Monday, September 17, 2007
நாமும் பங்கேற்கலாமே 'மதுரைத் திட்டத்தில்' !
வலைப்பதிவர்களில் நிறையப் பேருக்கு மதுரைத் திட்டம்(Project Madurai) பற்றித் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மதுரைத்திட்டம் என்பது தமிழில் இருக்கும் நூல்களை எல்லாம் மின் தொகுப்பிற்கு மாற்றுவதாகும். அதாவது புத்தகங்களில் இருக்கும் நூல்களைக் கணினியில் படிக்க வகை செய்வதாகும். ஏற்கனவே பல தன்னார்வலர்கள் பங்கேற்று நிறைய நூல்கள் மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இப்போது இத்திட்டம் எல்லோரும் பங்கெடுக்கும் வகையில் DP-PM (Distriputed Proof Reading - Project Madurai) என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதன்மூலம் ஆர்வம் மிக்க எவரும் பங்குகொண்டு நூல்களை மின் தொகுப்பாக மாற்றும் இத்திட்டத்திற்கு உதவலாம். நாம் நேரடியாக தட்டச்சுதல் மற்றும் ஏற்கனவே பிறர் தட்டச்சு செய்த பக்கங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடலாம்.
இத்திட்டத்தில் பங்கேற்பது மிகவும் சுலபம்.
1. முதலில் http://groups.yahoo.com/group/pmadurai/ என்ற சுட்டிக்குச் சென்று மதுரைத்திட்டம் மடற்குழுவில் உறுப்பினராகுங்கள்.
2. பிறகு http://www.projectmadurai.org.vt.edu - யில் ஒரு பயனர் கணக்கு துவங்க வேண்டும்.
3. பின்னர் தற்போது மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்படும் நூல்களில் நமக்கு விருப்பமான நூலைத் தெரிவு செய்து அதில் நமது பங்களிப்பாக தட்டச்சு/சரிபார்த்தல் தேர்வு செய்ய வேண்டும்.
4. பின்னர் அந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் படங்களாகத் தோற்றமளிக்கும். அவற்றைப் பார்த்துத் தட்டச்சு செய்ய வேண்டும்.
5. ஏற்கனவே பிறர் தட்டச்சு செய்த பக்கங்களையும் இதே முறையில் சரிபார்க்கலாம்.
முழுக்க முழுக்க ஒருங்குறியே பயன்படுத்தப்படுகிறது. எ-கலப்பை அல்லது தமிழ்99 தட்டச்சு முறை தெரிந்த எவரும் பங்கேற்று நம்மால் இயன்றதைச் செய்யலாம்.
நாம் ஒரு பக்கத்தைத் தட்டச்சு செய்யும் போது அந்தப் பக்கம் மற்றொரு பயனருக்குத் தோற்றமளிக்காது. ஒரு பக்கம் என்றால் நிறைய இருக்குமோ என எண்ண வேண்டாம். அதிகபட்சம் இருபது முதல் இருபத்தைந்து வரிகளே உள்ளன. ஒரு பக்கம் தட்டச்சு செய்ய 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. (நான் கொஞ்சம் மெதுவாகத் தட்டச்சுவேன்).
கீழே உள்ள நூல்கள் தற்சமயம் மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு நூலின் ஒவ்வொரு பக்கமும் படங்களாகத் தெரியும். நாம் அவற்றைப் பார்த்து தட்டச்சு செய்து சேமிக்க வேண்டும்.
ஒரே சமயத்தில் இரண்டு பேர் ஒரே பக்கத்தைத் தட்டச்சிட முடியாது. கீழே பார்க்கவும்.
மதுரைத்திட்டத்தில் தொகுக்கப்படும் நூல்கள் விக்கிநூல்களிலும் தொகுக்கப்படுகின்றன.
தமிழார்வமிக்க பதிவர்கள் பங்கேற்கலாமே!
ஏற்கனவே மின் தொகுப்பாக மாற்றப்பட்ட நூல்களின் தொகுப்பு இங்கே.
மேலும் விபரங்களுக்கு மதுரைத்திட்டத்தின் வலைப்பதிவைப் பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்ல பயனுள்ள தகவல் பொன்வண்டு
சத்தியா
வருகைக்கு நன்றி குசும்பன் மற்றும் சத்தியா.
நல்ல தகவல் மாத்திரமல்ல, இது மக்களை சென்றடையவேண்டும். டாக்டர். கல்யாண சுந்தரத்தை சில ஆண்டுகளின் முன் கனடிய வானலை ஒன்றில் மதுரைத்திட்டம் பற்றி பேட்டி காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி காரூரன் !
Post a Comment