Thursday, December 27, 2007

'ஐ' க்குப் பதில் 'அய்' ஏன்?

'ஐ' அல்லது 'ஐ' சேர்ந்த உயிர் மெய் எழுத்துக்களை எழுதும் போது சிலர் 'ஐ'க்குப் பதில் 'அய்' என்று எழுதுகின்றனர்.

உதாரணம்
மையம் - மய்யம்

இது ஏன்? இப்படி எழுதுவது சரி என்று பள்ளியில் தமிழ் இலக்கணப் புத்தகங்களில் படித்ததாகவும் நினைவில்லை. பொதுவாக தூய தமிழில் எழுதுபவர்கள் வடமொழிஎழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதுவர் (உ-ம். ராமதாஸ் - ராமதாசு). அதைப் போல 'ஐ' என்பது தமிழ் எழுத்து என்பது மறந்து போய் வடமொழி எழுத்து என்று நினைத்து ;) இப்படி எழுதுகிறார்களா அல்லது தங்களைப் பிறரிடமிருந்து தனியே இலக்கியவாதிகளாகக் காட்டிக் கொள்ள இப்படி எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அல்லது ஏற்கனவே எதாவது இலக்கண விதிகள் இருக்கின்றனவா?

சரி இப்படியே போனால் என்னாவாகும் என்பது கீழே.

ஐஸ்வர்யா - அய்ஸ்வர்யா
ஐடியா - அய்டியா
ஐயம் - அய்யம்
பண்ணை- பண்ணய்
கலைஞர் - கலய்ஞர்

நான் யாரய்யும் குறய்சொல்லவில்லய். எனக்குப் புரியவில்லய். தயவு செய்து விளக்கவும். ;)

9 comments:

NINAIVELLAM said...

அது பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தின் பயன்படுத்தி எழுதப்படுவது

NINAIVELLAM said...

அது பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தின் பயன்படுத்தி எழுதப்படுவது

-L-L-D-a-s-u said...

இன்றுதான் இதைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன் .

தமிழில் உள்ள 'ழ'வை உச்சரிக்கமுடியவில்லையென எந்த வடமொழியும் , 'ழ' உச்சரிப்பை தன் மொழியில் கொண்டுவரவில்லை. ஆனால் 'ஜ' 'ஷ' 'ஸ்' எல்லாம் வடமொழி உச்சரிப்பை தமிழில் கொண்டுவந்துவிட்டோம் . பாடல் , சாப்பாடு , இரண்டுக்குமுள்ள உச்சரிப்பு வேறுபாடுள்ள 'கானா' போன்ற வார்த்தைகளை தமிழில் உச்சரிக்க ஏதுவாக புது வார்த்தைகளை கொண்டுவராமல் இருந்தால் சரிதான் .
ராமதாசு என்று கூறுவது , வடமொழி மறுப்பு புரிகிறது. ஆனால் இந்த 'ஐ' விடயம்தான் புரியவில்லை, உங்களைப்போலவே .

Yogi said...

தகவலுக்கு நன்றி நினைவெல்லாம்.

அது பெரியார் கொண்டுவந்த சீர்திருத்தமா? எப்படி அதைச் சரியாகப் பயன்படுத்துவது என்று விதிகள் இருக்கின்றனவா? எல்லா இடங்களிலும் 'அய்' பயன்படுத்த முடியாது என எண்ணுகிறேன். விதிகள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாஸ்.

இப்னு ஹம்துன் said...

தமிழ்ப்பெரியாரோ, சமுதாயப்பெரியாரோ யார் கொணர்ந்த சீர்திருத்தமாக இருந்தாலும் 'ஐ'க்கு மாற்றாக 'அய்' வேண்டாமே என்பது தான் என் கருத்தும்.
'ஐயா' என்பதிலிருக்கும் பொருண்மை 'அய்யா'வில் இல்லை.

மேலும் தமிழில் 'ஐ' என்றால் மெல்ல என்ற பொருளுமுண்டாம். மாட்டு வண்டிக்காரர்கள் வண்டியை நிறுத்தநேரும்போது உபயோகிக்கும் ஒலிக்குறிப்பு 'ஐ, ஐ' (தமிழ் இயல்பான மொழி).
(இச்செய்தி 'சிலம்புமடல்கள்' நாக.இளங்கோவன் ஐயாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அறிய வந்தேன்).

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இப்னு ஹம்துன்.

// 'ஐ'க்கு மாற்றாக 'அய்' வேண்டாமே என்பது தான் என் கருத்தும். //

என்னுடைய கருத்தும் அதுவே.

//'ஐயா' என்பதிலிருக்கும் பொருண்மை 'அய்யா'வில் இல்லை. //

உண்மையே!!!

Mangai said...

பெரியார் இப்படி ஒரு சீர் திருத்தம் கொண்டு வந்தாரா? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? தமிழ் உயிர் எழுத்த்ு தானே 'ஐ'.
அப்புறம் அதில் எதுக்கு சீர் திருத்தம்?

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்கை!