இணையத்தில் தமிழ் வானொலி கேட்க எல்லோருக்குமே விருப்பம் இருக்கும். கீழே உள்ள கோப்பைத் தரவிறக்கி மீடியா பிளேயரிலோ அல்லது வின்ஆம்ப்பில் கேளுங்கள்.
கிட்டத்தட்ட எல்லா இணையத் தமிழ் வானொலிகளின் முகவரிகளும் இந்தக் கோப்பில் உள்ளன.
கோப்புக்கு இங்கே கிளிக்கவும்.
10 comments:
நன்றி உங்கள் தொகுப்பை பெற்று பாடல் கேட்கிறேன்
வருகைக்கு நன்றி தமிழ்ப்பித்தன் ..
இதில் இசைத் தமிழ் சுவாசம் வானொலியில் சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் சூரியன் பண்பலை வானொலி நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது அந்தக் கோப்பில் முதலாவதாக இருக்கும். கேட்டு மகிழுங்கள்.
வலைப்பதிவின் தலைப்பில் உள்ள சிறு தவறுகளைத் தயவு செய்து திருத்துங்கள்.
கலந்துணக்கு - கலந்துனக்கு
தூமணி - தூமணியே
நீயெனக்கு - நீயெனக்குச்
மிக்க நன்றி அனானி, தமிழ் நன்றாக வர வேண்டுமென்றுதான் விநாயகரை வழிபடுகிறேன். அந்த வழிபாடே தவறாக இருந்திருக்கிறது. சுட்டிக் காட்டியமைக்கு மிகவும் நன்றி. அந்தத் துதியை வாய்மொழியாகவே கேட்டிருக்கிறேன். ஆகவே தான் தவறுகள். சரி செய்துவிடுகிறேன்.
சின்ன வயதில் சின்னக்கடைத்தெருவில் சின்ன பொன்வண்டுகளைப் பிடித்து விளையாடியிருக்கிறேன். (எத்தணை சின்ன?)இந்த பொன்வண்டை இத்தனை நாள் எப்படி விட்டேன் என்று தெரியவில்லை. எந்தத் தெருவுக்கு வந்தால் இந்த பொன்வணடை பிடிக்கலாம்
வருகைக்கு நன்றி உமையணன் ! நீங்களும் இராமநாதபுரமா? ஹையா சூப்பர் ..
// (எத்தணை சின்ன?)இந்த பொன்வண்டை //
சின்னதுல்லாம் இல்லங்க .. ஏழுகழுதை வயசாச்சு .. ஆனா பண்றது எல்லாம் சின்னப்புள்ளத்தனம் தான் :))
// எந்தத் தெருவுக்கு வந்தால் இந்த பொன்வணடை பிடிக்கலாம் //
தற்சமயம் பெங்களூர். மாதம் ஒருமுறை பிறந்த மண்ணுக்கு வருவேன்.
//சின்னதுல்லாம் இல்லங்க .. ஏழுகழுதை வயசாச்சு .. ஆனா பண்றது எல்லாம் சின்னப்புள்ளத்தனம் தான் :))//
அது சும்மா சி-க்கு சி-னு எகனைக்கு மொகனையாப் போட்டது. MCAவெல்லாம் படிச்சிருக்கீங்க உங்களப்போய் சின்ன-னு சொல்வேனா? எனக்கும் உங்க வயசுதான் இருக்கும். வர்ற செவ்வாக்கெழமயோட இருவத்தெட்டு முடிஞ்சு இருவத்தொம்போது.
அது சரி ராம்நாட்லேருந்து நீங்க நான் அப்புறம் முகவை மைந்தன்னு ஒருத்தர் இருக்காரு. முகவைத்தமிழன்னும் ஒருத்தர் இருக்காரு. பாலபாரதியையும் சேக்கலாம். அவரு ராமேஸ்வரமாமே? இந்த மஞ்சூர் ராசான்னு ஒருத்தர் இருக்காரு. எந்த மஞ்சூர்னு தெரியல. பரமக்குடி மஞ்சூரா இல்ல வேற ஏதும் மஞ்சூர் இருக்கா?
மஞ்சூர்ராசாவின் வலைப்பதிவு முகவரி மறந்துவிட்டது. அடுத்த முறை பதிவு போடும்போது பின்னூட்டம் போட்டுக் கேட்டுற வேண்டியதுதான்..
நன்றி பொன்வண்டு பகிர்ந்துகிட்டதுக்கு!
பொன்வண்டு! இந்த தளத்துக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன்! உங்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறேன்...என்னுடைய பதிவில்!
Post a Comment