Thursday, December 13, 2007

சிந்திக்க வைத்த 'அன்பே சிவம்'

கடவுள் எல்லோருக்கும் பொதுதான். அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். "காசு கொடுப்பதால் ஒருவனுக்கு ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் கடவுள் அல்ல. கூலி.". எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கும் நல்லது செய்வார் என்று எண்ணுவதே சரி. அதை விடுத்து உண்டியலில் பணம் போடுவதும், குடம் குடமாகப் பாலாபிசேகம் செய்தாலும் அதில் நமது சுயநலமே ஒளிந்திருக்கிறது என்பது அந்தக் கடவுளுக்குத் தெரியாதா என்ன?

சரி அப்போ கடவுள் இல்லையா? இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா எப்படி? குழந்தையாயிருக்கும் போதே கடவுள் நம்பிக்கையை சொல்லியிருக்கிறார்கள் வீட்டில். எனவே அந்த நம்பிக்கையையும் விடமுடியாது. பகுத்தறிந்து பார்த்தால் கடவுள் எல்லாம் கிடையாது என்றே ஒருபுறம் தோன்றுகிறது. அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் சிறு வயதில் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கை.

சிறுவயதில் ஏற்பட்ட நம்பிக்கையை ஆராய்ந்தால் அதில் பல ஓட்டைகள். வாராவாரம் கோவிலுக்குப் போ, விளக்கேற்றி வழிபடு எதாவது தோஷம் இருந்தால் பரிகாரம் செய் என்றெல்லாம். நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவினால் கடவுளை ஆராயும் போது ஒரு கடவுள் எல்லா மக்களையும் சமமாக அல்லவா நினைக்க வேண்டும்? அவர் எதற்கு சிலருக்கு மட்டும் துன்பங்களைத் தருகிறார்? வெள்ளிக்கிழமை எலுமிச்சையில் விளக்கேற்றினால் துன்பங்களை நீக்குவார் என்பதெல்லாம் சும்மா (எலுமிச்சையில் விளக்கேற்றினால் கடவுளுக்கு என்ன கிடைக்கப்போகிறது? அவர் என்ன அவ்வளவு அல்பமா?) என்றெல்லாம் தோன்றுகிறது.

எனவே கடவுள் நம்பிக்கையையும் விடமுடியாமல் பகுத்தறிவையும் விடமுடியாமல் கடவுளுக்குப் புதிய அர்த்தம் கொடுக்கிறோம். அதுதான் "கடவுள் எல்லோரையும் சமமாக நினைக்கிறார். அவருக்கு இந்த சடங்குகள் எல்லாம் தேவையில்லை. நமக்கு நாம் நல்லவனாக இருந்தால் - மனசாட்சிக்கு விரோதமின்றி - கடவுளே நம்மை ஏற்றுக்கொள்வார்" என்று கடவுள் நம்பிக்கையையும், பகுத்தறிவையும் சேர்த்து ஒரு புதிய விளக்கம் தரவேண்டியிருக்கிறது.

நானும் கடவுள் நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒருவன்தான்.

11 comments:

Veera said...

கடவுள் என்பது வெறும் நம்பிக்கை. மனோதத்துவ ரீதியில் பார்த்தால், மக்கள் தங்கள் துன்பங்களை பகிர்ந்து கொள்ள ஏற்படுத்திக் கொண்ட ஒரு முறைதான் 'கடவுள்' - கடவுளை இன்றிருக்கிற அளவுக்கு வணிக மயமாக்கியது மதவியாபாரிகள்.

Anonymous said...

Both religion and god are the inventions of man. They both evolved as human intellect kept growing. But today with the help of Science we have advanced to a stage that we no more can accept those antiquated and unverifiable dogmas (கட்டுக்கதைகள்)of our forefathers. We can easily and logically disprove the existence of the god given to us by our ancestors and then enforced by the religions, but there is not an iota of evidence that can prove the existence of such god or deity.
கடவுள் ஒரு கற்பனை என்பதை தர்க்க ரீதியாக நிரூபணம் செய்ய முடியும். அதே நேரத்தில் கடவுள் (personal god) இருப்பதாக நிரூபணம் செய்வது கடுகளவும் சாத்தியமில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான மனம். பெற்றவர்களாலும்,அவர்கள் சார்ந்த மதங்களாலும் நமது மூளையில் ஏற்றப்பட்ட விஷயங்களை பலரால் எளிதில் கைவிட முடிவதில்லை.நம்மில் பலருக்கு பகுத்தறியும் ஆற்றல் கைவருவதில்லை. ஆனால் உங்களுக்கு Faith எனும் மனத்தடையிலிருந்து நீங்கி Enlightenment எனும் உயர்நிலையை அடையும் பக்குவம் கைகூடும் சாத்தியம் தெரிகிறது. congratulations!
www.godisimaginary.com என்ற வெப் சைட் சென்று பாருங்கள். cosmos,universe மற்றும் evolution பற்றி யெல்லாம் படிக்க படிக்க நல்ல தெளிவு வரும். Richard Dawkins, Stephen Hawkings, Carl Sagan போன்ற விஞ்ஞானிகள் எழுதிய புத்தகங்களை படியுங்கள்.
மகா மேதை Einstien ம் personal god ஐ ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடவுளை பற்றியும் அதை போதிக்கும் மதங்களை பற்றியும் தெளிவு அனைவருக்கும் வந்தால் இங்கு அன்றாடம் நடக்கும் மதச் சண்டைகளும், 'என் கடவுள்தான் பெரியவர்' என்று சொல்லிக் கொண்டு உலக அமைதியை பலி கொள்ளும் தீவிரவாதமும் நடை பெறாது. எனவே அனைவரும் தெளிவு பெற விரும்புவோம். மனிதம் நிலை பெற நம்மால் இயன்றதைச் செய்வோம். கோடானு கோடி ஆண்டுகளாய் பரிணமித்து, வளர்ச்சியுற்று நமக்குக் கிடைத்திருக்கும் பெருமை மிக்க இந்த அரிய உலக வாழ்க்கையை இனிமையாய் வாழக் கற்றுக் கொள்ளுவோம்.

Yogi said...

வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி வீரசுந்தர். மதவாதியாக இருப்பதை விட மனிதனாக இருப்பது மேல். கடவுள் இருந்தாலும் அதைத் தான் விரும்புவார்.

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி. தங்களின் விளக்கம் அருமை. நேரம் கிடைக்கும் போது அந்த இணையதளத்திற்கு சென்று பார்க்கிறேன்.

Anonymous said...

Also ANBE SIVAM thought how to love a girl ......

Since there are so many heroines (who can act well), Kamal selected a heroine who can show well.

So this movie showed how girl should show everything commercialzed....

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி

Anonymous said...

//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி//
என்ன கருத்து? அதுக்கு நன்றி வேற!?
எல்லாத்தையும் தலை வணங்கி ஏத்துக்கணும், அன்பு செலுத்தணும்னு மதம் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால், ஏற்புக்கும், அன்புக்கும் மரியாதை இருக்காது; காரணமில்லாமல் முகத்தில் உமிழ்பவன் காலில் விழுந்தால்.

சிறுமை கண்டு பொங்கணும். குறைந்த பட்சம், அந்த அறிவுகெட்ட கருத்தை அனுமதிக்காம இருக்கணும். உங்க வீட்டு சுவத்துல தேர்தல் விளம்பரம் வரைஞ்சா பொறுத்துக்கலாம். அசிங்க வாசகங்கள் எழுதினா நன்றி சொல்லக் கூடாது, செருப்பைக் கழட்டி அடிக்கணும்.

அப்படின்னு நான் நினைக்கிறேன். அம்புட்டுத்தேன்.

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி (கடைசியாகப் பின்னூட்ட்ம் போட்ட) அனானி ! ;)

நீங்கள் சொல்லவருவது எனக்குப் புரியவில்லை.

Anonymous said...

Since there are so many heroines (who can act well), Kamal selected a heroine who can show well.

So this movie showed how girl should show everything commercialzed....

Did you understand this?
Or, did I misunderstand? :(

- ka.pi.i. anony

Yogi said...

பொதுவாக சில பதிவுகளைப் படிக்காமல் பின்னூட்டம் போடுவது வழக்கம். ;) அதுபோலத்தான் இதுவும். சுட்டிக்காட்டியபின்தான் தெரிகிறது. நன்றி வாபஸ் :)

Krishna....(Bala) said...

கடவுளின் பொருள் என்னவென்று சுருங்க சொன்னால் Butterfly effect+Chaos Theory என்பது என் கருத்து ...விதி , அதிர்ஷ்டம் என்று ஏதும் இல்லை எல்லாம் Butterfly effect.... உங்களது கட்டுரையில் நீங்கள் சொல்வது மிக சரி ...நானும் அப்படிதான் சிறு வயது முதல் என் மீது திணிக்க பட்ட கடவுள் நம்பிக்கையை விடமுடியவில்லை ....அனுபவ அறிவோ கடவுள் இல்லை என்று சொல்வதையும் ஏற்றுகொள்ளாமல் இருக்க முடியவில்லை...