Wednesday, August 08, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 5


தொடர் முடிந்து திரை போடுற நேரம் வந்தாச்சு. எனவே இப்பதிவில் சில பொதுவான விசயங்களை மட்டும் சொல்லிடுறேன். போன பதிவில் என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும் பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

என்னிடம் சுமார் எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் உள்ளன. அதில் ஏபிஎன் ஆம்ரோ வங்கியின் அட்டையும் ஒன்று. அதை நான் உபயோகிப்பதில்லை. ஆனால் முதல் மாதம் பில்லில் 150 ரூபாய் செலுத்தவேண்டும் என்று போட்டிருந்தார்கள். நான் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "அது இன்சூரன்ஸ் சார். நீங்கள் கட்டுறதுன்னா கட்டலாம். இல்லைன்னா தேவையில்லை" என்றனர். எதற்கு இன்சூரன்ஸ்? அதை எதற்கு இவர்கள் பில்லில் போடுகின்றனர்? ஒருவேளை கட்டினால் எப்படி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவது? நான் எந்த இன்சூரன்ஸும் கட்டுவதாக அட்டைக்கு விண்ணப்பித்திருந்த போது குறிப்பிடவில்லையே? என நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அந்த மாதம் நான் அட்டையை உபயோகிக்காததால் நான் சுலபமாக பில்லில் அந்த 150ரூபாய் விசயத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போ ஒரு 10,15 முறை அட்டையை உபயோகித்துப் பொருள்கள் வாங்கியிருந்தால் பில்லில் அந்த 150ரூபாயை இன்சூரன்ஸை நாம் சரியாகக் கண்டுபிடிப்பது கடினம் தான். என்னைப் பொறுத்தவரை இது அந்த வங்கியின் ஏமாற்று வேலையே!

அப்புறம் நான் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையும் வைத்திருக்கிறேன். எனது சேமிப்புக் கணக்கு அந்த வங்கியில் இருந்ததால் முதலில் என் அனுமதி பெறாமலேயே எனக்கு ஒரு கடன் அட்டையை அனுப்பிவிட்டார்கள். கடுப்பில் ரொம்ப நாள் அதை உபயோகிக்காமலேயே வைத்திருந்தேன். பின்னர் சில மாதங்கள் கழித்து 1000 ரூபாய்க்கு அந்த அட்டையை உபயோகித்துப் பொருள் வாங்கினால் ஒரு வெள்ளி விளக்கு (Silver Diya) பரிசு என்று தூண்டில் போட்டனர். நானும் 1000 ரூபாய்க்கு மொபைல் ரீசார்ஜ் செய்து விட்டேன். சரியாக அடுத்த மாதம் ஒரு சிறிய வெள்ளி விளக்கு பார்சலில் அனுப்பிவிட்டனர். என்ன முதலில் படத்தில் பெரியதாகப் போட்டிருந்தனர். வந்திருந்தது அதில் கால்வாசிதான். பின்னர் ஒருதடவை பில் கட்ட மறந்துபோனதால் Late Fee என்று சுமார் 400 ரூபாய் போட்டு விட்டார்கள். தொடர்பு கொண்டு பேசியதும் Genuine Customer(?!) என்பதால் அதை விலக்கிவிட்டனர். எனது கடன் அட்டை வாழ்வில் நான் இதுவரை Late Fee கட்டியதில்லை எனற பெருமையைக் காப்பாற்றிக் கொடுத்தது அந்த வங்கி. அதற்காக நான் அந்த வங்கி நல்ல வங்கி என்று கூறவில்லை. எனது நண்பர்கள் சிலர் அந்த வங்கியைப் பற்றிக் குறைகளும் கூறுகின்றனர்.



அடுத்து HSBC, CITI, HDFC, ICICI, DEUTSCHE, ABN AMRO, STANDARD CHARTED, SBI. இந்த வங்கிகளின் கடன் அட்டைகள் அனைத்தும் நான் வைத்திருக்கிறேன். இவை போக Add-on என்ற பெயரில் வந்து சேர்ந்த அட்டைகளும் வேறு உள்ளன.அதனால் இந்த அட்டைகளை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு வீடு கட்டலாம் என முடிவு செய்து பெவிகால் மட்டும் வாங்கி அந்த அட்டைகளை ஒட்டி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு அட்டைகள் தேவை கூரை போடுவதற்கு. வீடு கட்டி முடிந்தவுடன் சொல்கிறேன். பால் காய்ச்சும் போது எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும். :)

(முற்றும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

4 comments:

வடுவூர் குமார் said...

பாலாவது(Milk) கிடைக்குமா?
சர்வீஸ் சார்ஜ் எல்லாம் கொடுக்க மாட்டோம். :-))

Yogi said...

// பாலாவது(Milk) கிடைக்குமா? //

கண்டிப்பாக .. :)

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

பொன்வண்டு அற்புதமான தொடர்! தொடர்ந்து படித்தேன், திரும்ப படித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய கேள்விகள் இருக்கு! [இதே தானே அப்பால இருந்து சொல்லிட்டுயிருக்கே கேட்டு தொலையேன்னு சொல்லுறீங்களா:)] என்ன பண்றது மண்டைல சரக்கு கொஞ்சம் கம்மி, புரியுறதுக்கு தாமதம் ஆகுது. திரும்ப வருகிறேன், கேள்வி கேட்க :-(

Yogi said...

// இதே தானே அப்பால இருந்து சொல்லிட்டுயிருக்கே கேட்டு தொலையேன்னு சொல்லுறீங்களா //

பரவாயில்லயே உங்களுக்கே தோணியிருக்கே :))