Monday, September 10, 2007

நாகர்கோவில் நண்பர்கள் - 2

கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சிணை கேட்டால் நமக்கு மயக்கம் வரும் அல்லது வயிறெரியும். பின்னே கொஞ்ச நஞ்சமா கொடுக்கிறார்கள். லட்ச,லட்சமா அதுவும் பத்தின் மடங்கில்தான். இது குறித்து என் அறை நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவனிடம் "அப்புறம் நீதான் நல்லா செட்டில் ஆயாச்சே! பொண்ணு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான?"ன்னேன்.
"நான் எதுக்கு தேடிப் போகணும். எல்லாம் தானா வரும். இப்போதைக்கு என்னோட மதிப்பு எழுபது லட்ச ரூபாய்."ன்னு சிரிச்சான்.
"என்னது எழுபது லட்சம்?"
"எனக்குக் கிடைக்கும் வரதட்சணை"
"டேய்ய்ய்ய்ய்ய்ய்... அம்புட்டாடா குடுப்பாங்க" நம்பமுடியாமல் கேட்டேன்.
"ஆமா சும்மாவா மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிறோம்ல"
"அதுக்காக எழுபது லட்சம் எவண்டா குடுப்பான். சும்மா கதை விடாதே"
"அடப்போடா.. நான் எதுவுமே கேடக வேண்டியதில்லை. எல்லாம் தானா வரும். முப்பது லட்சம் ரொக்கம். ஒரு நாப்பது லட்சத்துக்கு சொத்து. ஒரு கார். ஒன்றரை கிலோ நகை"

நான் மயங்கிவிட்டேன். இன்னொரு நண்பன் தொடர்ந்தான்.

"என் அக்காவுக்கு நாங்கள் பார்த்தது துபாய் மாப்பிள்ளை. நகை இரண்டு கிலோ. எங்க வாழைத்தோப்பிலும், இரப்பர் தோப்பிலும் ஒரு பகுதி. அதோட மதிப்பு ஐம்பது லட்சம். முப்பது லட்சம் ரொக்கம். இவ்வளவும் கொடுத்தோம்". சோடா குடுத்தால் கூட தெளியாத மயக்கம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்று சொல்கிறார்கள். படிப்பறிவு அதிகம் இருந்தால் இதெல்லாம் குறையத்தான் வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.

அடுத்து நான் என் நண்பனிடம் ஒரு பிட்டைப் போட்டேன். "நான் உங்க ஊரில் கல்யாணம் செய்துக்கிட்டா என்னடா குடுப்பாங்க?". "உனக்கெல்லாம் எவன் பொண்ணு குடுப்பான் எங்க ஊருல இருந்து? எங்க பார்த்தாலும் ஏரி,குளம்னு எங்க ஊரு. கண்மாய்க்குள்ளயே ஊத்துத் தோண்டித் தண்ணியைப் பாக்குறவுங்க நீங்க. சான்ஸே இல்லை. அதே மாதிரி, பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்த்தால் அது எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பார்ப்பார்கள். அதிகபட்சம் பாளையங்கோட்டை வரைதான் எங்க லிமிட்"ன்னு கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

"அதே போல மாப்பிள்ளைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மரியாதை கொடுப்பார்கள் உங்க ஊரில். இங்கெல்லாம் அப்படியில்லை. அவரும் வீட்டில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான். உங்க ஊரில் மாப்பிள்ளை வந்தால் மாமியார் சமையல்கட்டை விட்டு வெளியே வரமாட்டார். இங்கு மாமியார் மாப்பிள்ளையின் முன்னால் கால் மேல் கால் போட்டு பரீட்சைப் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பார். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஆனால் நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். இன்னொன்னு சொல்றேன். இரண்டு பசங்க ஒரு வீட்டில் இருந்தால், அதுவும் படித்திருந்தால் அந்தக் குடும்பம் பிற்காலத்தில் கோடீஸ்வரக் குடும்பம்.வரதட்சணை அவ்வளவு வரும்." என்றான் நண்பன்.

அதே போல உறவுமுறைக்குள் திருமணம் என்றால் முகம் சுளிக்கிறார்கள். மாமா மகள், அத்தை(மாமி-ன்னு சொல்லுவார்கள் பேச்சு வழக்கில்) மகனையெல்லாம் திருமணம் செய்யும் வழக்கம் இல்லை. மாமா மகள், அத்தை மகன்களுடன் சகோதர உண்ர்வுடன்தான் பழகுகிறார்கள். அடுத்து இவர்கள் கேரளத்தில் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ அரிதாம். கேட்டால் அவர்கள் மதிக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

இவர்கள் இப்படி வரதட்சணை வாங்குவதைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சல் இப்படிப் பகல் கொள்ளை அடிக்கிறார்களே என்பதால் வந்ததா அல்லது எனக்கு இப்படியெல்லாம் கிடைக்காதே என்ற பொறாமையால் வந்த வயிற்றெரிச்சாலா என்பது தெரியவில்லை. ;) . சும்மா தமாசுக்கு. வரதட்சணை வாங்குவது கேவலம் என்பதே என் எண்ணம்.

எங்க ஊர் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். அதிகபடசம் ஒரு லட்சம் குடுப்பார்கள். அதுவும் வம்படியாகக் கேட்டால் தான். ஒரு நடுத்தரக் குடும்பம் என்றால் நாற்பது பவுன் நகை போடுவார்கள். ரொம்பப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றால் கார் கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

சரி போதும் வரதட்சணை புராணம்.

என்பீல்ட், புல்லட் போன்ற வண்டிகள் தான் இவர்களின் முதல் காதலிகள். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான இந்த ஊர்ப்பசங்களின் கனவு அவைகளாகத் தான் இருக்கின்றன. என்னதான் மலையாளப் படம் பார்த்தாலும், மலையாளம் பேசினாலும் தமிழன் என்ற உணர்வு மேலோங்கியே இருக்கிறது. சந்தேகம் இருந்தால் சென்ற இடுகையின் பின்னூட்டங்களைப் பார்க்கவும். அடுத்த விசயம் இவர்கள் மற்ற மாவட்டத் தமிழர்களை (குறிப்பாக மதுரை) "ஏய் பாண்டிக்காரா" என்று நக்கலுக்குக் கூப்பிடுவார்கள். என்ன தான் மலையாளம் பேசினாலும் இவர்கள் கேரளாவுக்குப் போனால் இவர்களும் 'பாண்டி' தான் மலையாளிகளுக்கு. பாண்டியின் அர்த்தம் என்னன்னு தெரியவில்லை. யாராவது சொல்லுங்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்கள் வித்தியாசமானவை.
'தொளையாவட்டை (எழுதியிருப்பது சரியா?)
களியக்காவிளை
தக்கலை'
முதலிரண்டும் தான் வாய்க்குள் நுழையாமல் பேஜார் செய்தவை. அடுத்துப் பழக்கமாகிவிட்டது. வேறு ஏதாவது ஊர் பெயர் இப்படியிருந்தால் சொல்லுங்கள்.

இங்கு ஊர் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளனவாம். எல்லோருக்கும் தெரிந்த திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, விவேகானந்தர் மண்டபம் தவிர நிறைய இடங்கள் உள்ளனவாம். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறையவே காணப்படுமாம். நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போவதற்குத்தான் நேரமில்லை. போய்ட்டு வந்து அதைப் பற்றியும் எழுதுகிறேன்.

நண்பர் ஜோ அவரது பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் அழகான புகைப்படங்களைப் போட்டிருக்கிறார். இங்கேயும் போய்ப் பாருங்கள்.

18 comments:

வடுவூர் குமார் said...

அப்பாடியோவ்!!!
போதுமாங்க இவ்வளவு.
வந்ததுதான் வந்தேன் அந்த காக்காய் கேம் விளையாடிட்டு போறேன்.

Yogi said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார் .. உங்களை மாதிரி சின்னப் பசங்களுக்காகத் தான் அந்த விளையாட்டை இங்கே போட்டிருக்கேன் :))

ஜோ/Joe said...

பொன்வண்டு,
என்னுடைய பதிவுக்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.

வரதட்சணை அதிகம் என்பது உண்மை தான் .ஏனென்று எனக்கும் விளங்கவில்லை..ஆனால் மாப்பிள்ளை வீட்டில் இவ்வளவு வேண்டும் என்று சொல்வதை விட ,பெண் வீட்டிலிருந்து இவ்வளவு தருகிறோம் என்று பணத்தை கூட்டிக்கொண்டே செல்வது தான் அதிகம் .கண்டிப்பாக இது மாட்டை விலை பேசுவது மாதிரி தான் .ஆனால் ஒன்று வரதட்சினை குறைந்த மற்ற இடங்களைப் போல திருமணத்துக்கு பின் காசு கேட்டு தொல்லை ,கேஸ் ஸ்டவ் வெடிப்பது இங்கு குறைவு தான்.

தமிழுணர்வு பற்றி சொல்ல வேண்டுமென்றால் ,குமரி மாவட்டம் சுதந்திரத்துக்குப் பின் கேரளாவோடு இணைக்கப்பட்டு ,பின்னர் குமரி மாவட்டத்து மக்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தமிழகத்தோடு இணைக்கக் கோரி பெரிய இயக்கமே நடத்தி ,பல போராட்டங்களுக்கு பின்னரே குமரி தமிழகத்தோடு இணைக்கப்பட்டது நீங்கள் அறிந்திருக்கலாம் . குமரி மாவட்டம் ஜீவா ,கவிமணி போன்ற தமிழறிஞர்களையும் கலைவாணர் ,அவ்வை சண்முகம் போன்ற கலை மேதைகளையும் கொடுத்த பூமி.

ஊர் பெயர்களைப் பற்றி சொல்லும் போது ,எப்படி மதுரை பக்கம் 'பட்டி' இருக்குமோ ,அது போல குமரி மாவட்டத்தில் 'விளை' என்று முடியும் ஊர்களே அதிகம் (உதாரணம் : சொத்தவிளை ,பனவிளை ,அம்மாண்டி விளை)

பாரதி தம்பி said...

அம்புட்டு ரூவா குடுப்பாங்களா என்ன..? ஆச்சர்யம்தான். ஆனால், நிச்சயம் இந்த வகையினரின் சதவிகிதம் குறைவாகவே இருக்கும். பெரும்பான்மையோர் எப்போதும் போல திருமண செலவுகளை சமாளிக்கத் தடுமாறும் நடுத்தர வர்க்கத்தினராகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Yogi said...

வருகைக்கு நன்றி ஜோ மற்றும் ஆழியூரான் ..

ஆழியூரான், என் நண்பன் சொன்ன இன்னொரு உதாரணத்தையும் கேளுங்கள். அவனது உறவினர் ஒருவர் பள்ளியில் ப்யூன் வேலை பார்ப்பவராம். மாதவருமானம் ஐயாயிரத்துக்குள் தானாம். அவர் திருமணம் செய்த போது கிடைத்த வரதட்சணை எட்டு லட்சமாம்... எங்க போய் முட்டிக்கிறது?

Anonymous said...

//அம்புட்டு ரூவா குடுப்பாங்களா என்ன..? ஆச்சர்யம்தான். ஆனால், நிச்சயம் இந்த வகையினரின் சதவிகிதம் குறைவாகவே இருக்கும். பெரும்பான்மையோர் எப்போதும் போல திருமண செலவுகளை சமாளிக்கத் தடுமாறும் நடுத்தர வர்க்கத்தினராகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். //

You are right Mr.Aaliyouuran, the percentage is less. Some things are exagrated. the amount they are telling is included the property value and all. because most of the families are having one or two kids. so the property will be equally distrtibuted for them. And all the families are giving equal share to all kids regardless girl or boy.

But dowry relatives abuses and domestic violences are very less.

Some other interesting place names

Monday Market, Friday Market,
Mylode, Villukuri, Unna malai kadai,

Victor Suresh said...

சேரநாட்டுக்காரர்களுக்கு நாம் பக்கத்திலுள்ள பாண்டிய நாட்டுக்காரர்கள். அதிலிருந்து வந்ததுதான் பாண்டி பிரயோகம்.
நல்ல நீர் வளம், சுமாரான நில வளம், மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பூமி என்பதாலோ என்னவோ எப்போதும் வீசும் தென்றல், இரண்டு பருவ மழை என்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக எங்கும் பசுமை, பெருமை பேசிக் கொள்ள பல தலைவர்கள், கலைஞர்கள், இத்தனையும் இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டிருந்த வரதட்சிணை, குறிப்பிடாத ஈவ் டீசிங், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமே சாபக்கேடான சுகாதாரமின்மை இவ்வட்டாரத்தின் மேல் பெரிய கரும்புள்ளிகள்.

Education without values என்பதை நிலை நாட்டும் மாவட்டம் குமரி மாவட்டம்.

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி மற்றும் ஏவிஎஸ்

Anonymous said...

அதே போல மாப்பிள்ளைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மரியாதை கொடுப்பார்கள் உங்க ஊரில். இங்கெல்லாம் அப்படியில்லை. அவரும் வீட்டில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான்.
indeed - (anupavam) don't try...

திருமணத்துக்கு பின் காசு கேட்டு தொல்லை
this is fact..
மாப்பிள்ளை பார்த்தால் அது எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பார்ப்பார்கள். அதிகபட்சம் பாளையங்கோட்டை வரைதான் எங்க லிமிட்"
this also true.. onnu, Tiruvanandapuram or as he told upto palay
some people aaaa.... enkirarkal..
dowry kku aasai padatheerkal..
palakka valakkam konjam marupadum
Nanjil(KK.Dist.) once under the control of Kerala kingdom..but Palay was under the control of Pandiya Mannarkal.. so i think we are all being called Pandiyarkal(pandi Nadu)..
so they call `pandikaran'..

Yogi said...

வருகைக்கு நன்றி அனானி.

// some people aaaa.... enkirarkal.. //

:O

ஜே கே | J K said...

அந்த கேம் எப்படிங்க விளையாடறது.

அந்த குருவி கொத்தி முழுங்கிடறது.

Yogi said...

// அந்த கேம் எப்படிங்க விளையாடறது.

அந்த குருவி கொத்தி முழுங்கிடறது. //

Use arrow keys

Anonymous said...

///அடுத்து இவர்கள் கேரளத்தில் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ அரிதாம். கேட்டால் அவர்கள் மதிக்கமாட்டார்கள் என்கிறார்கள்.///

ஆனால் நாயர் மற்றும் ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு!

//நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போவதற்குத்தான் நேரமில்லை. போய்ட்டு வந்து அதைப் பற்றியும் எழுதுகிறேன்.//

சீக்கிரம் போய்ட்டு வந்து நம்ம ஊரைப் பற்றி ஒரு லைவ் ரிப்போர்ட் கொடுங்க :-)

அப்புறம் அது தொளையாவட்டை இல்லை தொலையாவட்டம் :-)

Yogi said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அப்பாவி !

பாரதி தம்பி said...

கீழ இருக்குற குருவி-காக்கா வெளாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.

Yogi said...

வருகைக்கு நன்றி டெல்பின், ஆழியூரான் மற்றும் JK ..

JK, ஆழியூரான் உங்களை மாதிரி நிறையப்பேர் அந்த விளையாட்டு விளையாடுறதுக்கே இங்க வாராங்க :)

Anonymous said...

'Education without values என்பதை நிலை நாட்டும் மாவட்டம் குமரி மாவட்டம்'

very true.interms of the number of people giving so much dowry, i do beleive the percentage is fairly high,and girls never ever say 'this is humiliating let me not marry this person'.yes eve teasing is enormous and in professional colleges onceupon a time, people from nagercoil were overall feared ,particulalry by girls.

Yogi said...

வருகைக்க்ந் நன்றி அனானி. பெண்களைக் கேலி செய்யும் விசயம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நண்பர்களிடம் கேட்கிறேன்.