Tuesday, January 29, 2008
தவறாமல் ஜெயா செய்திகள் பாருங்கள் !!!
நல்ல விசயம் எங்க இருந்தாலும் சுட்டிக் காட்டணும் இல்லையா? என்னடா காமெடி பண்றேன்னு நினைக்காதீங்க. தினமும் ஜெயா செய்திகளில் கடைசியில் 'இன்று' என்ற தலைப்பில் இன்றைய தேதியில் வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகள் காட்டுகிறார்கள். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் பிற அரசுத் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்கள் தரப்படுகின்றன.
எனவே செய்தி 7:30க்கு ஆரம்பிக்குதுன்னா நீங்க ஒரு 7:50க்கு பாருங்க அப்போது தான் போடுகிறார்கள். அதற்கு முன்பே பார்த்து உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல. இப்பல்லாம் கருணாநிதி பற்றி அடிக்கடி டாக்குமெண்டரி போடுகிறார்கள். விஷப்பாம்பு நஞ்சைக் கக்கியது, தமிழ்நாட்டை காரிருள் சூழ்ந்தது என்றெல்லாம் சொல்லி காதை செவிடாக்குகிறார்கள். ஜாக்கிரதை. இலைக்காரன் மன்னிப்பாராக. ;)
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உண்மைதான் நண்பரே, நீங்கள் சொல்வது. வரலாற்றில் இன்று பார்க்க வேண்டிய ஒரு பகுதி. எனக்கும் ஜெயா டிவியில் பிடித்த ஒரு பகுதி இது.
வருகைக்கு நன்றி சுதாகர் !
வாரநாட்களில் வரும் ‘இன்று’ எல்லாம் தொகுத்து சனிகிழமையில் மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்புகிறார்கள்
எதற்காக ஜெயா செய்திகளைப் பார்த்து விபத்துக்குள்ளாக வேண்டும்
தகவலுக்கு நன்றி ஸ்ரீசரண் !
தகவலுக்கு நன்றி , அம்மா நாமம் வாழ்க.
வருகைக்கு நன்றி அனானி!
சனிகிழமையில் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒளிப்பரப்புகிறார்கள் "இன்று" ஆனால் ஜெயா செய்திகள் காமெடியா இருக்கும்னு பாக்க சொல்லுவாங்க. ஆனா பாத்தது இல்லங்க வண்டு சார்.
வருகைக்கு நன்றி ஸ்ரீ!
// வண்டு சார். //
அவ்வ்வ்வ்... நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லங்க. என்னோட பதிவுக்கு கொஞ்சம் சைடிலே பாருங்க. :))))
Post a Comment