Sunday, January 06, 2008

ஹர்பஜன் ஏன் இந்தக் கொலைவெறி?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் அரை சதம் கடந்ததும் சைமண்ட்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிந்திருக்கும். இப்பிரச்சினைக்கு முழுக்காரணமும் ஹர்பஜனே என்பது தொலைக்காட்சியில் பார்த்தபோது தெளிவானது. என்டிடிவியில் ஒளிபரப்பான காட்சிகளைப் பார்த்தபோது அரைசதம் கடந்ததும் ஹர்பஜனே கையை ஆட்டி சைமண்ட்சை அழைக்கிறார். பின் அவரிடம் ஏதோ சொல்ல பின் அவரும் ஏதோ சொல்ல பின் சச்சினும் நடுவரும் அவரைத் தடுக்கிறார்கள். அவர் கண்டிப்பாக நிறவெறி குறித்து எதுவும் சொல்லியிருக்க மாட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இப்படித் தேவையில்லாமல் வம்பிழுப்பது தேவையா?

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியினரும் அந்நாட்டுப் பத்திரிக்கைகளும் எதிரணியினரைச் சாடி மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதில் வல்லவர்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் தான் யுவராஜ்சிங்கின் நடத்தை சரியில்லை என்று அணியினர் வருத்தப்படுவதாகக் கிளப்பிவிடப்பட்ட புரளி. அதுபோல ஏற்கனவே இந்தியாவில் சைமண்ட்சைப் பார்த்து 'குரங்கு' போல வாயைக் கோணிக்காட்டிக் கிண்டலடித்ததை 'நிறவெறி'ப் பிரச்சினையாக மாற்றி விட்டனர். முதலில் நம் ஆட்களுக்கு நிறவெறி என்பதெல்லாம் தெரியுமா என்பதே கேள்விக்குறியது. (நமக்குத் தெரிந்ததெல்லாம் சாதிவெறியும், மதவெறியும் தான். இப்படியிருக்க பாவம் இரு அப்பாவிகள் இப்போது சிறையில் இருக்கிறார்கள்.)

சரி பிரச்சினைக்கு வருவோம். ஏற்கனவே இந்தியாவில் நடந்த அந்தச் சம்பவத்தால் நல்ல அனுதாபம் தேடிய சைமண்ட்ஸ் இப்போது இந்தப் பிரச்சினையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். தன்னை நோக்கி ஹர்பஜன் 'குரங்கு' என்று திட்டியதாக அவர் நடுவர்களிடம் புகார் கூறியிருக்கிறார். இதன் மூலம் சைமண்ட்ஸுக்கு இன்னும் நிறைய அனுதாபம் கிடைக்கலாம். நம்ம ஷில்பாவுக்கு லண்டனில் கிடைத்த மாதிரி.

இது ஒருபுறம் இருக்க நமது வீரர்கள் என்னமோ எல்லாப் போட்டிகளிலும் 100,200 ன்னு அடித்து நொறுக்குவது போலத் தான் வாய்ச்சவடால்களும், அடுத்த நாட்டு வீரர்களைச் சீண்டிக் கொண்டும் இருக்கிறார்கள். இதை இந்திய அணியில் தொடங்கி வைத்த பெருமை மலையாளி ஸ்ரீசாந்தையே சேரும். எடுப்பது ஒரு மேட்சுக்கு ஒரு விக்கெட் கொடுப்பது 50 ரன். இதில் முறைப்புக்கும் வம்பிழுப்புக்கும் மட்டும் இவரிடம் குறைச்சல் இல்லை. இப்போ ஹர்பஜனும் சேர்ந்து கொண்டார். கேட்ச் பிடித்ததும் பந்தைக் காலால் உதைப்பது, பல்டி அடிப்பது போன்ற குரங்குச் சேட்டைகளை அதிகம் செய்கிறார்.

அடுத்தவன் வம்பிழுத்தால் அதை உன் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் காட்ட வேண்டியது தானே? அதை விடுத்து சரிக்குச் சமமாக சண்டை போட்டு அதிலும் ஜெயிக்கவாவது தெரிகிறதா? அனுதாபத்தையும் அடுத்தவனே தட்டிக் கொண்டு போய்விடுகிறான். என்னமோ சர்வதேசப் போட்டிகளில் 10,15 சதம் அடித்துவிட்டமாதிரியும், மூன்றாவது அரைசதம் அடித்த உடனே திமிர் தலைக்கேறி அடுத்தவனை அழைத்து வம்பிழுப்பெதென்றால் என்ன கொழுப்பிருக்கும்? ஏன் பாகிஸ்தானுடன் விளையாடும் போது அக்தரிடம் உன் வீரத்தைக் காட்டவேண்டியது தானே? உன் பேட்டைப் பிடுங்கி உன் காலையே அடித்து உடைத்து விடுவார் அங்கேயே.

இந்த மோதல் போக்கை ஏன் பிசிசிஐயும் ஐசிசியும் தடை செய்யமாட்டேன் என்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை கிரிக்கெட்டுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது என்று விட்டு விடுகிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது.

இந்த விசயத்தில் சச்சினைப் பாராட்ட வேண்டும். எதிரணியினர் என்னதான் கோபப்படுத்தினாலும் அவர் பேட்டிங்கில் மட்டுமே அதற்கான பதிலைச் சொல்லுவார். உதாரணம் ஹென்றி ஒலங்கா. ஓட ஓட விரட்டினார் அந்த ஜிம்பாப்வே வீரரை.

சச்சின் நிறைகுடம். ஹர்பஜன்? அவரவர்க்குத் தெரிந்ததைச் செய்கிறார்கள்.

9 comments:

T.V.Radhakrishnan said...

Sachchin niraikudam-- oppukkollavendiya Golden Words

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் !

Anonymous said...

நிறவெறியில் அவுஸ்திரேலியர்கள் என்ன சளைத்தவர்களா? ஹர்பஜன் சும்மா வம்பிக்கிழுப்பாரா? ஏதோ அங்கு நடந்திருக்க வேண்டும்.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி அனானி!

நான் ஆஸ்திரேலியர்கள் நல்லவர்கள் என்று சொல்லவேயில்லை. தேவையில்லாத ஒரு வம்பிழுப்பு எதற்கு? இதனால் பாதிப்பு யாருக்கு? அவர் சார்ந்த அணிக்குத்தானே?

Sridhar Narayanan said...

பதிவைப் பற்றி சொல்லுமுன் -

//ஒப்பந்தம் போட்டு விபச்சாரம். இதை வெட்கமில்லாமல் பத்திரிக்கைகளே சொல்கின்றன. இவளை எல்லாம் ஏன் விபச்சார வழக்கில் உள்ளே தள்ளக்கூடாது?)
//

மிகவும் அநாகரீகமாக இருக்கிறது இந்த வரிகள். முதலில் விபச்சாரம் என்ற வார்த்தையே அநாகரீகம். ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் அவர்கள் மனதுக்கு பிடித்த வண்ணம் இருக்க சுதந்திரம் இல்லையா என்ன?

அடுத்து 'டேட்டிங்' என்பதை பாலியல் தொழிலுடன் முடிச்சு போடுவது உங்கள் அறியாமையை காட்டுகிறது. ஒரு ஆணோ பெண்ண்ணோ தங்கள் மனதுக்கு பிடித்தவருடன் ஒரு நாளையோ, அல்லது சில நாட்களையோ தேர்ந்தெடுத்து பேசிப் பழகுகிறார்கள். ஆணும் ஆணும் சேர்ந்து சுற்றுவதை எப்படி விகல்பமில்லாமல் பார்க்கிறீர்களோ (அவர்கள் ஓரின சேர்க்கையாளராக இருக்க வாய்ப்பிருந்தாலும்) ஒரு பெண்ணை மட்டும் இப்படி தரக்குறைவாக எண்ணுவது அதையும் ஒரு பதிவில் பதிவது என்ன வகை சிந்தனையோ தெரியவில்லை.

ஆடுகளத்தில் நடந்ததை நான் பார்க்கவில்லை. ஆனால் அதன் பின்னர் சச்சின் டெMண்டுல்கரின் பேட்டியை படித்த பொழுது அப்படி ஒன்றும் ஹர்பஜன் தகாத முறையில் நடந்து கொண்ட மாதிரி தெரியவில்லை. நீங்கள் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணியினரின் விளையாட்டில் உற்று கவணித்தால் அவர்கள் எதிரணியினரை 'திட்டுவதோ' அல்லது மனம் நோகும்படி பேசுவதோ மிகவும் சர்வ சாதாரணம். அது விளையாட்டின் ஒரு அம்சமாக அவர்கள் பார்க்கிறார்கள்.

ஹர்பஜன் சிம்மண்ட்ஸை அழைத்தார் என்று சொல்கிறீர்கள். அதற்கு முன்னர் அவர் என்னவெல்லாம் பேசினார் என்பதையோ, அல்லது முதல் இன்னிங்க்ஸில் தான் அவுட் ஆகியும் அம்பயர் அவுட் கொடுக்காததால் தொடர்ந்து ஆடி சதமடித்ததை பெருமை அடித்து கொண்டது, மற்றும் பாண்டிங்க் ஹர்பஜனை பற்றி கேலியாக பேசியதையும் போன்ற பல விஷயங்களை மறந்து விட்டீர்கள் அல்லது தெரிந்து கொள்ளவில்லையோ...

ஹர்பஜனை பற்றி புகார் கொடுத்தது பாண்டிங். சிம்மண்ட்ஸ் கூட இல்லை. அது மட்டுமல்ல. Racistic comments என்று வேறு வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

சிம்மண்ட்ஸ் அபோர்ஜீன் வகை இனத்தை சேர்ந்தவர். பழங்குடியினரை 'குரங்காக' கிண்டல் செய்வது எல்லா நாட்டிலும் நடப்பதுதான். பாண்டிங் அதை துருப்புசீட்டாக பயன்படுத்துகிறார்.

ஆனால் இந்த புகாருக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. நடுவர்கள் பாண்டிங் கேட்டுக் கொண்டதிற்கிணங்க புகார் செய்திருக்கிறார்களே அன்றி அவர்கள் யாரும் நேரிடை சாட்சி சொல்லவில்லை. இந்த முழு பிரச்சினையும் தொடங்கியதின் மூலம் பாண்டிங் இப்பொழுது இதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

சச்சின் நிறைகுடம் என்பதெல்லாம் இருக்கட்டும். ஒருவர் நம்மை கேவலமாக (நமது பார்வையில்) திட்டும் பொழுது அதை ஒதுக்கிவிட்டு ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது என்பது பல சமயம் முடியாத காரியமாகி விடுகின்றது. அப்படி என்றால் பாண்டிங் தான் இப்பொழுது குறை குடமாக தெரிகிறார். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு சிம்மண்ட்ஸின் 'இன'த்தை வைத்து அரசியல் செய்ய போகிறாரோ...

விளையாட்டில் பதிலுக்கு பதில் கொடுப்பது வழக்கத்தில் உள்ளதுதான்.

இதில் ஓர் ஆச்சர்யம் என்னவென்றால்... ஆஸ்திரேலிய அணியினரின் சார்பாக விசாரணைக்கு உடபடுத்தப் பட போகிறவர்களில் ஆடம் கில்கிறிஸ்ட் இல்லை. இத்தனைக்கும் அவர் விக்கெட் கீப்பர் மற்றும் உதவி அணித்தலைவர். அவர் அந்த சம்பவத்தை அருகிலிருந்து பார்த்திருக்கிறார். கில்கிறிஸ்டின் நேர்மையான அனுகுமுறையினால் பாண்டிங் அவரை தவிர்த்துஇருக்கலாம்.

ஷ்ரிசாந்தின் நடத்தையை பற்றி கில்கிறிஸ்ட் 'எனது மகன் பின்புற தோட்டத்தில் செய்யும் சேட்டைகளை விட அவர் மோசமாக செய்கிறார்' (என்ற அர்த்ததில்) பேட்டி அளித்திருந்தார். பாண்டிங்கின் அனுகுமுறையை பற்றிய எண்ணமும் அப்படித்தான் இருக்கிறது தற்பொழுது.

ஆக மொத்தம் மீடியாவிற்க்கு, வர்ணனையாளர்களுக்கும் நல்லதொரு சந்தர்ப்பம். நமக்கு இப்படி விவாதம் பண்ண ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

பொன்வண்டு said...

சரிங்க எடுத்து விடுகிறேன்.

பொன்வண்டு said...

// அடுத்து 'டேட்டிங்' என்பதை பாலியல் தொழிலுடன் முடிச்சு போடுவது உங்கள் அறியாமையை காட்டுகிறது. ஒரு ஆணோ பெண்ண்ணோ தங்கள் மனதுக்கு பிடித்தவருடன் ஒரு நாளையோ, அல்லது சில நாட்களையோ தேர்ந்தெடுத்து பேசிப் பழகுகிறார்கள். ஆணும் ஆணும் சேர்ந்து சுற்றுவதை எப்படி விகல்பமில்லாமல் பார்க்கிறீர்களோ (அவர்கள் ஓரின சேர்க்கையாளராக இருக்க வாய்ப்பிருந்தாலும்) ஒரு பெண்ணை மட்டும் இப்படி தரக்குறைவாக எண்ணுவது அதையும் ஒரு பதிவில் பதிவது என்ன வகை சிந்தனையோ தெரியவில்லை. //

ஆமாங்க. கிராமத்தில் பிறந்து, படித்து, வளர்ந்த எனக்கு இந்தக் கண்றாவியெல்லாம் ஒன்றும் தெரியாது தான். நீங்கள் சொன்னதால் அதை நீக்கிவிட்டேன். இது பற்றி மேலும் பேச வேண்டாமே.

ஆஸ்திரேலியர்கள் செய்யும் அரசியலிலும் விரிக்கும் வலையிலும் நம் அணியினர் விழுந்துவிழக்கூடாது என்பதே என் எண்ணம். ஏனென்றால் அந்நாட்டுப் பத்திரிக்கைகள் கூட நடுநிலையாக இருப்பதில்லை என்பது தான் வருத்தமான விசயம்.

Sridhar Narayanan said...

//அதை நீக்கிவிட்டேன்//

மிகவும் நன்றி. :-)

Keyven said...

நண்பரே !

ஆஸ்திரேலியர்கள் இப்படி வம்புக்கிழுப்பது முதல் தடவை அல்ல.. காலம் காலமாக நடந்து வருவது தான்..ஏனெனில், அவர்களே 4, 5 ம் தலைமுறை கைதிகள் வழியில் வந்தவர்கள் தானே ? பிறப்பின் படியே நடத்தையும் இருக்கும்....

உதாரணத்திற்கு...சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக் கிராத் பந்து வீசும் போது ஜிம்பாப்வேவின் கடைசி வீரரான எட்டோ பிரண்டிஸ் ஆடிக்கொண்டிருந்தார்...அவரை அவுட் செய்ய முடியாத மெக் கிராத், அவரிடம் சென்று கூறினார்..."என் இப்படி குண்டாக இருந்து உயிரை வாங்குகிறாய் என்று" அதற்கு எட்டோ பதிலடி கொடுத்தார்...."ஒவ்வொரு இரவும் நான் உன் மனைவியுடன் படுக்கும் போது..எனக்கு ஒரு பிஸ்கட் கொடுப்பார்..அதனால் குண்டாகிவிட்டேன்" என்று...

எனவே, இவர்களை இப்படி தான் ற்றேஅட் செய்ய வேண்டும்.... முள்ளை முள்ளால் தான் எடுப்பது சரி... அர்பஜன் சொன்னது என்னவோ ஒரு பஞ்சாபி கெட்டவார்த்தை "மா ...கி....சூ..."போல தெரிகிறது... படட்டும்...