Friday, April 25, 2008

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


நம்ம ஊர்ல ஏகப்பட்ட வகையறா இருக்குதுங்க. ஒவ்வொரு வகையறாக்கும் ஒவ்வொரு குலசாமி. ஒவ்வொரு வகையறாக்கும் ஒரு ஒரு வித்தியாசமான பேரு இருக்கும். அதை வச்சுத்தான் எப்பவாவது பொது இடத்துல வச்சுக் கூப்பிட்டு கிண்டலடிப்பாங்க.

அந்தப் பேரு எல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்தந்த பரம்பரையில இருந்த முன்னோருங்க பண்ணிய சேட்டையையே பட்டப்பெயராக வைத்து தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேர் அவர்களின் சந்ததிகளையும் அழைக்கப் பயன்பட்டு வருகிறது.

சரி. சரி. அந்தப் பெயரெல்லாம் என்னன்னு பார்ப்போம்.

  • மத்தியானச்சோறு
  • கட்டுச்சோறுகளவாணி
  • அரைப்பனையேறி
  • குருத்துப்புடுங்கி
  • மட்டைநக்கி
  • ஆவாரங்கட்டை

இப்படி நிறைய இருக்கு. ஞாபகம் வரும்போது சொல்றேன். ஒன்னொண்ணுக்கும் பெயர்க்காரணம் பார்ப்போமா?

மத்தியானச்சோறு
எங்க ஊர்லயே அந்தக் காலத்துல பெரிய பணக்காரங்க. அரிசி சாதம் வைக்கிறதே பெரிய விசயமாம் அப்போ. ஆனா இவுங்க வீட்டுல மட்டும் தினமும் மதியம் அரிசி சாதம் தானாம். அதான் இந்தப் பேரு.

கட்டுச்சோறுகளவாணி
திருவிழாவுக்குப் போயிருந்த இடத்துல கட்டுச்சோத்தைக் களவாண்டு சாப்பிட்டு மாட்டிக்கிட்டாராம் இவுங்க பரம்பரையில ஒரு தாத்தா. பாவம் அவரால அவர் பேரப்புள்ளைங்க மத்தவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க.

அரைப்பனையேறி
நொங்கு திங்கிற ஆசையில விறுவிறுன்னு பனைமரம் ஏறிட்டு பாதி ஏறுனதும் கீழே குனிஞ்சு பார்த்திருக்கார். பயந்தே போயிட்டாரு. மேலேயும் ஏறத் தைரியம் இல்லை. கீழேயும் இறங்க முடியலை. பயந்து போய் ரொம்ப நேரமா பாதிப் பனைமரத்திலேயே இருந்திருக்கார். பாவம். மத்த ஆளுங்க எப்படியெல்லாம் ஓட்டியிருப்பாங்கன்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது.

குருத்துப்புடுங்கி
குட்டிக் குட்டிப் பனை மரங்களில் குருத்தை மட்டும் உருவி எடுக்கிறதில கில்லாடிகளாம். என்ன ஒரு குரங்குச்சேட்டை இது?

மட்டைநக்கி
கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.

ஆவாரங்கட்டை
சந்தைக்குப் போயிட்டு வர்றப்ப நம்ம ஆளுக்கு வயித்தைக் கலக்கியிருக்கு. ஆள் இல்லாத இடமா ஒதுங்கி அங்க இருந்த ஆவாரஞ்செடியை மடக்கி உட்கார்ந்திருக்கார். எல்லாம் முடிச்சிட்டு எந்திருச்சப்ப மடக்கியிருந்த ஆவாரஞ்செடி தடார்னு நிமிர்ந்து நம்ம ஆளு முதுகு பூரா ஷேம் ஷேம் பண்ணிடுச்சாம். சிங்கம் மாதிரி இருந்த நாம இப்படி அசிங்கமா ஆகிட்டோமேனெல்லாம் பீல் பண்ணாம, எந்திருச்சி நின்னாலும் முதுகுல ஒன்னும் ஒட்டலைன்னு நம்ம ஆளு துடைச்சுப் போட்டுட்டு போகப் பார்க்க சைடு வாக்குல ஒளிஞ்சிருந்த கூட்டாளிங்கலாம் பார்த்து கிண்டலடிச்சி ஊரைக் கூட்டாமலே விசயத்தைச் சொல்லிட்டாங்களாம் ஊருக்குள்ள.

இன்னிக்கும் ஊருக்குள்ளாற ஆவாரங்கட்டைன்னாலே ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான். இந்த வகையறாப் பசங்கள பொது இடத்துல் ஆவாரங்கட்டைன்னு கூப்பிட்டாலே நெளிவானுங்க. இன்னொரு முக்கியமான விசயம் எங்க ஊர்ல வீட்டுல முதன் முதல்ல டாய்லட் கட்டினது இந்த வகையறாதானுங்க.

இதுதாங்க நம்ம ரெண்டு வ.வா.சங்கப் போட்டிக்கு. இந்தப்பதிவுல எங்க ரெண்டு வருதுன்னு யோசிச்சீங்கன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்.


படம் நன்றி : http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html

6 comments:

ஆயில்யன். said...

//மட்டைநக்கி
கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.
//
மத்த கேரக்டர்களை விட இந்த கேரக்டர் பெருசா பேசப்படும் பாருங்களேன் :)))))))))))))

உமையணன் said...

இதெல்லாம் நடந்தது எங்க கமுதியிலயா?

எங்க சொந்தக்காரங்கள்ள கூட சில பட்டப்பேர் உண்டு.

மொட்டமண்ட சின்னய்யா, பேய்ப்பாட்டி, பேய்மாமா. ஆனா காரணமெல்லாம் எனக்குத் தெரியாது. எங்க அப்பத்தா பட்டப்பேரு விசைக்கலப்பை. அப்படின்னா மெசின்னு அர்த்தமாம். மெசின் மாதிரி வேலை செய்யறதுனால அப்படி ஒரு பேரு.

பொன்வண்டு said...

வாங்க ஆயில் !!!

அப்படியா? நல்லது ... தெய்வீகச்சிரிப்பய்யா உங்கள் சிரிப்பு :)))

பொன்வண்டு said...

ஆமாங்க கமுதியில் தான்... பருத்திவீரன்ல கூட பொணந்தின்னின்னு ஒருத்தர் வருவார்.. அவர் மாதிரி .. :)

Anonymous said...

நல்லாத்தேன் பேர் வைச்சிருக்காக :):)

பொன்வண்டு said...

வாங்க அம்மிணி அக்கா !!

இன்னும் இருக்கு இப்போதைக்கு ஞாபகம் வரலை :)