ஏடிஎம் பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே பார்த்தாச்சு. அடுத்து EDC (Electornic Data Capture Machine) எனப்படும் இயந்திரம் எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போம்.
EDC என்பது வேறொன்னும்மில்லங்க. நாம கடையில் சாமான் வாங்கும் போது நமது அட்டையை ஒரு இயந்திரத்தில் தேய்க்கிறார்களே அந்த இயந்திரம் தான். இதுவும் ஏடிஎம் போல Switch -உடன் தொடர்பு கொண்டிருக்கும். நாம் அட்டையைத் தேய்த்தவுடன் தொலைபேசி ஊடகத்தின் வாயிலாக வங்கியைத் தொடர்பு கொண்டு தகவலை வாங்கித் தரும். Telephone network இந்த மாதிரியான Data Transferக்கும் பயன்படுகிறது.
இப்போ திநகரில் இருக்கும் கடைகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக ஒரு EDCயாவது இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் EDCயெல்லாம் NAC(Network Access Controller) எனப்படும் பெட்டியுடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு வங்கியும் NAC எனப்படும் பெட்டியை ஒவ்வொரு பகுதி அல்லது ஊருக்கும் வைத்திருப்பார்கள். எப்படின்னா ஒவ்வொரு NACக்கிற்கும் ஒரு தொலைபேசி எண் இருக்கும். அந்த NACக்கின் தொலைபேசி எண் EDCயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் அட்டையை EDCயில் தேய்க்கும் போது அது அந்த NACக்கினுடைய எண்ணுக்கு டயல் செய்யும். பின்னர் EDCயானது ஏடிஎம் போலவே ஒரு தகவலை(Request Message) NAC வழியாக Switchக்கு அனுப்பி வங்கியிலிருந்து தகவலைப் (Response Message) பெற்றவுடன் Charge Slip எனப்படும் ரசீதினைத் தரும்.
மேலதிகத் தகவலுக்குப் படத்தைப் பார்க்கவும்.
சரி. அடுத்து கடன் அட்டைகளை வைத்து என்ன செய்யலாம், செய்யக்கூடாதுன்னு பார்ப்போம்.
1. ஓசியில கிடைக்குதுன்னு அட்டைகளை வாங்கிக் குவிக்க வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு அட்டைகள் போதும். ஒரு அட்டையில் 20000 வரை உபயோகிக்கலாம் என்றால் இரண்டு அட்டைக்கு 40000 ஆச்சு. ஒரு மாதத்திற்கு இதற்கு மேலா தேவைப்படும்?
2. ரொம்ப முக்கியம் ஒரு கடன் அட்டையை வைத்து இன்னொன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். இது ஏன்னா நீங்கள் உங்களது கடன் அட்டையின் முன்,பின் பக்கங்களை நகல் எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் உங்கள் அட்டையின் பின்புறம் இருக்கும் CVV2வும் அதில் தெரியும். CVV2 நமக்காக Online shopping செய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ரகசிய எண். அதைப் போய் முன் பின் தெரியாத ஒருவரிடம் கொடுக்கலாமா? அந்த நபர் அதை வைத்து கோல்மால் செய்து விட்டால் கஷ்டம். அதனால் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
3. Balance Transfer தயவு செய்து வேண்டாம். சேவை வரி,Processing Fee என்று ஒரு 200, 250 பிடுங்கிவிடுவார்கள்.
4. இப்போது Verified By Visa (VBV), Mastercard Secure போன்ற பாதுகாப்பான Online shopping வழிமுறைகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. அவற்றில் பதிவு செய்து கொண்டு விட்டால் Online Shoppingக்கு ரொம்பவே பாதுகாப்பு.
5. Online Shopping செய்த பிறகோ அல்லது Onlineல் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பிறகோ மறக்காமல் Signout செய்த பிறகு இணைய உலாவியை மூடுங்கள்.
6. அதேபோல் வங்கிகள் நாம் கடன் அட்டையை உபயோகிப்பதைப் பொறுத்து Points வழங்குவார்கள். அதிகம் செலவு செய்தால் அதிக Points கிடைக்கும் என்பது உண்மை. நூறு ரூபாய்க்கு ஒரு Point என்று வைத்தால் 1000 Pointச் கிடைக்க நாம் 100000 செலவு செய்ய வேண்டும். பின்னர் அந்த Pointsக்கு ஏற்றவாறு நமது கடன் அட்டை பில்லில் தள்ளுபடி கிடைக்கும். அதாவது தள்ளுபடி 1000 ரூபாய். இந்த 1000 ரூபாய் தள்ளுபடிக்கு செலவு செய்ய வேண்டியது 100000 ரூபாய். நான் சொல்வது Cash back Credit card. சில வங்கிகள் இந்த வசதியும் தராது. அவர்கள் ஒரு லிஸ்ட் அனுப்புவார்கள். அதிலிருக்கும் பாடாவதிப் பொருளை வாங்கி நமது Pointsஐக் கழித்துக் கொள்ளலாம் என்பார்கள். எனவே Pointsக்காக செலவழிக்க வேண்டாம்.
யப்பப்பா. இப்படி பயமுறுத்துறியேங்கிறீங்களா? கடன் அட்டைகளால் நன்மைகளும் உண்டுங்க. மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் கடன் அட்டைகள். மாதக்கடைசியில் கையில் பணம் இல்லாதபோது உபயோகித்துவிட்டு பின் சம்பளம் வந்தவுடன் சுலபமாக செலுத்திவிடலாம். என்ன வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. கை அரிப்பு எடுத்தால் சொரிந்து கொள்ளவும். கடன் அட்டையை உபயோக்கிக்க வேண்டாம். :)
சரி. வங்கிகள் வாடிக்கையாளர்களை ரொம்பவே ஏமாற்றுகின்றன என்பது பொதுவாக எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டு. என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும், அப்புறம் கிரெடிட் கார்டுகளை வைத்துத் தான் நான் ஒரு வீடே கட்டிக் கொண்டிருக்கிறேன் அது எப்படி என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
(அடுத்த பதிவில் முடியும்)
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1
4 comments:
கார்டையை வைத்து தானே வீடு?கார்டால் இல்லாத வரை நல்லது.
கார்டை சொறியக்கூடவா பயண்படுத்துவார்கள்? என்னவோ போங்க.
// கார்டை சொறியக்கூடவா பயண்படுத்துவார்கள்? என்னவோ போங்க. //
குமார், கை அரிப்புன்னு நான் சொன்னது செலவு செய்யுறதங்க....
இங்கே நம்மூர்லே hot points ன்னு வங்கியிலே ஒரு எக்ஸ்ட்ரா அம்சம் இருக்கு. அதுக்கு
30$ கொடுத்து மெம்பர் ஆயிட்டோமுன்னா, நாம் கடன்அட்டை மூலம்செலவு செய்யற
தொகைக்குண்டான பாயிண்ட்கள் சேர்ந்துக்கிட்டே இருக்கு. இங்கே இருக்கும் 40 கடைகளுக்கு
எது நமக்கு வேணுமோ அதுக்கு கிஃப்ட் வவுச்சர் வாங்கிக்கலாம். ஒரு வருசம் வரை
அந்த வவுச்சர் செல்லுபடியாகும். வாங்கிவச்சுக்கிட்டு, நமக்கு வேணுங்கற சாமான்
ஸேலில் வரும்போது வாங்கிக்கலாம்.
உள்ளூர் விசேஷத்துக்கு பரிசுகள் வாங்க இது ரொம்பவே பயன்படுது. ஆனா
அந்தந்த மாசம் செலவு செஞ்சதை பாக்கி வைக்காம கட்டுறதாலே கடன் அட்டை
வசதியாகத்தான் இருக்கு.
வாங்க துளசியக்கா!
// அந்தந்த மாசம் செலவு செஞ்சதை பாக்கி வைக்காம கட்டுறதாலே கடன் அட்டை
வசதியாகத்தான் இருக்கு. //
100% சரி.
Post a Comment