Thursday, December 20, 2007

ப்ளாக்கரில் other option நீக்கம் ! பதிவர்கள் மகிழ்ச்சி !

மு.கு - சன் செய்திகள் போல வாசிக்கவும்.

ப்ளாக்கரில் other option மூலம் பின்னூட்டம் இடும் முறை நீக்கப்பட்டுவிட்டது. இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பு ப்ளாக்கரில் other optionல் பின்னூட்டம் இடுபவரின் பெயரையும், அவரது வலைப்பக்க முகவரியைச் சொல்வதற்கும் (Name, Website) இரண்டு Text boxகள் இருந்தன. இதனால் போலியாகப் பலபதிவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களது பெயரில் அவர்களது வலைத்தளமுகவரியையோ அல்லது அவர்கள் profile எனப்படும் பதிவர்ர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்ட்ம் போட்டுவிட்டு அந்த பதிவர்களுக்குத் தொல்லையும் சிரமமும் கொடுத்துவந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்பதிவர்கள் எலிக்குட்டி மற்றும் புகைப்பட சோதனைகளைக் கண்டுபிடித்து உலக ப்ளாக்கர் வரலாற்றில் அழிக்கமுடியாத இடம் பிடித்தனர். இருந்தாலும் இவையெல்லாம் தெரியாத பல புதிய பதிவர்கள் அந்த அப்பாவிப் பதிவர்கள் மேல் கோபம் கொண்டிருந்து அவர்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடாமல் புறக்கணித்தும், பதிவுகளை Flag செய்தும் வந்தனர்.

இப்போது அந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் வகையிலும், தமிழ் வலைப்பதிவர்களிடையே நல்லுறவை வளர்க்கவும் ப்ளாக்கர் முடிவு செய்து other optionக்குப் பதிலாக இப்போது Nickname என்று ஒரே ஒரு text box மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் யாரும் யாருடைய வலைப்பக்க முகவரியையோ, பதிவர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்டம் போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலர் "இது எப்போதோ செய்திருக்கவேண்டியது. சில வருடங்கள் முன்பே செய்திருந்தால் சில பல ரணகளங்களைத் தவிர்த்திருக்கலாம். எப்படியோ வரவேற்கவேண்டிய ஒன்று" என்றனர். மேலும் சில அனானிகளை அனானியாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது "தங்கள் புரட்சி தொடரும்" என்றும். "Nickname, Anonymous optionகளைக் கொண்டே பலரையும் கலாய்ப்பது தொடரும்" என்றும் தெரிவித்தனர்.

பொன்வண்டு - ஃபாதர் நியூஸ்

4 comments:

Yogi said...

Test comment

புரட்சி தமிழன் said...

என்ன தம்பி பதிவ ரொம்ப லேட்டா போட்டிருக்க

TBCD said...

கண்ணா ரொம்ப தாமதம்...அதுக்கு கும்மியடிக்கிறவர்கள் சார்பா கண்டமே தெரிவிச்சு பதிவு போட்டாச்சு.. :))

Yogi said...

வாங்க புரட்சிதமிழன் & TBCD !
ஓ அப்படியா? அலுவலகத்தில் ஏகப்பட்ட ஆணிகள் இருப்பதால் தமிழ்மணத்தில் பகுதிநேரமாகத்தான் ;) வேலை செய்யமுடிகிறது. எனவே எனக்குத் தெரியவில்லை.

ஆனாலும் other option மூலமா சிண்டுமுடிஞ்சிவிடுறது கொஞ்சம் ஜாலிதான் இல்லை??? :)))))))))