நம்ம டிஆர் ஐ வச்சி எத்தனை காமெடிதான் பண்ணுவாங்களோ... இப்போ ஆர்குட்டிலும். சும்மா ஆர்குட்டில் உலாத்துனப்ப கண்ணுல பட்டதுதான் 'கரடி காங் டிஆர்' ரசிகர் மன்றம். பாவம் மனுசனைப் பாடாய்படுத்துறாங்க. ப்ரொபைல் படமே பயங்கரம். சிம்பன்சியும், டிஆரும் சிரிக்கிறாப்புல இருக்கு. இதில 4957 உறுப்பினர்கள் வேற. அவர் என்ன பண்ணுனாலும் கலாய்க்கிறதுதான் இங்க வேலை.
இக்குழுமத்திலிருந்து ஒரு கருத்துக்கணிப்பு கீழே.
veerasami ya hollywood la dub panna enna peru vaipanga
the brave lord
return of the hipopotamus
wider_man
courage underwear fire
monky in the lungi's shadow
the zoolander
the last saavugaraki
manusan impossible
niiingala peru vachikingoooooooo
ஏற்கனவே டிஆர் ஐப் பத்தி ஒரு படம் நான் என் பதிவிலே போட்டதுக்கே சண்டைக்கு வந்த சிலர் இதுக்கு என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல.
முக்கிய குறிப்பு : நான் இக்குழுமத்தில் உறுப்பினர் இல்லை. இது தெரியாம என்னையப் போட்டுக் கும்மிறாதீங்க. ஆனால் அங்கே சில பதிவர்களின் ப்ரொபைல்கள் கண்ணில்படுகின்றன. கும்முறதுன்னா இங்க போய் கண்டுபிடிச்சிக் கும்முங்க. ஏதோ நம்மால முடிஞ்சது.
2 comments:
நாடகத்தனமாக போய்க்கொண்டிருந்த தமிழ் சினிமாவை , கிராமத்தின் பக்கமாக திருப்பியதில் பாரதிராஜாவுக்கும், காதலின் பக்கம் திருப்பியதில் ராஜேந்தருக்கும் பெரும் பங்கு உண்டு.
ராஜேந்தரின் ஆரம்ப கால திரைக்கதைகளை பார்த்தால் இது தெரியும்....இன்றைய உருவத்தை வைத்து கிண்டல் செய்வது நாகரீகமன்று...!!! ( நான் உங்களை சொல்லல...ஆர்குட்ல நமக்கு ஒண்ணும் தெரியாது... அப்பிடியே..இதை அங்க சொல்லிருங்க ப்ளீஸ்...!!)
மதுரைக்காரன் நான் அந்தக் குழுமத்தில் உறுப்பினர் இல்லை. உறுப்பினர்கள் மட்டுமே அங்கே கருத்துத் தெரிவிக்கமுடியும்.
Post a Comment