Tuesday, April 29, 2008

ஜோகிந்தர் அல்ல 'சென்டிமென்ட்' சர்மா & ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்



நேற்று நடந்த சென்னை-பெங்களூர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் நம்ம ஜோகிந்தர் சர்மாவின் கடைசி ஓவர் ராசி வேலை செய்தது. இந்தியா விளையாடும் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலெல்லாம் ஜோகிந்தர் கடைசி ஓவர் பந்து வீசி வெற்றிக்கனியைப் பறித்துத் தந்திருக்கிறார். அது போலவே அணித்தலைவர் தோனியும் அவரையே எல்லாப் போட்டிகளிலும் கடைசி ஓவர் பந்து வீச வைக்கிறார். இந்த சென்டிமென்ட் நன்றாகவே வேலை செய்கிறது.

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடும் தோனி ராசி காரணமாக ஜோகிந்தரை சென்னை அணியில் இழுத்துப் போட்டு தொடர்ந்து வெற்றியைத் தேடித் தந்து வருகிறார் ஜோகிந்தர். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன் எடுக்க வேண்டிய நிலையில் நம் ஜோகிந்தர் பந்து வீசி வெற்றியைப் பறித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே நம் ஜோகிந்தருக்கு 'சென்டிமென்ட் சர்மா' என்ற பட்டம் சென்னை அணியின் ரசிகர்கள் சார்பாக வழங்கப்படுகிறது.

கொசுறு : நேற்று பெங்களூரில் சென்னை அணி ஜெயித்ததும், இதுக்குக் கூட அடியைப் போடுவானுங்கடா லூசுப் பசங்கன்னு நினைத்து நம்ம ஆட்கள் யாரும் வெளியில் தலை காட்டவில்லை. :)

-----XX-----

ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்


மின்னஞ்சல் 1 : உங்களுக்குத் தெரியுமா ஸ்ரீசாந்த் ஏன் அழுதார் என்று?


...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........

இது தான் காரணம் :)



மின்னஞ்சல் 2 : நியூட்டனின் மூன்றாம் விதியும் ஸ்ரீசாந்தும்

எல்லா வினைக்கும் ...........


சரிசமமான எதிர்வினை உண்டு ......



மின்னஞ்சல் 3 : கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சைமண்ட்ஸைக் கேட்டார்


ஹைடனைக் கேட்டார்


ஏன் கைஃப்பைக் கூடக் கேட்டார்



கடைசியாக ஹர்பஜன்தான் கேட்காமலேயே கொடுத்தார்






நன்றி :
சாம்
-----XX-----
அழுத பிள்ளை சிரிச்சிச்சாம்!! கழுதைப் பாலைக் குடிச்சிச்சாம் !!




12 comments:

யாத்ரீகன் said...

as in last email , he should have got it long long back for his idiotic behaviour .. good for him that he got it from an Indian player else this issue would have taken turn somewhere else.... hope he changes himself

Anonymous said...

சூப்பர் :)அழற பையனைக் காட்டி நல்லா சிரிக்க வெச்சீங்க :)

Anonymous said...

//as in last email , he should have got it long long back for his idiotic behaviour .. good for him that he got it from an Indian player else this issue would have taken turn somewhere else.... hope he changes himself//

ஹர்பஜனைத் தானே சொல்றீங்க ? ;)

சேவியர்

Thamiz Priyan said...

நல்ல காமெடி தல... ஸ்ரீசாந்த் தான் காமெடி பசிக்கு தீனி போடராரு

வந்தியத்தேவன் said...

// நேற்று பெங்களூரில் சென்னை அணி ஜெயித்ததும், இதுக்குக் கூட அடியைப் போடுவானுங்கடா லூசுப் பசங்கன்னு நினைத்து நம்ம ஆட்கள் யாரும் வெளியில் தலை காட்டவில்லை. :)//

உண்மைதான் சிவமணி மைதானத்தின் வெளியில் ட்ரம்ஸ் வாசித்தார் சென்னை டீம் வென்றதும் உள்ளே சென்று வாசிக்க முயல சிலர் அவரைத் தடுத்தார்கள் கேப்டன் டோணி ஓடோடி வந்து ஏதோ வாதிட்டு பின்னர் சிவமணி பிரசென்டேசன் நேரத்திலும் ட்ரம்ஸ் வாசித்தார். ஆகவே கன்னட வெறியர்கள் இன்னமும் திருந்தவில்லை.

மோகன் கந்தசாமி said...

இவையெல்லாம் இடியாடிக் பிகேவியர் என்றால் கை நீட்டுவது நோபல் பிகேவியரா? ஹர்பஜனை கண்டித்துவிட்டு ஸ்ரீ சாந்த்தை கிண்டலடித்தால் நாமும் சிரிக்கலாம்.

Kavi said...

இந்திய வீரர் ஒருவரை AUS அணியைச் சேர்ந்த யாராவது
அறைந்திருந்தால் இதே போல் கேலி பண்ணிக்கொண்டிருப்பீர்களா??

Yogi said...

// இவையெல்லாம் இடியாடிக் பிகேவியர் என்றால் கை நீட்டுவது நோபல் பிகேவியரா? ஹர்பஜனை கண்டித்துவிட்டு ஸ்ரீ சாந்த்தை கிண்டலடித்தால் நாமும் சிரிக்கலாம். //

// இந்திய வீரர் ஒருவரை AUS அணியைச் சேர்ந்த யாராவது
அறைந்திருந்தால் இதே போல் கேலி பண்ணிக்கொண்டிருப்பீர்களா?? //

ஹர்பஜன் அறைந்தது தவறுதான் என்றாலும் ஸ்ரீசாந்தின் திமிருக்குத் தேவையானதுதான். இவர் இந்திய வீரர் என்பதற்காக இவர் செய்யும் கேவலமான நடவடிக்கைகளை ஆதரிக்கமுடியாது. அதே நேரம் ஹர்பஜன் ஒன்றும் உத்தமர் கிடையாது. அது பற்றி ஏற்கனவே பதிவு போட்டிருக்கிறேன்.
http://ponvandu.blogspot.com/2008/01/blog-post_06.html

Yogi said...

ஸ்ரீசாந்த் ரசிகர்களுக்காக கடைசியாக ஒரு படம் சேர்த்திருக்கேன் :)

Anonymous said...

கடைசில ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே கேமராவுக்கு போஸ், நல்ல காமெடி போங்க, ஹர்பஜனுக்கு கவுண்டமணின்னும், சிரிசாந்துக்கு செந்தில்லுன்னும் பேர் வைக்கலாம். சீக்கிரமே இது மாதிரி தமிழ் சினிமா காமெடி வரும் பாருங்க

கைப்புள்ள said...

//அழுத பிள்ளை சிரிச்சிச்சாம்!! கழுதைப் பாலைக் குடிச்சிச்சாம் !!//

இது டாப் க்ளாஸ்
:)))))))))))))))

ரசிகன் said...

ஹ..ஹா..:))))