கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நினைத்து நான் குழம்பிய குழம்பல்கள் இங்கே.
சரி. முதலில் கடவுள் இருக்கிறார் என ஏன் நம்பவேண்டும் என்ற காரணங்களைப் பார்ப்போம்.
1. மனித உடலை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்பும்? என்னதான் பரிணாம வளர்ச்சி அது இது என்றாலும் இவ்வளவு கனகச்சிதமாக எப்படி சாத்தியமாகும்?
2. உலகில் எவ்வளவு புராணங்களும் இதிகாசங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் பொய் சொல்கின்றனவா? நம் முன்னோர்கள் அந்த அளவு நம்மை ஏமாற்றுவார்களா என்ன?
3. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்னால் ஓர் இளைஞர் யோகாசனத்தின் மூலம் புவி ஈர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் நிற்பதைக் காட்டினார்கள். சாதாரண நமக்குத் தெரிந்த யோகாவின் உதவியால் இந்த அதிசயங்களைச் செய்ய முடிகின்றதெனில், நமக்குத் தெரியாத எவ்வளவோ கற்றிருந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அவர்களால் வானத்தில் கூட பறந்திருக்க முடியும் அல்லவா?
ஏன் கடவுள் இல்லையென நினைக்க வேண்டும்?
1. கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்றால் அவர் எல்லா மனிதர்களையும் சமமாக அல்லவா நடத்தவேண்டும். ஏன் சிலர் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் இருந்தால் அவர்களுக்கு உதவலாமே? ஏன் செய்வதில்லை.
மனிதன் என்பவனும் ஒரு விலங்குதான். ஆனால் அவனது வாழ்க்கைமுறை வேறு. அவனிடம் பணமில்லை எனவே கஷ்டப்படுகிறான். எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.
2. கொடுமையான மரணங்கள் ஏன் நடக்கின்றன. உதாரணம் கும்பகோணம் தீ விபத்து, ஏர்வாடி தீ விபத்து. சாதாரண மனிதர்களாலேயே தாங்க முடியாத அந்த நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன? அதே போல் கோவிலுக்குச் சென்று திரும்பும் போதும் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன? தன்னைத் தரிசிக்க வந்தவனை பத்திரமாக வீடு கொண்டு சேர்ப்பது கடவுளின் பொறுப்பல்லவா?
இவையும் தனிமனிதனின் கவனக்குறைவாலும், தற்செயலாகவும் நிகழ்பவை. எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
3. இந்து சமயத்தில் (பிற சமயங்களிலும்) ஏன் இவ்வளவு சாதிப்பாகுபாடுகளும் சக மனிதனை இழிவாக சித்தரிக்கும் நிலையும் உள்ளது? கடவுள் இருந்தால் ஒரு வார்த்தை "என் முன் எல்லோரும் சமம். சாதிப் பாகுபாடுகள் கூடாது" என்று சொன்னால் அவரைத் தொழுபவர்கள் கேட்டுக் கொள்வார்களே? ஏன் செய்வதில்லை?
அட போப்பா! கடவுள் என்பதே மனிதன் தோற்றுவித்தது தான். அப்புறம் எப்படி கடவுள் வந்து நேரில் சொல்வார்?
4. நல்லவர்கள் கடைசி வரை கஷ்டப்பட்டு வாழ்ந்து முடிவதும், கெட்டவர்களும் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிப்பவர்களும் சொகுசாகப் புகழோடு வாழ்வதும் ஏன்?
பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். கடவுளாம் மண்ணாங்கட்டி.
5. உலகத்தில் ஏன் இத்தனை மதங்கள் இருக்கின்றன? எந்தக் கடவுள் உண்மை? இறந்தபிறகு சொர்க்கம், நரகம் என்றல்லாம் சொல்கிறார்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவனுக்கு ஒரு சொர்க்கம், கிறிஸ்தவருக்கு தனி சொர்க்கமா?
வெளங்கிரும்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விடுத்து கடவுளை நாம் எப்படி define செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பிறகு பார்க்கலாம்.
11 comments:
கடவுளை நம்பாவிட்டால் அவர் தண்டிப்பார் என்ற ஒரு பயமும் மனிதர்களை ஆட்டுவிப்பதால் இந்த கேள்விக்கு நிரந்தர தீர்வு என்பது கேள்விகுறிதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதாப் !
1. கன கச்சிதம் இல்லாதவை அழிந்து விட்டன. மனிதனில் மட்டுமல்ல, அனைத்து உயிர்களிலும் அப்படித்தான்.
2. அவர்கள் பொய் சொல்ல வில்லை. தவறாக உணர்ந்ததை தக்க கதைகளாக கொடுத்தார்கள், அவ்வளவு தான். மனிதன் மட்டும் இவ்வாறு பதைகளை கற்பிக்க வில்லை என்றால் கற்காலத்தைத் தாண்டி இருப்போமா என்பது ஐயமே.
3. பயிற்சி மூலம் வருவதையும்,, கடவுளையும் குழப்பிக் கொள்ளத் தேவை இல்லை.
ஆனால் எதற்காக இவையெல்லாம் உருவாக வேண்டும் என்ற மிக அடிப்படையான கேள்விக்கு விடை தெரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகவை மைந்தன்.
// ஆனால் எதற்காக இவையெல்லாம் உருவாக வேண்டும் என்ற மிக அடிப்படையான கேள்விக்கு விடை தெரியவில்லை. //
ஆமாம்.மிகவும் சரி
கடவுள் என்று ஒருவர் இருந்தால் தான் தலைவன் என்ற ஒரு அமைப்பையே மக்கள் ஏற்ப்பார்கள் ஒருவன் தலைவனாகவேண்டுமானால் கடவுள் இருந்தே ஆகவேண்டும் அப்போது தான் மற்றவர்களை அவனுக்கு கீழ் கொண்டுவரமுடியும்
புரிந்து விட்டால் நீ நம்பமாட்டியே அதான் புரியாததுனு சொல்லி இருக்காங்க
இன்னிக்கு அம்மா பக்வான் கனவன் மனைவியோடு அமர்ந்துகொண்டு வரதீட்ச்சை மாலை விற்க்கமுடியாதே வின் டி வி யில் பாஸ்ட்டர் பேய் ஓட்ட முடியாதே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புரட்சித்தமிழன். சாமியார் எல்லாருமே ப்ராடுதான். மக்களை எளிமையா இருக்கச் சொல்லிட்டு ஏசி வீட்டுலயும், ஏசிகாருலயும் சுத்துற ப்ராடுப்பசங்க. இது குறித்து தனியா ஒரு பதிவே போடலாம்.
கடவுளை அறிய செய்யப்படும் முயற்சியை வரவேர்கிறேன்.
இது சம்பந்தமாக நான் எழுதிய ஒரு கட்டுரை 'நானும் கடவுளும்' என்றே பெயரில் என் வலைப்பதிவில் காணலாம். உங்களுக்கு நேரமிருந்தால் படிக்கவும் : http://mangaiival.blogspot.com/
வருகைக்கு நன்றி மங்கை!. தங்கள் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறேன். :)
NICE
Post a Comment