Thursday, August 16, 2007

பதிவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? - ஒரு ஜாலி கற்பனை

சும்மா கலாய்ப்புக்குத் தான். நம்ம பதிவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தபோது தெரிந்தவை. ரெடி ஸ்டார்ட்.

பாலபாரதி - அடுத்த பதிவர் பட்டறையில் எந்தப் பத்திரிக்கையாளரையும் உப்புமா பேச்சுக்குக் கூப்பிடக்கூடாது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பொன்ஸ் - தன் profileல் போட நல்ல யானை படங்களை நெட்டில் தேடிக்கொண்டிருக்கிறார். ஓடிப்போன எலிக்குட்டியைப் பிடிக்க பல்கலைக்கழகம் முழுவதும் பொறி வைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ரவிசங்கர் - விக்கிபீடியா, விக்சனரி, தமிழ்மணம் என்று மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறார்.

அபி அப்பா - கிடேசன் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு 49,50,51 என பின்னூட்டங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். கால் மணி நேரமாகப் பின்னூட்டம் வராததால் கை நடுக்கம் ஆரம்பிக்கிறது அவருக்கு.

குசும்பன் - அடுத்து யாரைக் கலாய்க்கலாம் என்று லேப்டாப்பில் அர்னால்ட் படத்தையும், பதிவர்களின் படங்களையும் வைத்துக் கொண்டு, யார் தலையை அர்னால்ட் படத்தில் பொருத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் அபி அப்பாவின் படத்தைத் தேர்வு செய்கிறார்.

லக்கி லுக் - தன் கிழிந்து போன டவுசரை டெய்லர் கடையில் கொடுத்துத் தைத்துக் கொண்டிருக்கிறார். "என்னப்பா இவ்வளவு மோசமாக் கிழிஞ்சிருக்கு" என டெய்லர் கேட்க, "செருப்பால அடிப்பேண்டா, ஒழுங்கா வேலையைப் பாரு" எனப் பதிலளிக்கிறார்.

அய்யனார் - சீரியசாக யோசித்துக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் பதிவர் ஒருவர் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறார்.

இளவஞ்சி - பின்நவீனத்துவமாகப் பின்னூட்டம் எழுத, எதிர்த்துக் கேள்வி கேட்டவர் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்.

வ.வா.ச - அடுத்து யாரை அட்லாஸ் வாலிபராகப் போடுவது என்று மெயிலில் டிஸ்கசன் நடந்து கொண்டிருக்கிறது. தலயின் ரெக்கமெண்டுகளை சகட்டுமேனிக்கு ரிஜக்ட் செய்கிறார்கள் அப்ரசண்டுகள்.

கண்மணி - டீச்சர் எப்படா கேப்பு கிடைக்கும், கும்மியடிக்கலாம் என்று மைக்ராஸ்கோப்பினால் தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பல்லாம் அவருக்கு 'புலி'யோதரை .. சாரி .. புளியோதரை-ன்னாலே அலர்ஜியாம் !

செந்தழல் ரவி - கொரியாவில் எடுத்த பிகர் படங்களை லேப்டாப்பில் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்.

டோண்டு - சமீபத்தில் 1970ல் தான் பிறந்தநாள் கொண்டாடியதைப் பற்றிப் பதிவெழுத வேண்டும் என்று நினைக்கிறார்.

'டெக்' தீபா - மேடம் பிளாக்கிங்கில் PHD வாங்கிவிட வேண்டுமென்று கொலைவெறியோடு ஜாவா ஸ்கிரிப்ட் கோட் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

இராம் & இம்சையரசி - என்னோட சங்கம் தான் பெருசு என்று மாற்றி மாற்றிப் பின்னூட்டங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓசை செல்லா - அவரது வீட்டுக்குள் இருந்து ஊ ஆ என சத்தம் வருகிறது. வெள்ளை நிற உடையில் கராத்தே பழகிக் கொண்டு இருக்கிறார். அதைத் தனது கேமராவில் பதிவும் செய்கிறார்.

மாலன் - பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட இனிமேல் எடுக்கக் கூடாது என்று துண்டைப் போட்டுத் தாண்டி சபதம் செய்கிறார்.

"போடுவார் மொக்கை என்றென்றும் அஃதிலார்
பதிவரல்லார் மொக்கை போடாதவர்" என்று ஒருவர் டைப்படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் பின் மண்டையில் பொளேர் என்று ஒரு அடி விழுகிறது. "what are you doing? Always reading blogs and typing in tamil. First I will tell the admin to block this blogger". அடி விழுந்தது எனக்குத்தான். கொடுத்தவர் என் மேனேஜர்.

18 comments:

கொழுவி said...

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட இனிமேல் எடுக்கக் கூடாது என்று துண்டைப் போட்டுத் தாண்டி சபதம் செய்கிறார்.

அய்யனார் said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

குசும்பன் said...

"வ.வா.ச - அடுத்து யாரை அட்லாஸ் வாலிபராகப் போடுவது என்று மெயிலில் டிஸ்கசன் நடந்து கொண்டிருக்கிறது. தலயின் ரெக்கமெண்டுகளை சகட்டுமேனிக்கு ரிஜக்ட் செய்கிறார்கள் அப்ரசண்டுகள்."

சூப்பர்:))))

செந்தழல் ரவி said...

எல்லாத்தையும் விட கடைசி பஞ்ச் அருமை...

சேம் ப்ளட் !!!!

கானா பிரபா said...

நாட்டி பாய்

பொன்வண்டு said...

அப்பாடா ! ஈட்டித் தலயன் போயாச்சு. அட அவர் தாங்க என் மண்டையில அடிச்சவரு. பின்னூட்டம் போட வேண்டியது தான்.

வருகைக்கு நன்றி கொழுவி. அவர் மேல கோபம் இன்னும் போகலயோ?

// கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //
வருகைக்கு நன்றி அய்யனார்
நான் ஒன்னும் செய்யமுடியாது அய்யனார்.. மக்கள் இந்த மாதிரி மொக்கையைத் தான் விரும்புறாங்க .. :))

வருகைக்கு நன்றி ரவி, குசும்பன்.

// நாட்டி பாய் //
வருகைக்கு நன்றி பிரபா
பிரபா நான் ரொம்ப நல்லவன்க .. என்னயப் போயி ... :(((

பொன்ஸ்~~Poorna said...

//அவரது வீட்டுக்குள் இருந்து ஊ ஆ என சத்தம் வருகிறது. வெள்ளை நிற உடையில் கராத்தே பழகிக் கொண்டு இருக்கிறார். அதைத் தனது கேமராவில் பதிவும் செய்கிறார்.//
மெய்யாலுமே பழகுறாரா இல்ல சொம்மாங்காட்டிக்கும் சவுண்டு வுட்டுகினுகீறாரா?

delphine said...

nice one..

கண்மணி said...

வண்டு அப்பா பொன்வண்டு
உனக்கு என்னைப் பத்தின நல்லதே கண்ணுக்குத் தெரியலையா?
ஆமாம் அதென்ன 'புலி' புளி யோதரை' எனக்கு அலர்ஜியெல்லாம் ஒன்னுமில்லை.
புலி கூட அன்பாக விளையாடவும் செய்வேன் [விளையாட்டை வினையாக்காதீங்க]
புளியோதரையை ஒரு கட்டு கட்டவும் செய்வேன்.
பிரிஞ்சிதா?

Anonymous said...

போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

பாரி.அரசு said...

சில உண்மைகளை இப்படிதான் மொக்கை பதிவு என்று சொல்லி அதில் இடையே சொருகி விட்டுவிட வேண்டும் என்று உங்களிடம் கற்றுக்கொண்டேன்

உண்மைத் தமிழன்(03027376146007401490) said...

//டோண்டு - சமீபத்தில் 1970ல் தான் பிறந்தநாள் கொண்டாடியதைப் பற்றிப் பதிவெழுத வேண்டும் என்று நினைக்கிறார்.
//

நல்லவேளையா, டோண்டு மாமாவோட கைத்தடிகள் உண்மைத்தமிழனும் அதியமானும் அருகில் நின்றார்கள் என்று எழுதாமல் போனீங்க.

துளசி கோபால் said...

:-) :-) :-)

பொன்வண்டு said...

வாங்க பொன்ஸ், நீங்க அவராண்டயே கேட்டுகினுங்க

நன்றி டெல்பின் மேடம்.

வாங்க கண்மணி டீச்சர். நல்லா சமாளிக்கிறீங்க :))

யப்பா அனானி, எல்லோர் பதிவிலயும் இந்தப் பின்னூட்டத்தைப் போடுறதுன்னு எதாவது கோயிலுக்கு நேந்துருக்கியா?

வருகைக்கு நன்றி பாரி அரசு. உண்மையிலேயே நீங்க சொல்றது உண்மைதான் :)


வருகைக்கு நன்றி உண்மைத்தமிழன். சே சே நான் உங்களை அப்படியெல்லாம் நினைக்கலீங்க :)

வருகைக்கு நன்றி துளசி மேடம்.

Deepa said...

பொன்வண்டு..
ரொமப்வும் ரசிச்ச மொக்கை இது தான்... =d> =d> mokkai most close to personality ங்கிர மாதிரி reserch எல்லாம் பண்ணி எழுதியிருக்கீங்க.... ( இப்படி reserch க்கு 10-15 பிளாக்கை திரந்து வச்சா.. தலையிலே ஏன் குட்டு விழாது)...

ஆமாம்... அந்த அனானி என்ன சொல்லரார்... ஒரு நிமிஷம் தலையை சுத்தி நட்சத்திரம் நட்சத்திரமா இருந்துது...

Doondu said...

அருமையான பதிவு. படித்து என் வலைப்பதிவு அறிவை வளர்த்துக் கொண்டேன்.

பொன்வண்டு said...

// mokkai most close to personality //

:)))

வருகைக்கு நன்றி தீபா. கையெல்லாம் தட்டுறீங்க. தேங்க்ஸ்.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி டூண்டு.