Saturday, April 12, 2008

சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?


Times of India ஆங்கில நாளிதழ் இப்போது தமிழகத்தில் கால் பதிக்கும் முயற்சியாக சென்னையில் ஏப்ரல் 14 அன்று தனது பதிப்பைத் துவங்குகிறது. தற்சமயம் பெங்களூரில் முன்னணி ஆங்கில நாளிதழாக இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் தடம் பதிப்பதால் முதலில் கவலை கொள்ளப்போவது தி ஹிந்துவாகத்தான் இருக்கும். ஏற்கனவே இரண்டு வருடங்கள் முன்பு Deccan Chronicle நாளிதழ் ஒரு ரூபாய்க்கு நாளிதழும், 99 ரூபாய்க்கு ஆண்டு சந்தாவும் அறிமுகச்சலுகையாக வழங்கி பெரும்பாலானோரை தன் பக்கம் இழுத்தது. படிக்கிறோமோ இல்லையோ சந்தா கட்டினால் ஒரு வருசம் கழித்து கணிசமான எடைக்கு காகிதம் சேரும் என்ற எண்ணத்துடன் சந்தா கட்டியவர்கள் பலர் என்றால் மிகையில்லை. Deccan Chronicle கொடுத்த அதிர்ச்சியில் தான் ஹிந்து நாளிதழ் தனது எழுத்துக்கள் மற்றும் வடிவத்தை உலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கை வடிவமைப்பாளர் கொண்டு மாற்றியமைத்தது.

பெங்களூரில் Times of India வை செய்திகளின் தரத்துக்காக வாங்குபவர்களை விட அதனுடன் வரும் Bangalore Times (சுருக்கமாக BT) என்ற இணைப்புக்காகவே நிறைய இளைஞர்கள் வாங்குவார்கள்(வோம்). முழுக்க முழுக்க திரைப்படத்துறை குறித்த செய்திகள் அதுவும் முழுக்க முழுக்க விருந்து, கேளிக்கை இந்தி திரைப்படச் செய்திகளே இடம்பெறும். கடைசிப்பக்கத்தில் கன்னடம் எப்பவாவது தமிழ்,தெலுங்கு,மலையாளத் திரைப்படச் செய்திகளும் இருக்கும். எனவே ஆங்கிலத்தில் படங்களுடன் தமிழ்த்திரைப்படச் செய்திகள் நிறைந்த Chennai Times இணைப்பு இருக்கும் என்பது உறுதி.

அதே நேரம் செய்திகளை நடுநிலையுடன் வெளியிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் Times of India குழுமத்தின் செய்தித் தொலைக்காட்சியான Times Now ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழக முதல்வர் பேசிய பேச்சின் ஒரு பகுதியினை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வெறுப்பேற்றியது. 'எங்கள் எலும்புகளை உடைத்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்பதை மட்டும் கன்னடர்களுக்கு வெறியேற்றும் விதமாக போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தது. முக்கியமாக கலைஞர் சொன்ன 'இந்திய இறையாண்மை கர்நாடகத்தால் கேள்விக்குறியாகிறது' என்பதை மறைத்துவிட்டார்கள். ஏன்? குற்ற உணர்ச்சியா? காரணமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது.

தற்போதைய சூழலில் உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஹிந்து நாளிதழ் நடுநிலை மறந்து தொடர்ந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதால் Times of India நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டால் வெற்றிபெறும் என்பது நிச்சயம்.

13 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்





டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு :))))

Yogi said...

ஆயில் Times of India விளம்பரம் பார்த்தீர்களா? இசை கேட்பதற்கு நல்லா இருக்கு.. :)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்
Times of India

TBCD said...

தமிழ் நாட்டுக்கு ஆதரவாக கருத்து இது வரை வந்ததே இல்லை.

இட ஒதுக்கீட்டு விவகாரத்திலும், அது பிற்படுத்தப்பட்டோர் பக்கம் இல்லை.

திரைச்செய்திகளை வைத்து இழுக்க தொடர்ந்து முயற்சி செய்வார்கள்.

பார்ப்போம், இவர்களா, மற்ற தினசரிகளின் தரம் உயரும்.... அதுவரை மகிழச்சி..

கோபிநாத் said...

வாழ்த்துக்கள்...என்ன தான் இருந்தாலும் நம்ம தொழில் இல்லையா!! (அச்சுத்தொழில்)

அரவிந்தன் said...

டைம்ஸ் ஆப் இந்தியா சென்னைக்கு வருவது உறுதியானவுடன் தி ஹிந்து வில் "சந்தை படுத்துதல் மற்றும் விற்பனை" பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ரூ 7000 முதல் 15000 வரை சம்பள உயர்வு கொடுத்துள்ளார்களாம்

அன்புடன்
அரவிந்தன்

சின்னப் பையன் said...

பத்திரிக்கை விலை என்னவோ?? மத்த எல்லாரையும் விட குறைவாக இருந்தால் நல்லது...

Thamiz Priyan said...

போட்டி வந்தால் தரமும் அதிகமாகும்னு எதிர்பார்க்கலாம்.... வரட்டும் பார்ப்போம்... :)

Thamizhan said...

வந்தோரை வாழவைக்கும் தமிழகம்!
தமிழ்,தமிழர் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களைச் சவுண்டி அடிக்கும்
இந்து,துக்ளக்,பொய்மலர் போன்றோருக்குப் போட்டி வருவது நல்லது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.இருவரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக இருப்பதுதான்
வேதனை!

Indian said...

நடுநிலைமையான செய்தியெல்லாம் டைம்ஸ்ல எதிர்பார்க்க முடியாது. அதன் வருகை சென்னையில் பணத்தை 'அள்ளி வீசும்' இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு 'க்ரிட்டிகல் மாஸை' அடைந்துவிட்டதைக் குறிக்கிறது. நேர்மையான செய்தியைத் தருகிறதோ இல்லையோ, 'Unlock Bangalore' மாதிரி சென்னையிலும் ஏதாவது ஸ்டண்ட் அடிக்கலாம். மேலும் தமிழக அரசியல்வாதிகள் சில பல 'ஸ்டிங்' செய்திகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

வஜ்ரா said...

//
நடுநிலைமையான செய்தியெல்லாம் டைம்ஸ்ல எதிர்பார்க்க முடியாது. அதன் வருகை சென்னையில் பணத்தை 'அள்ளி வீசும்' இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு 'க்ரிட்டிகல் மாஸை' அடைந்துவிட்டதைக் குறிக்கிறது.
//

ஐந்து ரூபாய் கொடுத்து ஹிந்துவையோ, நான்கு ரூபாய் கொடுத்து எக்ஸ்பிரஸ்ஸையோ, இல்லை டெக்கான் கிராணிகிளையோ படித்து தொலைப்பதற்கு டைம்ஸ் படிக்கலாம். குப்பையை குப்பைத் தொட்டியில் பார்த்த சந்தோஷமாவது கிடைக்கும்.

நரசிம்மன் ராமிடம் நடுநிலையைப் பற்றிக் கேட்டால் இப்படித் திருப்பிக் கேட்பார், "நடுநிலை என்றால் கிலோ என்ன விலை ?",அல்லது "சீனாவின் நிலையே நட்ட நடு நிலை!" என்று கூடச் சொல்லலாம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.