எனது நண்பர்கள் அனைவருக்கும் பட்டப்பெயர்கள் உண்டு. இப்பதிவில் அவற்றுக்கான பெயர்க்காரணங்களைக் கீழே கூறுகிறேன்.
சொறி - கப்பலில் வேலை பார்க்கும் பொறியாளர். இவனுக்கு வெயில் காலத்தில் வியர்க்குரு வந்து அவதிப்படுவான். ஆனால் நாங்கள் வேண்டுமென்றே "இல்லை. இது சொறி. பக்கத்தில் வராதே" என்று விரட்டுவோம்.
சாவு - கட்டிடப் பொறியாளர். மிகவும் ஒல்லியான உடம்புடன் மிதிவண்டியை அழுத்த முடியாமல் அழுத்தி வருவான். எதிலும் விருப்பம் இல்லாமல் டெட் பாடி போல் உட்கார்ந்து இருப்பான்.
தோசை - உயிரியல் வல்லுநர். தோசை என்றால் பேயைப் போல் பறப்பவன். தோசையைக்கு சட்னி, சாம்பார் இல்லாமல் அப்படியே முழுங்குபவன்.
வெள்ளாத்தா - உரித்த கோழியைப் போல் வெள்ளை வெளேர் என இருப்பான்.
டவர் - தொலைபேசி நிலைய கோபுரம் போல் உயரமானவன்.
பிட்டு மணி - பள்ளியில் படிக்கும் போது கேவலம் வகுப்பில் நடத்திய சாதாரண தேர்வில் பிட் அடித்து மாட்டி எங்கள் எல்லாரையும் அவமானப்படவைத்தவன்.
குரங்கு - சேட்டைகள் செய்வதில் நம் முன்னோரை அப்படியே கண் முன் நிறுத்தியவன். மேலும் பள்ளி மைதானத்தில் நிழலுக்காக அங்குள்ள கருவேலமரத்தில் ஏறி அமர்ந்து கொள்வான். எங்கள் உடற்கல்வி ஆசிரியர் வைத்த பெயர் தான் அது.
காக்கா - மிகவும் அமைதியான, நன்றாகப் படிப்பவன். குரல் அப்படியே 'குயில்' தான்.
ஜந்து - ஆப்பிரிக்காவில் பிறந்திருக்க வேண்டியவன். இருட்டில் பற்கள் மட்டுமே தெரியும். பல பட்டங்களை வாங்கி எங்கள் குழுவிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறவன். சில நாட்களில் டாக்டர் பட்டம் வாங்க இருக்கிறான். கோபமே படாத மிகவும் நல்ல நண்பன்.
ஓட்டை பல்லன் - பள்ளியில் ஓவராக ஆடியதில் கீழே விழுந்து பல்லை உடைத்துக் கொண்டவன்.
ஆயா - எங்கள் குழுத் தலைவன். கணிப்பொறி வல்லுநர். எங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்பவன்.
மாமா - தன்னை மாமா என்று அழைத்த 7ம் வகுப்பு படித்த பெண்ணுக்கு ரூட் விட்டவன்.
கோந்தான் - தனக்கு மீசை முளைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கோந்தைப் முடியில் தடவி ஒட்டி அழகு பார்த்தவன்.
ஓட்டை - சரியான உளறுவாயன்.
தடியன் - சரியான குண்டன். பெருந்தீனிக்காரன்.
குந்தி - இருந்த இடத்தை விட்டு அசைவதற்கு காசு கேட்பவன். சரியான சோம்பேறி நண்பன்.
முதுகலை பொறியியல் படிக்கின்றான்.
லூசு பாலா - சொல்வது ஒன்று செய்வது ஒன்று. அதனால் தான்.
கோவணம் - தலைவர் ஊருணியில் குளிக்கும் போது அணிவது இது தான். பெயர்க்காரணம் சொல்ல வேண்டுமா என்ன?.
அன்ரோ - இவனுக்குத் தான் ரொம்ப நாள் பேரே இல்லாமல் இருந்ததால் கண்டிப்பாக பேர் வைத்தே ஆக வேண்டுமென்று வைத்த பெயர்.
இவர்கள் அனைவரிடமும் இன்னும் நல்ல தொடர்பு உள்ளது.
இந்தப் பெயரையெல்லாம் நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு ..
எனக்கு என்ன பெயர் என்று கேட்கிறீர்களா? மேலே இருப்பதில் ஒன்று தான்.
நன்றி : இ-கலப்பை மற்றும் ப்ளாக்கர்
4 comments:
// குரங்கு - சேட்டைகள் செய்வதில் நம் முன்னோரை அப்படியே கண் முன் நிறுத்தியவன். மேலும் பள்ளி மைதானத்தில் நிழலுக்காக அங்குள்ள கருவேலமரத்தில் ஏறி அமர்ந்து கொள்வான். எங்கள் உடற்கல்வி ஆசிரியர் வைத்த பெயர் தான் அது. //
இதுதானே உங்கள் பெயர் ..?
-- வில்லாதி வில்லன்
//வெள்ளாத்தா - உரித்த கோழியைப் போல் வெள்ளை வெளேர் என இருப்பான்.//
இருப்பானா இருப்பாளா? :))
// சந்தோஷ் aka Santhosh said...
//வெள்ளாத்தா - உரித்த கோழியைப் போல் வெள்ளை வெளேர் என இருப்பான்.//
இருப்பானா இருப்பாளா? :)) //
அந்தக் கொடுப்பினையெல்லாம் எனக்கு இல்ல சந்தோஷ் :)
//லூசு பாலா //
எல்லா நண்பர்கள் வட்டத்திலேயும் இப்படி ஒரு பெயர் கண்டிப்பாக இருக்கும். லூசு பாலா அல்லது மெண்டல் பாலா.
Post a Comment