Monday, February 11, 2008

குமட்டுல குத்துறது எப்படி?

நாம அடிக்கடி ஒரு வாக்கியத்தைக் கேட்கிறோம். அதுதான் 'குமட்டுலயே குத்திருவேன்'ன்னு. அது என்னாங்க குமடு?? அப்படி எதாவது உறுப்பு நம்ம உடம்பிலே இருக்குதா? அது தான் இல்லை. குமட்டில் குத்துவது எப்படி என்று சொல்லித்தாரேன் கேளுங்க. நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்தி ஆளுக்குத் தகுந்த மாதிரி பூரிக்கட்டை, தோசைக்கரண்டி கலவரங்களிலிருந்து தப்பியுங்கள்.

1. கையை சொடுக்குபோடுவது போல் வைத்துக் கொள்ளுங்கள். கட்டைவிரல் ஆள்காட்டி விரலுடன் சேர்ந்திருக்க வேண்டும்.
2. கணவன்/மனைவி/காதலன்/காதலி கன்னத்துக்கும் தாடைக்கும் இடையில் சரியாக கையைப் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு குத்தவும்.
3. எல்லா விரல்களையும் மடக்கிக் கொண்டு குத்து விட்டால் அது குமட்டுக்குத்து அல்ல. கும்மாங்குத்து.

இவ்வளவு தாங்க.

சரி. எப்பல்லாம் இதை பயன்படுத்தலாம்.

கணவனாக இருந்தால் மனைவி அம்மா வீட்டுக்கு ஒரு வாரம் போக வேண்டும் என்று சொன்னால் "உனக்கு எப்பவும் தமாசுதான். நான் இங்கே தனியாக இருந்து கஷ்டப்படுவேனேன்னு எப்படியும் திரும்பி வந்துருவே. அப்புறம் என்ன அம்மா வீடு ஆட்டுக்குட்டி வீடு" என்று இல்லாத பொய்களைச் சொல்லி குமட்டில் குத்தலாம்.

மனைவியாக இருந்தால் கணவனிடம் முக்கியமாக எதாவது நகை வாங்கிக் கேட்கும் போது பயன்படுத்தலாம். "ஏங்க எனக்கு அந்த நெக்லஸ் வாங்கணும்னு பேசிக்கிட்டிருந்தோமே?". உடனே கணவன் "அது எனக்கு போனஸ் வந்தவுடனே வாங்கலாம்" ன்னு சொன்னா "போங்க உங்களுக்கு எப்பவுமே குறும்புதான். போனஸ்தான் போன மாசமே வந்துருச்சே பேங்க் ஸ்டேட்மெண்ட் வீட்டுக்கு வந்தப்போ பார்த்தேன்" என்று சொல்லி பொய் சொன்னதுக்காக குமட்டில் ஒரு குத்து விடலாம்.

காதலியாக இருந்தால் காதலன் "எப்போ நமக்குக் கல்யாணம்"னு கேட்டால் எதுவுமே சொல்லாமல் ஒரு குத்து விட்டாலே போதும். காதலன் புரிந்து கொண்டு அவர் மனசுக்குள்ளேயே சொல்லிக் கொள்வார் "அதானே அதுக்காகவா காதலிக்கிறோம்"னு.

சமீபத்தில் (மெய்யாலுமே கொஞ்ச நாளைக்கு முன்னால) சில வயதான மனிதர்களை அவர்களின் மனைவிமார்கள் குமட்டில் கும்மாங்குத்து குத்தி கொடுமைப்படுத்துவதாகத் தெரிகிறது. ஏன் இப்படியெல்லாம்?? ப்ளீஸ் விட்டுறுங்க.

இதில் உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் இல்லை. குமட்டுக்குத்து மட்டுமே உள்ளது. ;)

8 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

டோண்டுவின் பதிவ படிச்சதுனால வந்த பாதிப்பா? நல்லா குமட்டுங்க ,சாரி, குமட்டுக்குத்துங்க

Anonymous said...

அடுத்தவாட்டி என்னா குத்து??????????????

சகாதேவன் said...

நாகேஷைக் கேளுங்கள்.
அவர்தான் ஒரு படத்தில் அப்படி சொல்வார்.
எனக்கு படம் மறந்துவிட்டது.
சகாதேவன்.

dondu(#11168674346665545885) said...

நாகேஷ் வரும் அந்தப் படம் சமீபத்தில் 1966-67 வாக்கில் திரையிடப்பட்ட “நான்” என்னும் படம். அதில் நாகேஷ் அம்மா, பிள்ளை என்று டபிள் ரோலில் வருவார். அம்மா நாகேஷ்தான் குமட்டில் குத்துவார்.

ரவிச்சந்திரன், ஜெயலலிதா, என்னத்த கன்னையா, மொட்டை கோர அசோகன் ஆகியோரும் அதில் நடித்துள்ளனர். “அம்மனூர் சாமியோ அத்தையோ மாமியோ” என்று ஜெயலலிதா காவியத்தனமாக குத்தாட்டம் போடுவார்.

இந்தப் படம் நான் பார்க்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கண்மணி said...

எந்தா சாரே கல்யாணாம் கூடிச்சோ இப்பமே 'குமட்டு' பயம் வந்திடுச்சி.

ச்சின்னப் பையன் said...

கொஞ்ச நாளைக்கு முன்னாலேன்னா - இப்போ மனைவிகள் குமட்டிலே குத்தறதில்லை - அப்படீன்றீங்களா?...ம்ம்.. சரிசரி...மனைவி அமைவதெல்லாம்.....:-)

பொன்வண்டு said...

வருகை தந்து பின்னூட்டம் போட்ட சிவா, அனானி, சகாதேவன், டோண்டு, டீச்சர், சின்னப்பையன் எல்லோருக்கும் நன்றி !!!!

// இந்தப் படம் நான் பார்க்கவில்லை.
//

டோண்டு சார் ரியல் எக்ச்பீரியன்ஸ் இருக்க்கிறப்போ படம் பார்த்துத்தான் தெரிஞ்சிக்கணுமா? ;)

// எந்தா சாரே கல்யாணாம் கூடிச்சோ இப்பமே 'குமட்டு' பயம் வந்திடுச்சி. //

ஹிஹிஹி .. டீச்சர் நான் இன்னும் சின்னப்பையன் :)))) அதுக்கெல்லாம் இன்னும் மூணு, நாலு வருசம் ஆகும் :)

மங்களூர் சிவா said...

//
பொன்வண்டு said...

ஹிஹிஹி .. டீச்சர் நான் இன்னும் சின்னப்பையன் :)))) அதுக்கெல்லாம் இன்னும் மூணு, நாலு வருசம் ஆகும் :)

//

யோவ் எத்தனை பேருய்யா ச்சின்ன பையன்னு சொல்லிகிட்டு எனக்கு போட்டியா கிளம்பியிருக்கீங்க???