கூகுள் கொஞ்சம் கொஞ்சமாக தனது சேவைகளை பிராந்திய மொழிகளில் மாற்றி வருகிறது. அதன் சமுதாய வலைத்தளமான ஆர்குட்டில் இப்போது எல்லாம் தமிழில் தெரிகிறது. நீங்களும் தமிழில் வேண்டுமானால் 'Settings -> Language -> தமிழ்' தேர்வு செய்யவும். ஆனால் இது தனித்தமிழ் அல்ல. தமிங்கிலம் தான். தனித்தமிழ் வேண்டி கூகுளுக்குத் தெரிவிக்க ஏதேனும் வழி உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும்.
10 comments:
Thanks for the info
good information
வருகைக்கு நன்றி சதுக்கபூதம் மற்றும் டெல்பின்
தகவலுக்கு நன்றி. நானும் மாத்திட்டேன்.
வருகைக்கு நன்றி சீனு ..
பதிவோட தலைப்பு 'தமிழில் ஆர்குட் !' அப்படின்னு இருந்தா ரொம்பவே பொருத்தமா இருந்திருக்கும். அவசரத்தில் கொஞ்சம் மாத்தி எழுதிட்டேன். :)
இதில் இப்படியும் ஒரு நண்மை போலும்,இன்று தான் கவனித்தேன்.
என்னுடைய வின்98 கணினியில் கூகிள் டாக்கில் தமிழில் தட்டச்சமுடியாது.சற்று முன் ஒரு நண்பர் கூப்பிட்டபோது தட்டச்சினால் அழகாக தமிழில் வருகிறது.
வாழ்க கூகிள் சேவை.
நல்ல சேதி தான்..கூகுள் தன்னார்வ மொழிபெயர்ப்புப் பக்கம் http://www.google.com/transconsole/Welcome.html - ல் ஆர்க்குட் தமிழாக்கத்துக்கான வாய்ப்பைக் காணோம். இந்தியாவில் ஆர்க்குட்டின் வளர்ச்சி பெருமளவு இருப்பதால் தமிழ் உட்பட்ட இந்திய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கூகுளே தொழில்முறையில் மொழிபெயர்த்து இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்வையிட்ட வரைக்கும் பரவாயில்லை ரக தமிழாக்கம் தான். இதை விடக் கொடுமையான மொழிபெயர்ப்புகளைப் பார்த்து இருக்கிறேன். நல்ல தொடக்கம்.
ஆர்க்குட் தமிழாக்கத்துக்கான பரிந்துரைகளை இந்த ஆர்க்குட் குழுமத்தில் வரவேற்றிருக்கிறது.
வருகைக்கு நன்றி வடுவூர் குமார்! தவறாம வந்துவிடுகிறீர்களே ! காக்கா விளையாட்டு விளையாடத்தானே ;)
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ரவிசங்கர் .
நானும் அந்த ஆர்குட் குழுமத்தில் சேர்ந்துவிட்டேன்.
Post a Comment