும்புகள் பதிவுக்கு

Yogi said...

// அப்படியே காபி பேஸ்ட் செஞ்சுகட்டுமா அரும்புகள் பதிவுக்கு
//

டீச்சர் அதுக்குத்தானே பதிவு போட்டிருக்கேன் :)

நிஜமா நல்லவன் said...

பாட்டுக்கள் எல்லாமே நல்லா இருக்கு. படங்களும் அருமை.

நிஜமா நல்லவன் said...

பொன்வண்டு பேரு நல்லா இருக்கு. நான் ஸ்கூல் போகும் போது பொன்வண்டை பிடிச்சி ஒரு டப்பாவில் அடைச்சி எடுத்துகிட்டு போவேன். அது கழுத்துல நூலை கட்டி ஒரு கையில புடிச்சுகிட்டோம்ன்னா றெக்கைய விரிச்சி அழகா சுத்தும். கலர் கலரா முட்டை இடும். ஆமா இப்ப ஊருல பொன்வண்டு இருக்கா இல்லையா?

Yogi said...

// பொன்வண்டு மிக அருமை //
// பாட்டுக்கள் எல்லாமே நல்லா இருக்கு. படங்களும் அருமை. //

நன்றி டீச்சர், நிஜமா நல்லவன் !

// ஆமா இப்ப ஊருல பொன்வண்டு இருக்கா இல்லையா? //

இப்பல்லாம் பிடிச்சி விளையாடுறதில்லைங்க ;)