நேற்று தற்செயலாக சன் செய்திகள் தொலைக்காட்சியைப் பார்த்தபோது இரவு 9:30 மணிக்கு நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் குறித்து நிகழ்ச்சி இருப்பதாகக் காட்டினார்கள். தவறாமல் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே மா.சிவக்குமார் பேசினார். மேலும் பங்கு பெற்றவர்கள் 'எண்ணங்கள்' பத்ரி, லக்கிலுக், பொன்ஸ், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சீனிவாசன். வலைப்பதிவுகள் சக்திமிக்க ஊடகமாக உருவாகி இருப்பதுதான் கரு.
* உலகில் தமிழில் தான் முதலில் வலைப்பதிவு திரட்டி உருவாக்கப்பட்டது என்று மா.சி கூறியது எனக்குப் புதிய தகவல்.
* எஸ்.ராமகிருஷ்ணன் பேசும் போது தின்மும் ஒரு மணி நேரம் வலைப்பதிவுகள் படிப்பதாகக் கூறினார். மேலும் பதிவுலகில் இருக்கும் பிரச்சினைகளான ஒருவரே வேறு சில ஐடிகளில் பின்னூட்டம் போடுவது போன்றவற்றைக் சுட்டுக் காட்டவும் தவறவில்லை.
* சீனிவாசன் 90% பதிவுகள் நல்ல பதிவுகளே எனவே புதியவர்கள் தயங்காமல் வரலாம் என்றும் சொன்னார்.
* லக்கிலுக் பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் மூலம் கோவையில் ஒருவர் மாதம் 6000 சம்பாதிப்பதாகக் கூறினார். யாருங்க அது? :)
* பொன்ஸ் இது மிகவும் சக்தி மிக்க ஊடகம் என்று சிம்பிளாக சொன்னதோடு முடித்துக் கொண்டார். ஏங்க? :)
பேட்டிகளின் இடையில் தமிழ்மணம், பொன்ஸின் பூக்கிரி.காம், பாலபாரதியின் விடுபட்டவை, தமிழில் பங்குவணிகம், மா.சியின் வலைப்பதிவு ஆகியவை காட்டப்பட்டன.
சக பதிவர்கள் இப்படிப் பலராலும் கவனிக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. யாராவது நிகழ்ச்சியைப் பதிவு பண்ணியிருந்தீங்கன்னா தரவேற்றி விட்டு சுட்டி கொடுங்கப்பா. பார்க்காதவர்கள் பார்க்கட்டும்.
சந்தேகம் :
* பேட்டி எடுத்தவர்கள் மா.சியின் சன் டிவியின் ஏகபோகம் தொடரைப் படிக்கவில்லை என்று தெரிகிறது. :)))))
26 comments:
என்னங்க இது?
முதலிலேயே தெரிந்திருந்தால் பதிவு பண்ணியிருக்கலாம். :-(
பார்ப்போம் யாராவது பண்ணியிருக்கிறார்களா? என்று.
/* உலகில் தமிழில் தான் முதலில் வலைப்பதிவு திரட்டி உருவாக்கப்பட்டது என்று மா.சி கூறியது எனக்குப் புதிய தகவல். */
தமாசு தமாசு. நல்லவேளை வலைப்பதிவே தமிழில்தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டதுனு சொல்லாம போனாங்களே.
FeedonFeeds எழுதினவனுக்கு தமிழ் தெரியாதுன்னு அடிச்சு விடறானுங்க.
ஆஹா.....பதிவு செஞ்சவுங்க யாராவது வலை ஏற்றுங்க.
ஆவலா இருக்கேன்
முன்பே தெரியாததால் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. பங்கேற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். யாராவது வலையேற்றினால் நன்றாக இருக்கும்.
//உலகில் தமிழில் தான் முதலில் வலைப்பதிவு திரட்டி உருவாக்கப்பட்டது என்று மா.சி கூறியது எனக்குப் புதிய தகவல். //
மா.சி. சொன்னதில் உண்மை நிலை எது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு முகமில்லாதது //தமாசு தமாசு. நல்லவேளை வலைப்பதிவே தமிழில்தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டதுனு சொல்லாம போனாங்களே.
FeedonFeeds எழுதினவனுக்கு தமிழ் தெரியாதுன்னு அடிச்சு விடறானுங்க.//
என்று சொல்வதில் உள்ள தமாசைச் சொல்ல விரும்புகிறேன். FeedonFeeds ஒரு personal aggregator ஆகத்தான் உருவானது. அதை நிறுவி அதன் இடைமுகத்தை ஒருமுறையாவது தன் ஞானக்கண்ணால் கண்டிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டாது அந்த முகமிலி. ஒற்றை ஒருவர் வாசித்த உடனே அது 'marked as read' ஆகக் குறிக்கப்படும் அளவுக்கு அது ஒற்றை மனிதருக்கானது. அதை ப்ளாக்லைன்ஸ், கூகுள் ரீடருக்கு ஒப்பிடலாமே தவிர இன்று நாம் காணும் தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளோடு அல்ல. வயித்தெரிச்சலுக்கு இந்தியாவென்றால் ஜெலுசில்/டைஜீனும் அமெரிக்காவென்றால் டம்ஸ், மைலான்டா போன்றவையும் எடுத்துக்கொள்ளுதல் நலம். வாந்தியெடுத்தல் உடல் நலத்துக்குக் கேடு! (அல்லது 'வாந்தியெடுத்தல் உடல் நலக்கேட்டின் அறிகுறி':-))
அட.. இந்த நிகழ்ச்சி பத்தி ஒரு அறிவிப்பு பதிவாவது யாராவது போட்டிருக்கலாம். நாங்களும் பார்த்திருப்போம்.
பெருமைப்பட வேண்டிய விசயம்...
உலகில் தமிழில் தான் முதலில் வலைப்பதிவு திரட்டி உருவாக்கப்பட்டது என்று மா.சி கூறியது எனக்குப் புதிய தகவல்.
எனக்கும் தான்...
இதன் பெருமை முழுக்க முழுக்க காசி அவர்களை சாரும்...
ஆஹா.....பதிவு செஞ்சவுங்க யாராவது வலை ஏற்றுங்க.
ஆவலா இருக்கேன
அன்புடன்
இரா.செந்தில் நாதன்
"ஆங்கிலத்திலோ, வேறு மொழிகளுக்கோ தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி இருந்ததா?"
இப்படி ஒரு கேள்வி வந்து சில மாதங்களுக்கு முன்பு நான் கொஞ்சம் தேடிப் பார்த்து எதுவும் கிடைக்கவில்லைதான். இன்னும் முனைந்து பார்த்தால் கிடைக்கலாம்.
தமிழ்மணம் போல துடிப்பான ஒரு வலைப்பதிவர் சமூகம் ஆங்கிலத்திலும் என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. technorati, digg எல்லாமே தொழில்நுட்ப அளவுடன் நின்று விட்டிருக்கின்றன. slashdot, kuro5hin, joelonsoftware போன்றவை தனி வலைப்பதிவுகள் அல்லது விவாதக் களங்கள். சமூகமாக தளைத்த தளங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.
காசிக்குத் தோன்றியது உலகில் வேறு யாருக்கும் தோன்றவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. (ஏங்க, நம்ம ஆளுங்களும் முன்னோடியா இருக்க முடியாதா என்ன! :-)
cms எனப்படும் கட்டுரைகள் மேலாளும் மென்பொருளுடன் பல மசாலாக்களைக் கலந்து தனிச் சிறப்பான திரட்டியை உருவாக்கிய பெருமை அகில உலகிலும் காசிக்கே சேரும். சன் டிவியின் உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல்முறை என்பது போலில்லாமல், உண்மையில் ஒரு தமிழர் உருவாக்கிய புது வழி என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வது சரியாகவே இருக்கும் என்பது என் கருத்து.
அன்புடன்,
மா சிவகுமார்
தமிழ் ஊடகங்கள் கடந்த ஒரு வருடமாகவே வலைப்பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருவது மட்டுமல்லாமல் பல பதிவர்களை தங்கள் ஊடகங்களில் எழுத வைப்பதும், பேட்டிகள் எடுப்பதும் என தொடர்வதுடன் சிறந்த பதிவுகளையும் வெளியுலகுக்கு காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.
தமிழ் மணம் முதல் வலைப்பதிவு திரட்டி அல்ல என்று சிலர் கூறலாம். ஆனால் தமிழ்மணம் பல மொழிகளிலும் உள்ள திரட்டிகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறிப்பிடத்தக்க முதன்மையான திரட்டி என்று சொல்லலாம். அதை உருவாக்கிய காசிக்கு இந்த பதிவின் மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்.
கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி, மா. சி. சன் டிவி நிகழ்ச்சியில் என்ன பேசப்பட்டது என்று அறியாமல் என்னால் மேலும் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை சொல்லமுடியாது. நிகழ்ச்சியின் சூத்திரதாரியைப் பற்றித் தெரிந்ததிலிருந்து ரொம்பவும் நேர்மையை நான் எதிர்பார்க்கமாட்டேன்.
ஆனால், நுட்ப ரீதியாக ஒன்றை விளக்கக் கடமைப்பட்டுள்ளேன். //cms எனப்படும் கட்டுரைகள் மேலாளும் மென்பொருளுடன் பல மசாலாக்களைக் கலந்து // என்பது சரியல்ல. எந்த ஆயத்தநிலை cms-ன்மேலும் கட்டப்பட்டதல்ல தமிழ்மணம். ஒவ்வொரு செங்கல்லாக தனிப்பட்டு உருவான proprietory மென்பொருள்தான் தமிழ்மணத்தை இயக்குகிறது. தமிழ்சசி கூட சில மணி நேரத்தில் செய்யலாம் என்று விளக்கிய, வினையூக்கி அதேபோல செய்தும்விட்ட 'ஓடைதிரட்டுதல்' என்ற பணியைமட்டும்FeedOnFeeds-ன் ஒரு மாற்றப்பட்ட வடிவம் செய்கிறது. நேரடியாக 'அனுப்பு'வதெல்லாம் FeedOnFeeds-ல் கிடையாது.
ஏற்கனவே சொன்னதுபோல 'திரட்டுவதில் இல்லை சூட்சுமம்!':-)
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
super!!!!!!!!!!
dear friends! i can not type in tamil in this page how can i put my comments in tamil ?please give me the details
//ஏற்கனவே சொன்னதுபோல 'திரட்டுவதில் இல்லை சூட்சுமம்!':-)//
உண்மை.. மக்கள் திரள்வதில்தான் இருக்கு சூத்திரம்
பொங்கல் விடுமுறையில் ஊரில் இருக்கிறேன். இங்கே இணைய இணைப்பு மகா மட்டமாக இருப்பதால் பதிவைக் கஷ்டப்பட்டு வலையேற்றி விட்டு பின்னூட்ட மட்டுறுத்தலை எடுத்துவிட்டேன். இப்போ வந்து பார்த்தால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்பா !!!
காசி அவர்கள் மீது தேவையில்லாமல் தனிநபர் தாக்குதல் தொடுக்கும் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டன. சிரமத்திற்கு வருந்துகிறேன்.
எல்லாம் நல்லாத்தான் சொன்னாங்க. ஆனால் தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் நிரலைத் தொலைக்காட்சியில் காட்டியிருந்தால் அறிமுகம் இல்லாதவர்கள் வலைப்பதிவிற்கு வந்திருப்பார்கள். நிகழ்ச்சி அவசரமாகத் தயாரிக்கப்பட்டு அரைகுறையாக பரிமாறப்பட்டது.
தகவலுக்கு நன்றி, பொன்வண்டு!
ஏன் மா.சி, பொன்ஸ் ... யாருமே சொல்லலை? ;(
//கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி, மா. சி. சன் டிவி நிகழ்ச்சியில் என்ன பேசப்பட்டது என்று அறியாமல் என்னால் மேலும் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை சொல்லமுடியாது. நிகழ்ச்சியின் சூத்திரதாரியைப் பற்றித் தெரிந்ததிலிருந்து ரொம்பவும் நேர்மையை நான் எதிர்பார்க்கமாட்டேன்.//
கொலை வெறி...!???! கொலை குத்து???!!
நண்பரே இந்த நிகழ்ச்சியைபற்றி குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியில் நானும் என்னுடைய கருத்துக்களையும் கூறியிருந்தேன். நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான என்னுடைய பகுதியை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளேன். கிளிக் செய்யவும்.
http://vetripadigal.blogspot.com
தனிநபர் தாக்குதல் மற்றும் பதிவுக்கு தொடர்பில்லாத விசயங்கள் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்!!!
ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் பார்த்து பின்னூட்டத்தை அனுமதிப்பது கடினம் என்பதாலும், மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையாலும் தான் பின்னூட்ட மட்டுறுத்தலை எடுத்து விட்டிருக்கிறேன். இதைப் புரிந்துகொண்டு இனிமேலும் தனி நபர் தாக்குதல் பின்னூட்டம் போடவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.
புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ப்ளீஸ் !!!
Post a Comment