எங்கள் ஊர் தமிழகத்தின் தென்கிழக்கில் உள்ள இராமநாதபுரம். கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இராமேஸ்வரம் கோயில் மற்றும் பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சென்றேன்.நானும் எனது சித்தி பையனும் இராமநாதபுரத்தில் இருந்து பேருந்தில் கிளம்பினோம். ஆரம்பம் முதல் ஒரே குஷி மூடில் விளையாடிக் கொண்டேசென்றோம். பரவாயில்லை தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் மிகவும் குறைவு தான். பாம்பன் பாலத்தைத் தாண்டிச் செல்லும் போது எனது செல் கேமராவில் இரயில் பாலத்தை வீடியோவில் பதிவு செய்து கொண்டேன்.
இராமேஸ்வரத்திற்கு வட இந்தியர்கள் அதிகம் பேர் வருவார்கள். அவர்கள் காசியில் தொடங்கும் யாத்திரை இங்குதான் முடியும். நிறைய பேர் நினைப்பது போல் இராமேஸ்வரத்தில் உள்ளது இராமர் ஆலயம் அல்ல - இராமர் வழிபட்ட சிவன் ஆலயம் (சமீபத்தில் வெளியான தர்மபுரி படத்தில் கூட அப்படித்தான் தவறாகக் காட்டுகின்றனர்).



இங்குள்ள கடல் ஆழம் இல்லாதது. குளம் போலத் தான் இருக்கும். கரைக்கு அருகில் அவ்வளவு சுத்தமாக இருக்காது. கொஞ்சம் உள்ளே சென்றால் நன்றாகக் குளிக்கலாம்.நாங்கள் கடலில் காலை மட்டும் நனைத்து விட்டு கோவிலுக்கு உள்ளே சென்றோம். கோவிலின் உள்ளே நிறைய தீர்த்தக்கிணறுகள் இருக்கின்றன. யாத்திரிகர்கள் அங்கு குளித்துவிட்டு ஈர உடையுடன் வலம் வருவதால் கோவில் எப்போதும் ஈரமாகவே இருக்கும்.சுவாமியைத் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றும் நன்றாக கும்பிட முடியாமல் தீட்சிதர்களால் விரட்டப்பட்டோம்.பின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டு புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் உட்கார்ந்து அதிரசம் சாப்பிட்ட பின் அங்கு சில புகைப்படங்கள் எடுத்தோம்.
பின் மெதுவாக கிளம்பி இராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறி பாம்பன் பாலத்தைப் பார்ப்பதற்காக பாம்பனில்இறங்கினோம். பாம்பன் பாலம் மண்டபம் ஊரையும் பாம்பன் தீவையும் இணைப்பதாகும். பாம்பனைக் கடந்து தான் இராமேஸ்வரம் செல்ல
வேண்டும். இங்கு இரண்டு பாலங்கள் கடலுக்கு நடுவில் உள்ளன. இரயில் மற்றும் பேருந்து பாலங்கள் (நந்தா மற்றும் இயற்கை படங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்). பேருந்து பாலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டு இந்திராகாந்தி அவர்களால் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இரயில் பாலம் 1922 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பு சிறிய வகை கப்பல்கள் வரும் போது பாலம் இரண்டாகத் தூக்கி வழிவிடும்.
பின் மெதுவாக கிளம்பி இராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறி பாம்பன் பாலத்தைப் பார்ப்பதற்காக பாம்பனில்இறங்கினோம். பாம்பன் பாலம் மண்டபம் ஊரையும் பாம்பன் தீவையும் இணைப்பதாகும். பாம்பனைக் கடந்து தான் இராமேஸ்வரம் செல்ல
வேண்டும். இங்கு இரண்டு பாலங்கள் கடலுக்கு நடுவில் உள்ளன. இரயில் மற்றும் பேருந்து பாலங்கள் (நந்தா மற்றும் இயற்கை படங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்). பேருந்து பாலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டு இந்திராகாந்தி அவர்களால் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இரயில் பாலம் 1922 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பு சிறிய வகை கப்பல்கள் வரும் போது பாலம் இரண்டாகத் தூக்கி வழிவிடும்.




நாங்கள் பேருந்து நிறுத்ததில் இறங்கி பேருந்து பாலத்திற்கு நடந்தே சென்றோம். பாலத்தில் காற்று பலமாக வீசியதால் செல் எங்கே கடலில் விழுந்து விடுமோ என்று இறுகப் பிடித்துக் கொண்டே படங்கள் எடுத்தேன். இப்போது இரயில் பாலத்தில் அகலப்பாதையாக மாற்றும் வேலை நடைபெறுவதால் இரயில்கள் செல்வது மற்றும் கப்பல்களுக்குவழிவிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கடலையும்,பாலத்தையும், சுற்றுலாப் பயணிகளையும் நிறைய நேரம் வேடிக்கை பார்த்தபின் ஊருக்கு போகலாம் என்று எண்ணி பேருந்துக்கு கை காட்டினால் ஒரு வண்டி கூட நிற்கவில்லை. பாலத்தில் பேருந்துகள் நிற்கக் கூடாது என்று விதிகள் உள்ளன. அதை நமது ஓட்டுநர்கள் சரியாக கடைப்பிடித்தார்கள். ஒரு வேளை வட இந்தியர்கள் என்றால் நிறுத்தியிருக்கக்கூடும். வேறென்ன செய்ய..?. மீண்டும் பாம்பன் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.
இருந்த களைப்பில் நன்றாகத் தூங்கிக் கொண்டே ஊருக்கு வந்தோம்.
நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
12 comments:
வலைப்பதிவு உலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.
yogesh it is a good good experience... i can feel your tour experience with your wordings... your tamil pulamai also good... keep it up yogi........
- Muthu
// வலைப்பதிவு உலகிற்கு உங்களை வரவேற்கிறேன் //
மிக்க நன்றி பாலபாரதி.
வருகைக்கு நன்றி முத்து மற்றும் அனானி.
பொன்வண்டு அவர்களே,
மூன்று பதிவுகளையும் படித்தேன்... அருமையான எழுத்து நடை .. நன்கு கலக்கப் போகிறீர்கள் .
வாழ்த்துக்கள் அண்ட் பாராட்டுக்கள் !
:)
அன்புடன்
கோவி.கண்ணன்
// பொன்வண்டு அவர்களே,
மூன்று பதிவுகளையும் படித்தேன்... அருமையான எழுத்து நடை .. நன்கு கலக்கப் போகிறீர்கள் .
வாழ்த்துக்கள் அண்ட் பாராட்டுக்கள் !
:)
அன்புடன்
கோவி.கண்ணன் //
மிக்க நன்றி கோவி.கண்ணன் :)
பொன்வண்டு,
வருக! வருக!
தங்கள் வரவு நல்வரவாகுக!
வாழ்த்துக்கள்.
வந்திட்டீங்க!! கலக்குங்க.
அந்த அதிசியப்படம் நன்றாக இருக்கு.
// பொன்வண்டு,
வருக! வருக!
தங்கள் வரவு நல்வரவாகுக!
வாழ்த்துக்கள். //
// வந்திட்டீங்க!! கலக்குங்க.
அந்த அதிசியப்படம் நன்றாக இருக்கு.
//
மிக்க நன்றி வெற்றி மற்றும் வடுவூர் குமார்.
வந்தாச்சுல்ல, கலக்குங்க...!!!!!!! நேட்டிவிட்டியோட எழுதுவீங்கன்னு எதிர்பார்க்குறேன்...!!!!!
// வந்தாச்சுல்ல, கலக்குங்க...!!!!!!! நேட்டிவிட்டியோட எழுதுவீங்கன்னு எதிர்பார்க்குறேன்...!!!!!
//
வருகைக்கு மிக்க நன்றி செந்தழல் ரவி.
பொன்வண்டு...,
வாங்கோ, வாங்கோ,
வடிவா எழுதி நிறைய பின்னூட்டமெல்லாம் எடுக்க வாழ்த்துக்கள்.!!
// பொன்வண்டு...,
வாங்கோ, வாங்கோ,
வடிவா எழுதி நிறைய பின்னூட்டமெல்லாம் எடுக்க வாழ்த்துக்கள்.!! //
வருகைக்கு மிக்க நன்றி படியாதவன்.
Post a Comment