Thursday, November 12, 2009
தமிழில் பட்டையைக் கிளப்பும் டிஸ்கவரி சேனல் !!
டிஸ்கவரி தொலைக்காட்சி இப்பொழுது தமிழில் பட்டையைக் கிளப்புவது தெரியுமா உங்களுக்கு?? அலுத்துப் போன நகைச்சுவைகளும், உலுத்துப்போன நடன நிகழ்ச்சிகளையும் பார்த்து சலித்திருந்த நேரத்தில் அதிரடியாக தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது டிஸ்கவரி தொலைக்காட்சி.
டிஸ்கவரி தொலைக்காட்சியை அதன் அறிவியல் மற்றும் விலங்குளின் வாழ்க்கைமுறை பற்றிய நிகழ்ச்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். பின்னே சிங்கம், புலி, சிறுத்தைகள் மானைத் துரத்திச் சென்று வேட்டையாடுவதை சன் தொலைக்காட்சியில் காணமுடியுமா?
கிராமங்களில் டிஸ்கவரியின் ரசிகர்கள் குறைவானாலும், சிறு நகரங்களில் அதிகம். மொழிபுரியாவிட்டாலும் காட்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். எனவே இவர்களை முற்றிலும் கவர்வதற்காக தன் ஒளிபரப்பை இந்தியாவின் மாநில மொழிகளிலும் தொடங்கியிருக்கிறது.
முதலில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மட்டும் தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய டிஸ்கவரி இப்பொழுது மறுஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ழ்சிகளால் 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சியாக மாறியிருக்கிறது. (Discovery Kids தவிர). பாராட்டபட வேண்டிய விடயம் அவர்களின் மொழிமாற்றம். முடிந்தவரையில் ஆங்கிலக்கலப்பின்றி தமிழில் பேசுகிறார்கள்.
Man vs Wild, Nature's great events, Escaped, Expedition wild, Survivor man, Discover India இன்னும் பல நிகழ்ச்சிகளைத் தமிழில் அருமையாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்புகிறார்கள். இவர்களைப் பார்த்து Nat Geo, Animal Planet ஆகியோரும் தமிழில் ஒளிபரப்பினால் ( Zee Studio ஆங்கிலத்தில் சப்டைட்டில் போட்டதைப் பார்த்து Star Moviesம், HBOவும் செய்தது போல) அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை மாணவர்கள், குழந்தைகளும் காணும் வாய்ப்புகள் அதிகமாகும்.
டிஸ்கவரி தமிழ், கேபிள் தொலைக்காட்சியிலும், DTHலும்தெரியுதுங்க. டிஸ்கவரி பாருங்க. அறிவை வள்ர்த்துக்கோங்க. :)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
டிஸ்கவரி தமிழில் தெஇர்வது பற்றி நான் ஏற்கனவே பதிவெழுதியிருந்தேன். ஆனால் கொடுமை சன் டி.டி.எச்சில் ஆங்கிலத்தில் தான் வருகிறது. தமிழில் பெறுவதற்கு என்ன செய்யலாம் என யாராவது தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
நீங்கள் சொன்ன மாதிரி அருமையான தமிழ் மொழிமாற்றம்.
“டிஸ்கவரி“ தொலைக்காட்சி நிறுவனத்தினர் தமிழில் நிகழ்ச்சி வழங்குவது பாராட்டுக்குரியது.
தமிழ் வலைப்பதிவர்கள் “டிஸ்கவரி” நிறுவனத்தினரை தொடர்புகொண்டு பாராட்டுக்களை தெரிவியுங்கள்...
Oh .. is it. Great.
//ஆனால் கொடுமை சன் டி.டி.எச்சில் ஆங்கிலத்தில் தான் வருகிறது. தமிழில் பெறுவதற்கு என்ன செய்யலாம் என யாராவது தெரிவித்தால் நன்றாக இருக்கும்.//
appuram neenga sun tv pakka matteenga. rating irangidum....
///appuram neenga sun tv pakka matteenga. rating irangidum....// இப்பவே அந்த கருமத்தைப் பார்க்குறது இல்ல
Post a Comment