Thursday, September 06, 2007

நாகர்கோவில் நண்பர்கள் - 1

நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பள்ளி, கல்லூரி நண்பர்கள் எல்லோரும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். நான் இப்பொழுது சொல்லப்போவது என்னுடைய நாகர்கோவில் நண்பர்களைப் பற்றித் தான்.


நாகர்கோவில் என்றொரு ஊர் உண்டு அங்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது நான் கல்லூரியில் முதுகலை படிக்கும்போது தான் தெரியும். விடுதியில் தங்கிப்படிக்கும் போது என் அறைத் தோழர்கள் மனோ மற்றும் மைக்கேல். இவர்கள் தமிழகத்தின் தென் கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்டக்காரர்கள். முதன் முதலில் தமிழை வித்தியாசமாகப் பேசக் கேட்டது இவர்களிடம் தான். இளங்கலை அருப்புக்கோட்டையில் படித்ததால் எல்லோரும் மதுரை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்துதான் வந்திருந்தோம். எனவே அங்கு வித்தியாசமான தமிழ் உச்சரிப்பைக் கேட்க முடியவில்லை.

நாகர்கோவில்காரர்கள் வெப்பத்தைத் தாங்கமுடியாதவர்கள். மைக்கேல் எப்போதும் நீர்யானை மாதிரி தண்ணீரில் ஊறுவான். இரண்டு முறை குளிப்பது, ஸ்டடி அவரில் பத்து தடவை பாத்ரூமுக்குப் போய் தண்ணில் விளையாண்டுட்டு வருவது அலும்புவான். கேட்டால் "ஒரே சூடு மக்கா!" என்பான். இவர்கள் தமிழை மலையாளம் கலந்து பேசுவார்கள். அநியாயத்துக்கு ஊர்ப்பெருமை பேசுவார்கள்.

இவர்களையும் வாழைப்பழத்தையும் பிரிக்க முடியாது. ஒரு நாள் கல்லூரி எதிரில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்து கொண்டு "மக்கா, இங்க என்ன பழம் கிடைக்குது? எங்க ஊருல எல்லாம் வகைவகையாக் கிடைக்கும். கேட்டியா?" என்றான். "எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாட்டுப்பழம், ரஸ்தாளி, பூவன் பழம், பச்சைப்பழம் மட்டும் தான். வாழைப்பழத்துல கூட உங்க ஊர் முன்னால இருக்காடா?"ன்னேன். "ஆமா கேளு" ன்னு ஒரு லிஸ்ட்டே சொன்னான்.

"யாத்தம்பழம்
ரசகதளி
மாவுகதளி
பாளையங்கொட்டை
செந்துளுவன்
மோரிஸ்
மட்டி
சிங்கன்
பேயன்பழம்
வெள்ளைத்துளுவன்
மொந்தம்பழம்
கற்பகவள்ளி
பூங்கதளி"


அசந்துட்டேன். "அப்புறம் இங்க கிடைக்கிற பழமெல்லாம் எங்க ஊருல நாங்க தின்னவே மாட்டோம். இப்பப்பாரு ஒரு மேஜிக். இந்தப் பழத்தோட நுனியில விரலை வச்சு அமுக்குனா பழம் மூணாப் பிரியும் பாரு"ன்னுட்டு அமுக்கிக் காட்டினான் பழம் மூன்றாகப் பிரிந்தது. "அட! வாழைப்பழத்துல இவ்வளவு விசயம் இருக்கா?"ன்னு வாயைப் பிளந்தேன். "எல்லாம் எங்க ஊருல கத்துக்கிட்டது மக்கா!"ன்னான்.

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் பெரும்பாலும் கிறித்தவர்கள் நிறைந்த பகுதி. எல்லோரும் அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரும்பாலும் ஆசிரியர் பணியிலும், அரசு வேலையிலும் இருப்பவர்கள். எனவே பிள்ளைகளின் கையில் தாராளமாகப் பணம் புரளும். எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக அசையாத சொத்து இருக்குமாம். மைக்கேல், மனோவுக்கு இரப்பர் தோட்டம் இருக்கிறதாம்.

இவர்கள் பேசும் சில தமிழ் வார்த்தைகள் நமக்கு வித்தியாசமாகத் தெரியும்.
கருக்கு - இளநீர்
தூத்துதல் - வீட்டைப் பெருக்குதல்
சவட்டீருவேன் - மிதிப்பேன்
நாசம் ஆயிரும் - வீணாகிவிடும்
தொட்டெடுத்து - பக்கத்தில்

அப்புறம் எல்லா வாக்கியத்திலும் 'கேட்டியா?' என்று கடைசியாக சேர்த்துக் கொள்வார்கள். "மக்கா! இந்த ஊர் ரொம்ப மோசம் கேட்டியா?" இப்படி. இவர்கள் ஊரிலெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே கிடையாதாம். எனக்கு ஒரே பொறாமை. இருக்காதே பின்னே. நானெல்லாம் ஒரு குடம் தண்ணீரை அடிபம்பில் அடித்து அதிலே குளித்த ஆளு.


மலையாளத் திரைப்படத்தைப் பற்றி விவரமாக அலசி ஆராய்வார்கள். நமக்கு கொட்டாவி வரும். மோகன்லாலை மிகவும் புகழ்ந்து பேசுவார்கள்.


அடுத்து இந்த மக்களிடம் முக்கியமானது இவர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சணை.


((அடுத்த பதிவில் சொல்லுறேன்))


பி.கு: நாகர்கோவில்காரங்க யாரும் சண்டைக்கு வந்துராதீங்க.. உங்க ஊரை உயர்வாத்தான் சொல்லியிருக்கேன். அப்படி எதாவது தப்பா இருந்தா அது எங்க ஊரிலெல்லாம் அந்த மாதிரி இல்லையே என்று எனக்கு வந்த பொறாமையே காரணமாயிருக்கும்.

27 comments:

ஜோ/Joe said...

//நாகர்கோவில்காரங்க யாரும் சண்டைக்கு வந்துராதீங்க.. உங்க ஊரை உயர்வாத்தான் சொல்லியிருக்கேன். //

ஹா..ஹா ..பொழச்சு போங்க !

Anonymous said...

It's amazing. all you wrote are true. you forgot one thing. they are always proudly telling they are most educated in TN. (but your observations are on young age only) FYI - me too Ngl.

Anonymous said...

"அப்புறம் இங்க கிடைக்கிற பழமெல்லாம் எங்க ஊருல நாங்க தின்னவே மாட்டோம்.

ithu sathiyamana unmai..

our family also there for some years.. so i know.. then what a important thing is... if we are from other dist. viz.nellai or madurai they would call us pondikara... ithai sollavillaiya
bex. they were in Pondi so they cld.not tell it..

Yogi said...

வருகைக்கு நன்றி ஜோ !

எல்லாம் பயம் தான் உங்கள மாதிரி ஆளுகளைப் பாத்து.. :))

Yogi said...

வருகைக்கு நன்றி பீட்டர்.

// you forgot one thing. they are always proudly telling they are most educated in TN. //

கண்டிப்பா அடுத்த பதிவில் சேத்துக்கறேன்.

Yogi said...

வருகைக்கு நன்றி அனானி.

பாண்டிகளைப் பத்தி அடுத்த பதிவில் சொல்லலாம் என இருந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க. தேங்க்ஸ் :)

ஜோ/Joe said...

//they are always proudly telling they are most educated in TN.//

'most educated' என்பது சரியல்ல .தமிழகத்தில் அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்பது உண்மை.

Anonymous said...

சரியாதான் எழுதிருக்கீங்க ..ஆங்.. கொஞ்சம் அந்த வரதட்சிணை பற்ரி எழுதுங்க...எல்லோரும் மலைச்சு போய்விடுவாங்க.. கன்யாகுமரி மாவட்டத்து காரங்களுக்கு மாப்பிள்ளைகளை விலைக்கு வாங்க தெரியும்......

ஜோ/Joe said...

பாண்டிகள் என்பது மலையாளத்தவர்கள் தமிழர்களை (குமரி மாவட்டத்தவரையும் சேர்த்து) பார்த்து சொல்லுவது .குமரி மாவட்டத்தில் கேரள எல்லையோரம் உள்ளவர்கள் வேண்டுமானால் அப்படி சொல்லலாம்.

ஜோ/Joe said...

என்னங்க இது ..என்னைத் தவிர எல்லா கமெண்டும் அனானி-யா தான் வருது ..நாகர்கோவில் காரங்க மேல இவ்வளவு பயமா மக்கா!

Yogi said...

// கொஞ்சம் அந்த வரதட்சிணை பற்ரி எழுதுங்க...எல்லோரும் மலைச்சு போய்விடுவாங்க.. //
அனானி அதுக்காகத்தான் அடுத்த பதிவே போடப் போறேன்.

Yogi said...

// பாண்டிகள் என்பது மலையாளத்தவர்கள் தமிழர்களை (குமரி மாவட்டத்தவரையும் சேர்த்து) பார்த்து சொல்லுவது .குமரி மாவட்டத்தில் கேரள எல்லையோரம் உள்ளவர்கள் வேண்டுமானால் அப்படி சொல்லலாம்.//

ஜோ ஆனா உங்க ஊர்ப்பசங்க எங்களையெல்லாம் அப்ப்டித்தான் சொல்லுவானுக :(( .. இருக்கட்டும் வச்சுக்குறேன் இன்னிக்கு ரூமுக்குப் போனவுடனே ..

Yogi said...

// என்னங்க இது ..என்னைத் தவிர எல்லா கமெண்டும் அனானி-யா தான் வருது ..நாகர்கோவில் காரங்க மேல இவ்வளவு பயமா மக்கா! //

ஜோ! மொதப் பின்னூட்டத்தைப் பார்த்தே எல்லோரும் பயந்துர்றாங்க போல ! :))

ஜோ/Joe said...

பயப்படாதீங்க மக்கா! நாகர்கோவில் காரங்க பாசக்கார பயக..நட்பானவங்க.

ஜோ/Joe said...

//யாத்தம்பழம்//

ஏத்தம்பழம்- நேந்திரம் பழம் எல்லாம் ஒண்ணு தான் .கேரளாவிலும் குமரியிலும் பிரசித்தம் .நேந்திரம் பழம் சிப்ஸ்-க்கு நாகர் கோவில் தான் (திருநெல்வேலி அல்வா போல)

Anonymous said...

//our family also there for some years.. so i know.. then what a important thing is... if we are from other dist. viz.nellai or madurai they would call us pondikara... ithai sollavillaiya
bex. they were in Pondi so they cld.not tell it.. //

But the word using by kearla 'paandi' and KK dist 'paandi kaaranga' are not the same sense or meaning. (the people those belongs to paandiya kingdom are calling pandi kaaranga)

So, don't think that we are using this word in a disagreeable way like mallus.

We are great thamil
sympathize and chauvinist (????). because we are facing mallus disagreeable words and attittueds in various ways. so we are very much tamil lovers than others.

enna konjam tharperumai athigam.

Anonymous said...

we can't differentiate the letters 'ழ' and 'ள' like other southern dists.

Anonymous said...

we can't differentiate the letters 'ழ' and 'ள' on pronouncing like other southern dists.

Yogi said...

வருகைக்கு நன்றி டெல்பின் மேடம்.

ஆமா மேடம் .. இவர்கள் கொடுக்கும் வரதட்சிணை பற்றி என் நண்பர்கள் கூறியபோது நான் மயக்கம் போடாத குறை தான்.

Yogi said...

// But the word using by kearla 'paandi' and KK dist 'paandi kaaranga' are not the same sense or meaning. (the people those belongs to paandiya kingdom are calling pandi kaaranga) //

ஆமாம் பீட்டர்.. தற்சமயம் என்னுடன் அறையில் தங்கியிருக்கும் நாகர்கோவில் நண்பனொருவன் என்னை 'பாண்டிக்காரா' என்று தான் கூப்பிடுகிறான். :))

Yogi said...

// We are great thamil
sympathize and chauvinist (????). because we are facing mallus disagreeable words and attittueds in various ways. so we are very much tamil lovers than others. //

ஆமாம்.. உங்களது தமிழ்ப் பற்றைக் குறை முடியாது .. ஆனால் .. கடந்த வருடம் என்று நினைக்கிறேன். தமிழ் இந்தியாடுடேயில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரின்(பெயர் நினைவில்லை) புத்தக விமர்சனம் வெளியாகியிருந்தது. அந்தப் புத்தகத்தில் 'அனாதை விடுதியில் தூக்கியெறியப்படும் சவலைக் குழந்தைகளைப் போல கேரளத்தாய்ச் சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டோம்' என்று மாநிலப்பிரிவினை குறித்து எழுதியிருந்தார். இது எனக்கு மிகவும் மன வருத்தம் அளித்தது. இந்தியாடுடேயும் 'இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம்' எனக் கூறியிருந்தது.

// we can't differentiate the letters 'ழ' and 'ள' like other southern dists. //

அட நீங்க வேற எனக்கு எல்லா ல,ள,ழ வுமே ஒன்னுதான் .. சொல்லும்போது எல்லாமே 'ள' தான்... :)) .. யாரும் உருப்படியாச் சொல்லிக்கொடுக்கல எங்க ஊருல.. வாத்தியாருங்களுக்கே அது ஒழுங்கா வராது என்பதே காரணம்..

Anonymous said...

//ஆமாம்.. உங்களது தமிழ்ப் பற்றைக் குறை முடியாது .. ஆனால் .. கடந்த வருடம் என்று நினைக்கிறேன். தமிழ் இந்தியாடுடேயில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரின்(பெயர் நினைவில்லை) புத்தக விமர்சனம் வெளியாகியிருந்தது. அந்தப் புத்தகத்தில் 'அனாதை விடுதியில் தூக்கியெறியப்படும் சவலைக் குழந்தைகளைப் போல கேரளத்தாய்ச் சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டோம்' என்று மாநிலப்பிரிவினை குறித்து எழுதியிருந்தார். இது எனக்கு மிகவும் மன வருத்தம் அளித்தது. இந்தியாடுடேயும் 'இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம்' எனக் கூறியிருந்தது.//

You must understand the basic thing in this regard.

At Trivancore king era it was ruled by Malayalam speaking communities. they treated tamils very bad ways. (you all may aware about those).

so, now they can't digest that.

So they are experessing those in that ways. but you can't see those in tamil speaking people thou they are the vast majority (i hope more than 95%) castes like Nadars, Meenavar, Vellalars and muslims are the majority castes there. all are tamils. only few Nairs (not even one or two percents)are still remembering those days (joyful)day with sad and helpless.

//ட நீங்க வேற எனக்கு எல்லா ல,ள,ழ வுமே ஒன்னுதான் .. சொல்லும்போது எல்லாமே 'ள' தான்... :)) .. யாரும் உருப்படியாச் சொல்லிக்கொடுக்கல எங்க ஊருல.. வாத்தியாருங்களுக்கே அது ஒழுங்கா வராது என்பதே காரணம்..//

but we have problem on 'ள' and 'ழ' only. not 'ல'//

Anonymous said...

//ஆனால் .. கடந்த வருடம் என்று நினைக்கிறேன். தமிழ் இந்தியாடுடேயில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரின்(பெயர் நினைவில்லை) புத்தக விமர்சனம் வெளியாகியிருந்தது. அந்தப் புத்தகத்தில் 'அனாதை விடுதியில் தூக்கியெறியப்படும் சவலைக் குழந்தைகளைப் போல கேரளத்தாய்ச் சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டோம்' என்று மாநிலப்பிரிவினை குறித்து எழுதியிருந்தார். இது எனக்கு மிகவும் மன வருத்தம் அளித்தது. இந்தியாடுடேயும் 'இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம்' எனக் கூறியிருந்தது.//

I am very much sure it might be written by Malayalam speaking writer.

Anonymous said...

//ஆனால் .. கடந்த வருடம் என்று நினைக்கிறேன். தமிழ் இந்தியாடுடேயில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரின்(பெயர் நினைவில்லை) புத்தக விமர்சனம் வெளியாகியிருந்தது. அந்தப் புத்தகத்தில் 'அனாதை விடுதியில் தூக்கியெறியப்படும் சவலைக் குழந்தைகளைப் போல கேரளத்தாய்ச் சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டோம்' என்று மாநிலப்பிரிவினை குறித்து எழுதியிருந்தார். இது எனக்கு மிகவும் மன வருத்தம் அளித்தது. இந்தியாடுடேயும் 'இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம்' எனக் கூறியிருந்தது.//

Sure it might be written by Malayalam speaking writter. because tamils தாய்ச் சமுதாயம் is Tamil Nadu. Not Kerala.

FYI - Majority of KK population are Tamils.

Yogi said...

வருகைக்கு நன்றி PJ.

அந்த எழுத்தாளரின் பெயரும், புத்தகத்தின் பெயரும் நினைவில்லை. :(

ஆனால் அந்த வரிகள் எனக்கு மறக்கவில்லை.

ஊர் மேல இவ்வளவு பாசமா இருக்கீங்களே எல்லோரும் .. நல்லது இப்படித்தான் எல்லோரும் இருக்கணும்.

Anonymous said...

இதன் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.... ரொம்ப நல்லா இருக்கு... நமக்கும் குமரி மாவட்டம்தான்.

Yogi said...

வருகைக்கு நன்றி அப்பாவி !

appavi.hikanyakumari.com ன்னு இருக்கும் போதே நீங்கள் கன்னியாகுமரிதான் என்று தெரிந்து கொண்டேன். :)