Monday, June 23, 2008

(கு)ரங்கும் ஜிலேபியும்


நானானி என்னை ஜிலேபி பிழியச் சொல்லியிருந்தாங்க. பதிவுகள் படிக்கிறதும் கொஞ்சம் குறைஞ்சதால எனக்கு இது என்ன விளையாட்டுன்னே புரியல. சரி ஜிலேபி பத்தி ஒரு மொக்கை போடணும்னு நானாகவே முடிவு பண்ணிக்கிட்டு ஒரு மொக்கைக் கதை.

பெண்பார்க்க வந்திருந்த பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மங்களம் மாமி இனிப்பு வகைகளைக் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். சன்னலில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பாமாவுக்குப் பையனைப் பிடித்திருந்தது. சட்டென மங்களம் உள்ளே வந்து "பாமா, இதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குக் கொடும்மா" என்று காபி கோப்பைகள் இருந்த தட்டைத் தந்து விட்டுப் போனாள்.

குனிந்த தலை நிமிராமல் எல்லோரிடமும் காபி கோப்பைகளைக் கொடுத்த போது தான் கவனித்தாள். தன் அம்மா அவர்களுக்குப் பரிமாறிய இனிப்பு வகையறாக்களில் ஜிலேபியும் இருந்தது. உள்ளே வந்த பாமா அம்மாவைப் பார்த்து மெதுவாக அழுத்தமாகக் கேட்டாள்.

"ஜிலேபியை எதுக்கு அவுங்களுக்குக் கொடுத்தாய்?"
"ஏண்டிம்மா? நீதானே அவங்களுக்குக் கொடுக்கலாம்னு நேத்து இனிப்புப் பண்டமெல்லாம் வாங்கிண்டு வந்தாய்?"
"வந்தேன். ஆனால் நான் ஜிலேபி வாங்கிண்டு வரலை"
"அப்புறம் மேசையில் தட்டில் இருந்த ஜிலேபி??"

பாமா மங்களத்தின் காதில் சொன்னாள்.
"அடிப்பாவி இப்படியா செய்வாய்?" மெதுவாக கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டு "ஐயையோ மாப்பிள்ளைப் பையன் வேறு ருசிச்சி சாப்பிடுறானேடி!!!" என்று பதட்டப்பட்டாள்.

சற்று நேரத்தில் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்து, பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு பிள்ளையாண்டானின் அப்பா பாமாவிடம் "குழந்தே! ஜிலேபி நீயே செய்தாயோ? ரொம்ப நன்னாயிருந்தது"ன்னு சொன்னதும் பாமாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆனதும் கணவன் ஸ்ரீதர் பிறந்தநாள் வந்தது.

"ஏண்டி என் பிறந்தநாளுக்கு நீ ஜிலேபி செஞ்சு தர்றியா? உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தபோது சாப்பிட்ட ஜிலேபி இன்னும் தொண்டையிலேயே இருக்கிறதடி. நீதானே செய்தாய் அந்த ஜிலேபியை? ஜிலேபி செய்யணும்னா நம்மகிட்டே மாவு பிழிய உரல் இல்லியே?"

"பரவாயில்லை. பண்ணிரலாம்"

"உரல் இல்லாம எப்படிப் பண்ணுவாய்? இடியாப்ப உரலில் பண்ணலாம்னு சொல்றாயோ? ஜிலேபி ரொம்ப ஒல்லியா வருமோன்னோ?"

"அசடாட்டம் பேசாதேள். சர்க்கரைப் பாகு தயார் பண்ணிட்டாப் போதும். நீங்க கடையில் போய் ஒரு இருபது முறுக்கு மட்டும் வாங்கிண்டு வாங்கோ. கொஞ்சம் கட்டையா இருக்கிறதா வாங்கிண்டு வாங்கோ"

"முறுக்கு எதுக்கு இப்போ? ஜிலேபிதானே வேணும்னு கேட்டேன்"

"ஐயோ! ஜிலேபி செய்யத்தான் முறுக்கு"

"புரியறமாதிரி சொல்லேண்டி"

"ஈஸ்வரா! எனக்கு ஜிலேபியும் செய்யத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. நீங்க என்னைப் பெண் பார்க்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னால தீபாவளிக்குப் பண்ணின முறுக்கும், குலோப்ஜாமூன் செய்து மிஞ்சிய சர்க்கரைப்பாகும் மீதமிருந்தது. பக்கத்து வீட்டு வாண்டு ரங்கு அதையெல்லாம் பாகுல போட்டு ஊற வச்சுட்டான்.அதைப் போய் எங்கம்மா ஜிலேபின்னு எடுத்து உங்களுக்குக் கொடுத்துட்டா. நீங்களும் அந்த ஜிலேபியைப் போய் ஆஹா ஓஹோ புகழ்றீங்களே?"

ஸ்ரீதர் முகத்தில் ஈயாடவில்லை.

20 comments:

ஜெகதீசன் said...

:))
சூப்பர் ஜிலேபி...

Yogi said...

நன்றி ஜெக் ! :)

Yogi said...

நன்றி ஜெக் ! :)

Surenther said...

Ha ha Nice Story

நிஜமா நல்லவன் said...

நீங்க நன்னா யோசிச்சி கதை சொல்லுறேளே? சூப்பர் கதை போங்கோ!

Thamiz Priyan said...

சூப்பரா கதை இருக்கு பொன் வண்டு :))))

Yogi said...

நன்றி சுரேந்தர் & நி.ந !! :)

Yogi said...

நன்றி தமிழ்பிரியன் அண்ணே !! பொன்னியின் செல்வனில் மும்முரமா இருக்கிறப்போ இதுக்கும் நேரம் கிடைச்சிருக்கே உங்களுக்கு :))))

ஆயில்யன் said...

இப்ப படத்துல இருக்கற ஜிலேபி முறுக்கு ஜிலேபியா
இல்ல
ஜிலேபி ஜிலேபியா???

:)))

(இதுக்கும் கூட ஏங்க அந்த பையன் மூஞ்சை சுழிக்கிறான் அவனுக்கு ஜிலேபின்னா பிடிக்காதா???_

Yogi said...

வருகைக்கு நன்றி ஆயில்யன் !

// இதுக்கும் கூட ஏங்க அந்த பையன் மூஞ்சை சுழிக்கிறான் அவனுக்கு ஜிலேபின்னா பிடிக்காதா???_
//

ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா ... கண்ணைக் கட்டுதே !!! :)

மங்களூர் சிவா said...

/
ஸ்ரீதர் முகத்தில் ஈயாடவில்லை.
/

படிச்ச எங்க முகத்திலயும்தான்பா பொன்வண்டு

மங்களூர் சிவா said...

நீங்க நன்னா யோசிச்சி கதை சொல்லுறேளே? சூப்பர் கதை போங்கோ!

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு கதை.

Yogi said...

வாங்க சிவா நன்றி :)

நானானி said...

என் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து
நீங்க போட்டது மொக்கையா அல்லவே அல்ல..சக்கப்போடு போட்ட அருமையான 2இன்1 கதை+ஐடியா!!!
என்னை மாதிரி பலகாரசோம்பேறிகளுக்கு நல்ல வழிகாட்டி உங்க பதிவு. ஆஹா...முறுக்கை வாங்கி ஜீராவில் போட்டால்...ஜிலேபி!!!செம ஈஸி!!இதை நான் யார் வாயிலும் போட மாட்டேன்...என் வாயிலேயே போட்டுக்குவேன். அக்காங்!!!
ஜிலேபின்னதும் எத்தனை விதமான
கற்பனைகள்!!!!!

நானானி said...

பொன்வண்டுக்கு என் இந்த வார
பூச்செண்டு!!!!!

Yogi said...

வாங்க நானானி :)))))))

பூச்செண்டுக்கு நன்றி :)

கண்மணி/kanmani said...

ஆஹா...[கு]ரங்கு ஜிலேபி ஜூப்பர்... ஜிலேபி பிழிய இப்படியொரு சுலபமான வழியா?

Yogi said...

வாங்க டீச்சர் !! நன்றி !! தலையே காட்டுறதில்லை இப்பவெல்லாம் ??? :))))

ராமலக்ஷ்மி said...

கதை நல்லாருந்தது. ரெட்டைவால் (கு)ரங்குவின் ஜிலேபியும் சூப்பர். புள்ளையார் புடிக்க கொரங்கா முடிஞ்சுதுன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. (கு)ரங்குவின் முறுக்கு ஜிலேபியானதும் அப்படித்தான் இல்லீங்களா:))!

Yogi said...

நன்றி இராமலக்ஷ்மி !!! :)