Tuesday, February 19, 2008

பதிவுலக க்விஸ் மற்றும் 'ஒரு (தி)தொரட்டியின் கதை'கீழே கொடுத்திருக்கும் கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொன்னா 'கண்ணம்மா' கார்த்திக் பிரபு ஆறு மாசம் முன்னால நடந்த போட்டியில் எனக்கு பரிசா அனுப்புறேன்னு சொல்லி இன்னமும் அனுப்பிக்கிட்டிருக்கிற 'கணையாழியின் கடைசிப்பக்கங்கள்' அவர் அனுப்பியவுடன் பரிசாகக் கொடுக்கப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

நொந்தழல் கவின்னு அன்போட அழைக்கப்படுபவர்
1. செந்தழல் ரவி
2. வெந்தழல் பீவி
3. வெண்குழல் ஆவி

காண்டு கஜேந்திரன், பேண்டு பலராமன், புரளி மனோகர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி விளிக்கப்படுபவர்
1. டோண்டு ராகவன்
2. மாண்டு மாதவன்
3. நண்டு நாயகன்

அய்யனார் என்பவர்
1. திருவள்ளுவர்
2. விவேகானந்தர்
3. கவிஞர் கம் பதிவர்

ராசி ஏழுமலை என அழைக்கப்படுபவர்
1. காசி ஆறுமுகம்
2. ஓசி ஏறுமுகம்
3. பாசி பரமசிவம்

TBCD ன்னா என்னா அர்த்தம்?
1. Tamilnadu Born Confused Dravidan
2. Thailand Born Confused Dravidan
3. TuBerClosis Disease

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்புக்கு பதிவுலக உதாரணம்
1. டோண்டு - லக்கிலுக்
2. காண்டு - கோலி காண்டு
3. செந்தழல் - க.கந்தசாமி

பொருத்துக :

யோனி,குறி -- சுண்டக்கஞ்சி மீட்டிங்
துக்ளக் ஆண்டுவிழா -- ஓசை செல்லா
சோ,மோடி -- 200000 ஹிட்கவுண்ட்
போய்ட்டு வாரேன் பார்ட் 2 -- சூடான இடுகைகள்
ரெஃப்ரெஷ் பட்டன், F5 கீ -- ஜோ,கோடி

கண்டுபிடிங்க :

மலேசியாவுக்குக் கீழே குடியிருப்பவர். சீனாக்காரப் பொண்ணை சாவடித்து சாரி டாவடித்து ஒன்னுக்கும் வழியில்லாமல் பூவை மட்டும் போட்டோ எடுத்து பிட்டுக்கு அனுப்பியவர். பதிவு போடுவதை மறந்து போனவர். எப்போதாவது பின்னூட்டங்களில் ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறவர். ப்திவுலகில் பழக்கமான என் நண்பனின் அண்ணன். அவர் யார்?

************************************************************************

கீழே இருக்கும் கதை போன மாசமே எழுதினது. ஊர் நெலவரம் சரியில்லாததால் போடலை. அதுனால லேட் ரிலீஸ்.

ஒரு தொரட்டியின் கதை !

பதிவுபுரம்னு ஒரு ஊர்ல ராசி ஏழுமலை ன்னு ஒருத்தர் இருந்தாராம். அவருக்கு தொரட்டி செஞ்சு விக்கிறதுதான் வேலையாம். அவருக்கு தன்னோட தொரட்டி செய்யுற திறமை மேல ரொம்ப பெருமையாம். ஊருக்குள்ள நாலஞ்சு தொரட்டிக் கடை இருந்தாலும் அவர் கடையைத் தேடித்தான் ரொம்ப மக்கள் வருவாங்களாம்.

ஒருநாளு ஊருக்குள்ள பெரிய மனுசானாத் திரியிற பா.சவக்குமார் அசலூர் திருவிழாக்குப் போயி தொரட்டியைக் கண்டுபுடிச்சதே எங்க ஊர்ல தான்னு பெருமையா சொல்லிக்கிட்டாராம். அதை ஆயாவூட்டுக்கு ஓசி சோறு சாப்பிடப் போன மரமண்டு ஒன்னு விசயம் கேள்விப்பட்டு ஊருக்குள்ளாற வந்து சொல்லிருச்சாம்.

உடனே ராசி ஏழுமலை தொரட்டியைப் பத்தி சொன்னீங்களே அதைச் செஞ்சவனை ஏன் சொல்லலைன்னு பஞ்சாயத்தக் கூட்டிட்டாராம். பஞ்சாயத்துல ராசி ஏழுமலையைப் பிடிக்காத ஆளுங்கல்லாம் மூஞ்சியைப் பொத்தி முக்காடு போட்டுக்கிட்டு கூட்டத்தோட கூட்டமா சவுண்ட் விட்டாங்களாம். கூட்டத்துல ஓரமா உக்காந்திருந்த KULA(a)குளா மட்டும் "தொரட்டி செய்யிறதுல இல்லை சூட்சுமம்.. மக்கள் அத தொரத்தித் தொரத்தி வாங்குறதுல தான் இருக்கு"ன்னு தத்துவமா பேசினாராம். அப்புறமா ஊருக்குள்ள எவன் நல்லா கைநாட்டு வைக்கிறான்னு போட்டி வச்சி அவனுக்கெல்லாம் எருது தர்றேன்னு சொன்னோமே என்னய்யா இன்னமும் எருதையும் காணோம் கருதையும் காணோம்னு எவனும் எதிர் கேள்வி கேட்டுறுவான்னு நெனச்சிக்கிட்டு கமுக்கமா உக்காந்துக்கிட்டாராம். "இந்தாளுக்கு இதே வேலையா போச்சுய்யா தொரட்டி நான் தான் செஞ்சேன் நல்லா வெரைட்டியா செஞ்சேன்னு புலம்புறதே பொழப்பு. பிரச்சனையை சட்டுபுட்டுன்னு பேசி முடிங்கய்யா"ன்னு எகிறுனாராம் அன்லக்கிகுக்.

"தொரட்டியை சொன்னா என்னய்யா அத செஞ்சவனை சொன்னா என்னய்யா எப்படின்னாலும் அது ஒன்னுதான்யா. தொரட்டிதான் ராசி ஏழுமலை! ராசி ஏழுமலைதான் தொரட்டி!"ன்னு திருவிளையாடல் வசனத்தைச் சொல்லி பஞ்சாயத்தை பைசல் பண்ணினாங்களாம். இந்தப் பிரச்சனை இப்பக்குள்ள முடியாது எப்பவுமே பொகைஞ்சிக்கிட்டு தான் இருக்கும்னு அவுங்களுக்குள்ளயே பேசிக்கிட்டு கலைஞ்சி போனாங்களாம் ஊர்க்காரங்க.

************************************************************************

கதை புரியாதவுங்க கீழே இருக்கிற சுட்டிகளை படிங்க. புரிஞ்சாலும் புரியும்.

சன் செய்திகள் நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி !
மூன் டிவிக்கு ஒரு காக்கா கதை!
'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

யாரும் கோவிச்சிக்காதீங்க. ஜஸ்ட் ஃபார் ஃபன். குறிப்பா ராசி சாரி காசி சார் சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்புறம் என்னையும் 'யாரது? பதிவரா?'ன்னு கேட்டுறக்கூடாது ;) .

10 comments:

TBCD said...

இப்படி ஒரே சமயத்திலே..

எல்லாரும் கும்மாங்க்குத்து குத்தினா

நல்லாவா இருக்கு... :P

பரவாயில்லை...நல்லா இருங்கோ..

குசும்பன் said...

செம கலக்கல்:))

TBCD said...

நொந்தழல் கவின்னு அன்போட அழைக்கப்படுபவர்
3. வெண்குழல் ஆவி

காண்டு கஜேந்திரன், பேண்டு பலராமன், புரளி மனோகர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி விளிக்கப்படுபவர்
2. மாண்டு மாதவன்

அய்யனார் என்பவர்
1. திருவள்ளுவர்

ராசி ஏழுமலை என அழைக்கப்படுபவர்
2. ஓசி ஏறுமுகம்

TBCD ன்னா என்னா அர்த்தம்?
3. TuBerClosis Disease

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்புக்கு பதிவுலக உதாரணம்
3. செந்தழல் - க.கந்தசாமி

பொருத்துக :

யோனி,குறி -- சுண்டக்கஞ்சி மீட்டிங்
துக்ளக் ஆண்டுவிழா -- ஓசை செல்லா
சோ,மோடி -- 200000 ஹிட்கவுண்ட்
போய்ட்டு வாரேன் பார்ட் 2 -- சூடான இடுகைகள்
ரெஃப்ரெஷ் பட்டன், F5 கீ -- ஜோ,கோடி

கண்டுபிடிங்க :

மலேசியாவுக்குக் கீழே குடியிருப்பவர். சீனாக்காரப் பொண்ணை சாவடித்து சாரி டாவடித்து ஒன்னுக்கும் வழியில்லாமல் பூவை மட்டும் போட்டோ எடுத்து பிட்டுக்கு அனுப்பியவர். பதிவு போடுவதை மறந்து போனவர். எப்போதாவது பின்னூட்டங்களில் ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறவர். ப்திவுலகில் பழக்கமான என் நண்பனின் அண்ணன். அவர் யார்?

ஜெகநாதன்

****

உங்க மின்னஞ்சல் முகவரி சொன்னா, உங்க சமீபத்திய பின்னுட்டத்திற்கு பதில் அனுப்புகிறேன்.

TBCD said...

விட்டுப் போச்சி...


பொருத்துக :

யோனி,குறி -- சூடான இடுகைகள்

துக்ளக் ஆண்டுவிழா -சுண்டக்கஞ்சி மீட்டிங்
-
சோ,மோடி -- ஜோ,கோடி

போய்ட்டு வாரேன் பார்ட் 2 -- ஓசை செல்லா

ரெஃப்ரெஷ் பட்டன், F5 கீ -- 200000 ஹிட்கவுண்ட்

ஜெகதீசன் said...

//
மலேசியாவுக்குக் கீழே குடியிருப்பவர். சீனாக்காரப் பொண்ணை சாவடித்து சாரி டாவடித்து ஒன்னுக்கும் வழியில்லாமல் பூவை மட்டும் போட்டோ எடுத்து பிட்டுக்கு அனுப்பியவர். பதிவு போடுவதை மறந்து போனவர். எப்போதாவது பின்னூட்டங்களில் ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறவர். ப்திவுலகில் பழக்கமான என் நண்பனின் அண்ணன். அவர் யார்?
//
:))
naan illai...

தமிழ்நெஞ்சம் said...

வடிவேலு பாணியில் - போய்யா வென்று - என்று சொல்லத்தான் நினைக்கிறேன்.

கண்மணி said...

பதிவு போட மேட்டர் தேறலைன்னா இப்படித்தான் உப்புமா கிண்டனும்.இல்லாட்டி மக்கள்ஸ் நம்மை மறந்துடும்.

வவ்வால் said...

பொன்வண்டு,

//பதிவு போட மேட்டர் தேறலைன்னா இப்படித்தான் உப்புமா கிண்டனும்.இல்லாட்டி மக்கள்ஸ் நம்மை மறந்துடும்.//

அப்படியே கிண்டி அடுத்தவர் மூஞ்சிலும் அப்பவேண்டும் என்பதும் சேர்த்து சொல்லலாமா?(கண்மணி உங்கள் வார்த்தைகளை கடன் மட்டுமே வாங்கியுள்ளேன், உங்கள் கருத்தை குறித்து எதுவும் சொல்லவில்லை)

காசி என்ற ஒருவர் எல்லார்க்கையிலும் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறார், அவர் என்னய்யா தப்பு செய்தார் ஆள் ஆளுக்கு பகிடி செய்கிறேன் பேர்வழினு கிளம்பிட்டிங்க!

மங்களூர் சிவா said...

:)))))))))

SanJai said...

இதுல சம்பந்த பட்டவங்களே பின்னூட்டம் போட்டிருக்கிறதால நானும் ஒரு ஸ்மைலி போட்டுடறேன்.

:)

அய்யா சாமீ.. இது ஜஸ்ட் ஃபார் ஃபன் தான?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((